இந்தியாவுக்கு வந்த சோதனை..!

        பட்ட காலிலேயே படும் கேட்ட குடியே கெடும் என்று பழமொழியைபோல இந்தியாவுக்கு இன்னொரு சோதனையாக நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது.
இதுவரை 15-முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து இருக்கிறது. இப்போதைய தேர்தல் 16-வது நாடாளுமன்ற தேர்தல்.

         முந்தைய தேர்தலைவிட நடைபெறும் தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்க உள்ளனர். இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக் இருகிறார்கள்.!

         இவர்கள்  ஹை -டெக் வாக்காளர்கள். மாற்றத்தை விரும்புபவர்கள். அறிவுபூர்வமாக சிந்திக்க கூடியவர்கள்.உண்மையிலேயே இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். ஊழல், முறைகேடு, லஞ்சம், விலைவாசி உயர்வு,  அரசியல்வாதிகள், தலைவர்களின் இலட்சணம் ஆகியவைகளை  பற்றிய மதிப்பீடுகளை கொண்டுள்ளவர்கள்.!

           புதிய வாக்களார்களான 10 கோடி வாக்காளர்களை கவரவும்,அவர்களின் கவனத்தை கவரவும் இன்று பாரம்பரிய, பழமைப் பஞ்சாங்க அரசியல்  வாதிகளும் கட்சிகளும் கூட முகநூல்,டுவிட்டர் என்று  இணைய வழி ஊடகங்களின் உதவியை நாடுகின்றனர்.!

        எனவே, இணையங்களிலும்,வலைதளங்களிலும்   அரசியல் வாடை,சர்ச்சைகள், தேர்தல் பிரசாரம், கருத்து  மோதல்கள்  போன்றவைகள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

          இது இந்திய ஜனநாயகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்,புதிய வாக்களர்களை எந்த அளவு வசீகரிக்கும் என்று தெரியவில்லை.!

         இது ஒருபுறம் இருக்க, நமது நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்கவே அவதாரம் எடுத்துள்ள தலைவர்கள் பலரும் அடிதடி,குத்துவெட்டு, கலக்கல்,கவிழ்த்தல்,பொய்யுரைகள், புழுதிவாரி தூற்றல்கள், வாயெல்லாம் வாக்குறுதி, நெஞ்செல்லாம் பதவி கனவு  என்று பலப்பல காட்சிகளுடன் தங்களது  ஜனநாயகக் கடமையை நடத்த இருகிறார்கள்.

      நடைபெறப் போகும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரலாறு காணாத வகையில் நடக்கும் தேர்தல் மட்டுமல்ல. வரலாறு காணாத ஜனநாயகச் சீர்குலைவு மட்டுமல்ல.... இந்தியாவுக்கு வந்துள்ள இன்னொரு சோதனையும் ஆகும்.!
Comments

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?