அய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும்..

      அய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும் போடுங்க..!   இப்படி உங்கள் வீடுகளின் முன்பு குரல் கேட்டால்,  எதோ பிச்சைகாரன் குரல் குடுக்கிறான் என்பது நமக்கு தெரியும்  இன்னும் இரண்டு மாதங்களுக்கு இப்படி குரல் கேட்டால்  பிச்சைகாரர்கள்  என்று உறுதியாக சொல்ல  முடியாது.!

        காரணம், உங்களுக்கு தெரியும்.!  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பிச்சைக் காரர்கள் எண்ணிக்கை ஆதிகரித்து இருப்பது  நமது தலைவர்களின் சாதனையாக இருப்பதுபோல,   அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து  இருப்பதும் சோதனையான சாதனைதான்.!

       இந்த அரசியல் பிச்சிகளும்  வழக்கமான பிச்சைகாரர்களைப் போல  எப்போதும் ஏழைகளாக இருக்கும் இந்திய மக்களின் வாக்குகளைக் கேட்டு வலம் வரப் போகிறார்கள்.!

   கோடிசுவரர்களுக்கும்,கொள்ளையர்களுக்கும்  வாக்குகள் என்னும் வரத்தை ஏழைகளாக இருக்கும் மக்கள் ஒருநாள் வள்ளலாக மாறி  வழங்கப் போகிறார்கள்.!  வாக்குகள் என்னும் வரத்தை தந்துவிட்டு வழக்கம்போல வறுமையை ஏற்றுக் கொள்ள போகிறார்கள்.! 

         பிச்சையாக பெற்ற வாக்குகளை வரமாக வாங்கியவர்கள்  மேலும் தங்களது  செல்வாக்கையும், செல்வதையும் வளர்த்துக் கொள்ள போகிறார்கள். இதுதான் இந்திய தேர்தல் ஜனநாயகமாக இன்றுவரை இருக்கிறது.!

       இதனை எப்படி மக்களுக்கான தேர்தலாகவும்,உண்மையான மக்களாட்சி மலர  செய்யும் ஜனநாயகமாகவும்  ஏற்க இயலும்?

      தேர்தலுக்காக கட்சிகள் தரும் தேர்தல் வாக்குறுதிகள் யாவும்   தேர்தலுக்கு பிறகு  செயல்படுத்தப்  படுவது  இல்லை.!  பொதுவாக மக்களும் அதனை நினைவில் வைத்து  ஏன் செய்ய வில்லை என்று கேட்பதும் இல்லை ! இந்நிலை மாறவேண்டும்.! 

      கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியுடைய, மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளையும், ஜனநாயகத்தை, நாட்டின் முன்னேற்றத்தை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட, மதம்,  சாதி என்று மக்களைக் கூறு போடாத,  இந்தியாவின் இறையாண்மை, அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள வேட்பாளர்களை,அவர்கள் எந்த சாதி, எந்த மதம், எந்த அரசியல் கட்சி என்று பார்க்காமல் வாக்களிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். !

      வாக்குகளுக்கு பணம் தருபவர்கள் நிச்சயம் நல்ல வேட்பாளர்களாக, ஜனநாயகவாதிகளாக செயல்படமாட்டார்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களை  ஒதுக்கிவிட்டு நமது வாக்குகளை அளிக்கும் எண்ணம் பொதுமக்களுக்கு வந்தால்தான்  தேர்தலும்,நாடாளுமன்ற ஜனநாயகமும் அர்த்தம் உள்ளதாக அமையும். பொதுமக்கள் மாற்றத்தை முதலில் தங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஜனநாயகம் சிறக்க அதுவொன்றே சிறந்த வழியாகும்.! செய்வார்களா?


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?