Posts

Showing posts from July, 2014

காமராசரும்,கல்விக் கொள்ளையர்களும்..

இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமை முதன்மையானது . இந்த அடிப்படை கல்வி உரிமையைப் பற்றி இப்போதுள்ள அரசுகள் கவலைபடுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

        காமராசர் முதல்வராக இருந்தபோது,அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 30% வருவாயை செலவிட்டார். அனால் 50 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இன்றைய அரசு வெறும் 14% மட்டுமே செலவிடுகிறது. 

      இலவச,அடுப்பு,கேஸ்,மிக்சி,கிரைண்டர்,இலவச மடிக்கணணி,இலவச சைக்கிள்,  ஆடு, மாடு ஆகியவைகளை கொடுப்பதால் மட்டுமே ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறிவிட முடியாது  என்பதை ஆட்சியாளர்களும், அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.  அனைவருக்கும் தரமான கல்வியை, தாய் மொழிக் கல்வியை கொடுப்பதே  ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றும் என்ற உண்மையைத்  தெரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் !

      இன்றைய கல்வியாளர்கள் யாரென்று பார்ப்போமானால, கள்ளச் சாராயம் விட்ரவர்கள் கல்லூரி அதிபரகளாக இருப்பதும்,முன்னாள் அரசியல்வாதிகள் கல்வித்  தந்தைகளாக காட்சி அளிப்பதும்,சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் கல்வி வள்ளல்களாக போற்றபடுவத…

எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது போல..

Image
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள்,விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதிஅடைந்த பொதுமக்கள்  பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன்  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.

         பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல்,  தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை  அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.

        எரிவாயு சிலிண்டர் விலையை  ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது

        போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

      இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குற…

பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

Image
இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அர…