Posts

Showing posts from April, 2014

தேர்தலில் இருக்கு நோட்டும் நோட்டாவும்..!

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயத்தின் மீது விரக்தியும், நமது வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தியையும் ஆளும் வர்க்கம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள பதினாறு பட்டன் களில் ஒன்றாக நோட்டா( NOT ABOVE THE OPTION ) இடம் பெற்று இருக்கிறது.

          ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை, வாக்கு அளிக்க விருப்பமில்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.!

        நோட்டாவுக்கு செல்லும் வாக்குகள்  செல்லாதவையாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

        மேலும் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியல் மறுதேர்தல் நடத்தபடுவதும், தற்போது வேட்பாளர்களாக உள்ளவர்களை மறுதேர்தல் நடைபெறும்போது தகுதி நீக்கமும் செய்வதுதான் சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியும் !

            அத்தகைய நடைமுறையை கடைபிடிக்க  முன்வராமல் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கு  அடுத்து அதிக வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவிக்கும் முடிவை எடுத்து உள்ளது,இது கண்டிக்க வேண்டிய…

மோடி எத்தனை முகமூடியடி!

ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு பாடல் உள்ளதைபோல இன்று மோடி எத்தனை முகமூடியடி என்று பாடவேண்டும் போலிருக்கு! 

           அத்தனை வேசங்கள் போட்டு இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் நரேந்திர மோடி இதுவரை தான் கல்யானமகதவர் என்று போட்டுவந்த வேசத்தை முதல்முதலாக கலைத்துவிட்டு, தனக்கு திருமணம் ஆனது, தனது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை,ஓய்வு பெற்றுவிட்டார். தனியாக வாழ்ந்துவருகிறார்.அவரது பெயர் ஜசோதாபென் என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.! 

இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

         தான் ஒரு பெண்ணுக்கு தாலி காட்டியதையே,தனக்கு திருமணம் நடந்ததையே,தனது மனைவி உயிருடன் இருப்பதையே, மறைத்த மோடி -இதுவரை எவை எதை மறைத்து இருப்பார் என்று இப்போது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது !

        பிரதமர் பதவிக்காக தன் மனைவியை முதன்முதலாக அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய மோசடிகாரராக, போய்யானாக இருக்க வேண்டும் தன் மனைவியையே மறைத்த மோடி, நாளைக்கு நம் நாட்டை எ…

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் ந…

கருத்துக் கணிப்பும் மக்கள் நினைப்பும்

தேர்தல் என்றாலே ஆட்சிக்கு வரும் கட்சி எது,?அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி எது?எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? எந்தவேட்பாளர் வெற்றிபெறுவார்?அல்லது எதனால் அவர் வெற்றி  பெறமாட்டார் என்று  பத்திரிகைகள், தொலைக் காட்சி ஊடகங்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், தேர்தல் கணிப்புக்கு என்ற இயங்கும் அமைப்புகள் எல்லாம் கருத்துக் கணிப்புகள்  நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

       எப்போதேனும் ,அபூர்வமாக ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துவிடுவதும் உண்டு. ஆனால், கணிப்புகள் பெரும்பாலும்  மக்கள் நினைப்பை, அவர்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.!

       காரணம், கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் வாக்களர்களில் சிறு பகுதியினரை மட்டுமே அணுகுவது, தொகுதிநிலவரம், வாக்களரின் தகுதி, கட்சியின் செல்வாக்கு,வேட்பாளர்கள்  தேர்தலில் செலவிடும் முறைகேடான கள்ளப் பணம், வாக்குக்கு கடைசி நேரத்தில் தரும் லஞ்சம், குவாட்டர், கோழி பிரியாணி,தொகுதியில் உள்ள ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பலவற்றை  கணிப்பாளர்கள் கருத்தில் கொள்ளாத  காரணங்களால் கணிப்புகள் பொய்த்துப் போகின்றன.

         பி…