இந்திய அரசியலில் கக்கதண்டங்கள்.!

         விபத்து ஒன்றில் காலை இழந்த கிராமத் தலைவர் ஒருவர் கட்டையின் உதவியோடு நடமாடிகொண்டிருந்தார். அதன் மூலம் சில அதியங்களை நிகழ்த்திக் காட்டி, நிஜக் கால்களை விட கட்டைகால்களே சிறந்தது என ஊர் மக்களை நம்பவும் வைத்துவிட்டார்.

     ஊர் மக்களும் தங்களின்  நிஜக் கால்களை பன்படுதுவதை விட்டுவிட்டு கட்டைகளின் உதவியாலேயே நடக்க தொடங்கினர். பின்னால் வந்த சந்ததியினருக்கும்  அதுவே வாடிக்கையாகவும் ஆகிவிட்டன.!


           நடைவண்டிகளுக்கு பதில், கட்டைகால்களே குழந்தைகளுக்கும் என்று ஆனது.! இதனை பார்த்த ஊருக்கு புதியவன் ஒருவன், கட்டைகால்களை விட நிஜக்கால்களே சிறந்தது என்று காட்ட விரும்பி, அந்த ஊர் மக்களிடம் தனது கால்களை வைத்து, அதிசயங்கள் நிகழ்த்திக் காட்ட விரும்பினான். துரதிஷ்டவசமாக அவன் தடுக்கி விழுந்துவிட்டான்.!

           ஊர் மக்களும் பார்த்தாயா? நிஜக் கால்களை விட கட்டைகால்களே மேலானவை!  என்று சிரித்தனர்.

        இறையன்பு  ஐ.எ.எஸ். அவர்கள் தனது உள்ளொளிப் பயணம் என்ற நூலில் "கக்கதண்டங்கள்" என்ற தலைப்பில் இதனைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார்.

    கட்டுரையை படித்தபோது, இந்திய அரசியலிலும் இதுபோன்ற கக்க தண்டங்கள் ஏராளமாய் இருப்பது நினைவுக்கு வந்தது!
   (காலில்லாத முடவர்கள்  நடப்பதற்கு உதவும் கட்டைகளை "கக்கதண்டங்கள்"  என்பார்கள், )

          அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி  கட்சிகள் தொடங்கியவர்கள்.. தங்களது சுயநலத்தால், தவறுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.!

         தங்களது சுயமான  கொள்கைகளை பின்பற்றுவதை,நிறைவேற்றவதை விட்டுவிட்டு, அதிகாரத்திற்காக  பதவி வெறியுடன்   கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.!

        இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று கக்கதண்டங்களாக மாறிவிட்டன  !  இது  அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துக்கு செய்து வரும் மிகப்பெரிய தீங்காகும்.!

         தங்களை,தங்களது கொள்கைகளை ஏற்று கொண்டுள்ள தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் துரோகமாகும்.!

       பொது மக்கள் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து வருவதற்கு இந்த கக்கதண்டக்  கூட்டுகளும், கொள்கையற்ற கட்சிகளின் இதுபோன்ற செயல்களுமே காரணம் எனலாம்!
 
           ஜனநாயகத்தில் அதிக மக்களின் ஆதரவை,வாக்குகளை தனியாக பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள கட்சிகள்தான் தேர்தலுக்கு தேர்தல், கட்சிகள்  மாறி, வெங்கங்கெட்டு  கக்கதண்டங்களாக இருக்கின்றன என்றால், அறுதி பெரும்பான்மையுள்ள, வாக்கு வங்கி உள்ள சமூகங்களும் கூட இன்று வரை கக்க தண்டங்களாகவே தேர்தலை ச்நதித்து வருகின்றன!

       இந்தியாவிலேயே அதிக அளவு வாக்கு வங்கி உள்ள தாழ்த்தப்பட்ட சமூகம் இன்றுவரை தங்களது வலிமையை சோதிக்காமல் உள்ளதும்,அது பிறகட்சிகளுக்கு கக்கதண்டங்கள் ஆகி புகலிடம் அளிப்பதும்  பிற கட்சிகளிடம் இருந்து  ஒன்றிரண்டு சீட்டுக்கே அவைகள் போராடுவதும்  நடந்துவருகிறது.!     சிறுபான்மை சமூகம் என்று இந்தியாவில் சொல்லப்படும் முஸ்லீம் சமூகத்தின் வாக்குவங்கியும்  பிற கட்சிகளுக்கு கக்க தண்டமாக்கப் பட்டு, பிற கட்சிகளிடம் பிச்சை கேட்கும் நிலையிலேயே  இந்தியாவில் இருந்து வருகின்றது

       ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூகங்களை, முஸ்லிம்கள் தொப்புள் கோடி உறவுகள் என்று சொல்வதை கேட்டு இருக்கிறேன்.!   தேர்தல் சமயத்தில் இந்த இரண்டு சமூகங்களும் ஒன்று இணைந்து, பிற கட்சிகளிடம் பிச்சை எடுக்க மாட்டோம்,  "கக்கதண்டங்களாக இருக்க மாட்டோம்" என்று  உறுதிகொண்டு செயல்பட்டால்தான்   "தொப்புள் கோடி உறவுகள்" என்ற சொல்லாடலுக்கு பொருள் இருக்கும்!  இவ்விரு சமூகங்களின் உறவு இறுக்கமும், சமூகங்களின் வலிமையும் தெரிய வரும்.! 

         அதுவரையில், நிஜக் கால்கள்  இருந்தும், அந்த கால்களைப்  பயன்படுத்த முன்வாராத கிராமத்தினர்  நிலைதான்  தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையின சமூகங்களின் நிலையும் என்பதே உண்மையாகும்.!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?