தமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் !

        "இறந்தவர்களுக்கு நீதி வேண்டும்" என  தற்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காங்கிரசார். கேட்கிறார்கள்.காங்கிரஸார் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நீதி வழங்கி இருகிறார்களா? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!  

        (1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கேப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர்,
         தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்து ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல், 1990 --க்கு முன்னரே தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்!  தமிழ் ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தவர்,தமிழினத்திற்கு  விரோதியாக செயல்பட்டவர் ராஜிவ்காந்தி!

      (2) தியாக தீபம், திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணா நோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.

      (3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர். 13 புலித்தலைவர்கள் தற்கொலைக்கு காரணமானவர் ராஜீவ்காந்தி.!

      (4) ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000.பேர்கள்.
அதற்கு  பொறுப்பு ஏற்க வேண்டிய  இந்திய பிரதமர்   ராஜீவ் காந்தி. காங்கிரஸ்காரர்கள் நீதி வழங்கினார்களா?


     (5) ராஜிவின் கொலைவெறி, காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை, சுமார் 2000கு மேல்.
அதற்கு காரணம் ராஜீவ். காங்கிரசின் தமிழர்களுக்கான நீதி இதுதானா? 


     (6) இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல். என்ன நிவாரணம் வழங்கப்பட்டது.?காங்கிரசார் பதில் சொல்வார்களா?

    (7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  (ஏதிலிகளாக)  அகதிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேருக்கு மேல். தமிழர்களை அனாதைகளாக ஆக்கியவர் ராஜீவ் காந்தி.!

    (8) இந்திய அமைதிப் படையால் அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் எறிகணைகளாலும், கை கால்களை, கண்களை, செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000கு மேல். அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்.! 

   
   தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், கற்பழிக்கப்பட்ட எங்கள் தமிழ் சகோதரிகளுக்கும்  காங்கிரஸ் நீதி வழங்கவில்லை.!இத்தனை கொடூரங்களுக்கும், படுகொலைகளுக்கும் செய்யக் காரணமான ராஜீவுக்கு நீதி  கேட்கிறார்கள். ! 

      இலங்கையில் இன்னும் தொடரும் அவலங்களுக்கு இந்தியா காரணம். இன்றும் தமிழர்கள் சிங்களப்படையால்  கொல்லபடுகின்றனர். சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர்.!

      காங்கிரசார் தமிழர்களுக்கு  நீதிவழங்கவில்லை. காரணமாக இருந்து அநீதி இழைத்த  ராஜீவுக்கு நீதிகேட்பது   எவ்வளவு பெரிய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.! 
 

Comments

 1. இந்த செய்தி நிறையே பேருக்கு சென்றடைய வேண்டும் என்பதால், முகநூளில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் பெயரையும் Blog முகவரியையும் சேர்த்து.

  தவறென்றால் நீக்கி விடுவேன்

  ReplyDelete
 2. நல்ல விஷயம் தானே? செய்யுங்கள் உண்மையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி!

  ReplyDelete
 3. Were you all in a cave till now?

  Why did Tamilians keep on voting for Congress all these years,if they did this much cruelty?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவலை புரிகிறது. காங்கிரஸ்,பி.ஜே.பி என்றே ஏன் சிந்திக்க வேண்டும்? ஒவ்வொரு தொகுதியிலும் நிர்ப்பவர்களில் யார் நல்லவர்,மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்று பார்த்து (அவர் சுயேட்சையாக இருந்தாலும்,)வாக்களிக்க நினைக்க வேண்டும். வாக்குகளை நாம் இவ்வாறு பயன்படுத்தினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும். இந்திய அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படும். இது,அல்லது அது என்ற ஆட்டுமந்தை குணம் மாறவேண்டும் .

   Delete
 4. இன்னும் ஏராள தமிழர்களின் உயிர்களைக் காவு கேட்கிறது ராஜீவ் ஆன்மா [இந்தியாவின் ஆன்மா!!!].

  காவு கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் அது சாந்தியடையுமாம்!!!

  ReplyDelete
 5. ஒரு நாள் எல்லாம் மாறும்! பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 6. Yes LTTE are saviours...they were kid who will not know to bite the finger even if you keep it inside their mouth. You need to understand. It is the fault of LTTE which lead to WAR after peace accord..they were illegally smuggling weapons

  ReplyDelete
  Replies
  1. தமிழில்தானே படித்தீர்கள் தமிழில் எழுதுங்கள்.! இதுகூடத் தெரியாத வாயில் விரல் வைத்தால் கடிக்காத குழந்தையா நீங்கள்?!
   பெரிய போராட்டத்தில் ரகசியமாக ஆயுதங்களை கொண்டுவராமல், எல்லோருக்கும் விளம்பரப்படுத்தியா கொண்டுவருவார்கள்? போங்க சார் காமடி பண்ணாதீர்கள்!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?