தேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.!

        நமது தலைவர்கள் தேசத்தைப் பற்றி,மக்களைப் பற்றி கவலைப்படுவதை எப்போதோ விட்டுவிட்டார்கள்.. இப்போது அவர்களது கவலை எல்லாம் தேர்தலைப் பற்றிதான்!

       இந்த தேர்தல் எதற்காக? ஆட்சியை பிடிக்கவும்,அதிகாரத்தைக் கைப்பற்றவும் உதவும்  பாதையாக  தலைவர்கள் நினைகிறார்கள்!  ஆட்சியைப் பிடித்து, அதிகாரத்தைப் பெற்று  என்ன செய்யப் போகிறார்கள்?

        இனி செய்வது இருக்கட்டும்! இதுவரை இந்திய பாராளுமன்றத்திற்கு 15 முறை தேர்தல் நடந்து இருக்கிறது. ஆட்சியை,அதிகாரத்தை பெற்றவர்கள் செய்தது என்ன? யோசித்துப் பார்த்தால், ஒன்றுமே  நடைபெறவில்லை! 

         இந்தியாவின் பொது சுகாதாரம்,மருத்துவம்,கல்வி வசதி,பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம்,அடிப்படை வசதிகள், விவசாயம், வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் மேம்பாடு, ஆகியவற்றை செய்வதாக கூறியும் அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதாக சொல்லியும் உலக வங்கியில்,பன்னாட்டு நிதியத்தில் பல லட்சம் கோடிகள்  கடன் வாங்கி இருகிறார்கள். இந்த கடனுக்கு வட்டியாக பல்லாயிரம் கொடிகளை கட்டும்படி செய்து இருகிறார்கள்.!

       ஆனால், வாங்கிய கடனை முறையாக செலவு செய்யாமல், இந்திய மக்களின் நலத்தை பார்க்காமல், இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி கவலை கொள்ளாமல்  தங்களது நலத்தை பார்த்துக் கொண்டார்கள். தங்களை வளமாக்கி  கொண்டார்கள்!

         விளைவு? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன  கதையாக  இந்தியாவின் நிலைமை  மாறி விட்டது.  இருக்கிற விவசாயம், வேலைவாய்ப்புகள் பறி போகின்றன. சுற்றுசூழல்,சுகாதாரம் கேள்விகுறி ஆகிவிட்டது. இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. வனங்கள், இரும்பு வளம், கனிமம்,நிலக்கரி எல்லாம் கொள்ளை போகிறது. தண்ணீரும், ஆறுகளும்  கூட தனியார் மயமாகி விட்டன. குடிக்க தண்ணீர் இன்றியும்,உண்ண  உணவு இன்றியும், தவிக்கும்  நிலைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர் !

     ஏழ்மையும் வறுமையும் இந்தியாவில் நிரந்தரமாகி விட்டது. கண்ணீர் சிந்துவோரும் செந்நீர் சிந்துவோரும் அதிகரித்து வருகின்றனர்.

    ஆனாலும், ஆட்சி வேண்டும்,அதிகாரம் வேண்டும் என்று நமது  தலைவர்கள் ஆளாக பறக்கின்றனர்   நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு  என தொடர்கின்றனர்.   லஞ்சம்,ஊழல் தவிர்க்க முடியாதவை என்று  வெட்கமே இன்றி,கொஞ்சமும் கூசாது புதிய விளக்கம் சொல்கின்றனர்.
   
      மக்கள் நலம்,தேசநலம் என்ற உயரிய சேவைக்காக பொதுவாழ்க்கைக்கு வரவேண்டிய,அரசியலில் நீடிக்க வேண்டிய தலைவர்கள் இன்று இவைகளை மறந்து விட்டு,ஊழல் செய்யவும், ஊழல் செயது  சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றவும், தேர்தலை பயன்படுத்துகின்றனர்! ஆட்சியை,அதிகாரத்தைப் பெற துடிகின்றனர்.
    
     தேசத்தைப் பற்றி கவலைபடாத இந்த தலைவர்களை என்ன செய்வது? இவர்களை நம்பும் மக்களை யார்தான் காப்பது? தெரியவில்லை.!


Comments

  1. யாரை குறை சொல்கிறீக்ள்.. யாரை தேர்தெடுக்கலாம் என்பதை சொல்லவில்லையே..பொதுவாக நமது தலைவர்கள் என்றால்...

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?