ராமதாசின் (சொ)நொந்த மனம்..

          எந்த திராவிட கட்சிகளுடன் தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபேற்றாரோ அந்த திராவிடக் கட்சிகளை சனியன்கள் என்று மருத்துவர் ராமதாஸ் சாடி உள்ளதுடன்,இந்த கட்சிகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

          சமூக நீதிக்கு குரல்கொடுத்த ராமதாஸ்,  தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் எண்ணங்களுக்கு எதிராக இன்று நடந்து கொள்வதை காலத்தின் கோலம் என்பதா? வாக்கு வங்கி அரசியலுக்காக வழிதவறி போனவர் என்பதா? தெரியவில்லை.!


      தமிழ்குடிதாங்கி என்று தோல்.திருமா அவர்களால் அழைக்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற திராவிடரான,  மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று ஆரிய,பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியாகி,ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படத் தொடக்கி இருக்கிறார்.

     சாதிகளை ஒழிக்கவும்,சாதிகள் அற்ற தமிழ் தேசியத்தைக் கட்டியமைக்கவும் வேண்டிய மிகப்பெரிய சமுதாயக் கடமையை மறந்துவிட்டு, புறக்கணித்து விட்டு, சாதியத்தை முனைப்புடன் தூக்கி நிறுத்தவும்,சாதிய கட்சிகளின் தயவுடன் ஆட்சி அதிகாரத்தை பெறவும்  ராமதாசின் (சொ)நொந்த மனம் இன்று துடிக்கிறது. தவியாய் தவிக்கிறது.!

       இத்தனைக்கும் ராமதாஸ் திராவிடர்களான,தமிழர்களை ஆளவும், தமிழகத்தை ஆளவும் துடிப்பது  அப்பட்டமாக  தெரிகிறது.!
 

          கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல தமிழினத்தை சிதைத்தும்,  தமிழின ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தும், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை  தமிழகத்தில் கொண்டுவர  ஒருபுறம் கூட்டணி பேரம் பேசியபடி, கூட்டணியில் தனக்கு அதிக சீட்டும்,நோட்டும் கிடைக்க வேண்டுமே என்ற பதைபதைப்புடன்,சமுதாய கூட்டணியை அமைத்து, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போவதாக ராமதாஸ் அவர்கள் கூறுகிறார்.!

        நாம் என்ன சொன்னாலும்மக்கள்   நம்பிவிடுவார்கள், மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்  என்ற எண்ணத்தில் ராமதாஸ் அவர்கள் நடந்து கொள்வது  தெரிகிறது.

        முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பார்.  தேர்தலில் போட்டியிட இவர் முஸ்லிம்களுக்கு வாய்பளிக்க மாட்டார். கட்சியிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.!

       பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல்கொடுப்பார். போராட்டம் நடத்துவார். ஆனால் இவரது கட்சியில் பெண்களை போட்டியிட அனுமதிக்க மாட்டார்.!


         ஒரு தலித்தைதான் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்குவேன் என்று பேசுவார். தலித்துகள் பொருளாதாரத்தை,அடிப்படை உரிமைகளை மனுதர்ம வழியில் அழிக்கவும், ஒடுக்கவும்  செயல்படுவார்.!

        சினிமாவை வெறுக்கும் சினிமாகாரர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் ராமதாஸ், அரசியலையே சினிமாவாக நினைத்து நாளொருவேசம் பொழுதொரு நடிப்பை வெளிபடுத்தி வரும் நடிகராவார்.!

      தமிழ் பழமொழி ஒன்று,படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுதாகும். ராமதாசின் செயல்கள் அனைத்தும் அந்த ரகமாக இருக்கிறது.!
தமிழகத்தை பீடித்துள்ள எத்தனையோ பயங்கர நோய்களில் இவரையும் சேர்க்க வேண்டும்.!


Comments

 1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றை டாக்டர் பற்றிகொண்டால் ஓசூர் ராஜனுக்கு மனம் அமைதியடையும்.

  ReplyDelete
  Replies
  1. அப்போதும் மனம் அமைதி அடையாது. கூட்டணி வைப்பதற்கு முன்பே பி.ஜே.பி-இடம் ஆட்சி அமைத்தால் அன்புமணிக்கு மருத்துவத்துறையை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனைபோட்டு இருகிறாராம். தேர்தல் செலவுக்கு பணமும் கேட்டுள்ளார். விரும்பும் தொகுதிகள் வேண்டும் என்கிறார். இதையெல்லாம் பகிரங்கமாக மக்களுக்கு சொல்லமாட்டார்.

   Delete
 2. எப்போதும் மருத்துவர் ராமதாசை ஏசும் கூட்டம் ஒரு காலத்தில் சந்தர்ப்ப அரசியல்வாதி என்றது இப்போது சாதி அரசியல்வாதி என்கிறது என்னடா உங்களுக்கு எப்படியாவது அவல் மென்றுகொண்டே இருக்கவேண்டும் அதானே.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ராமதாசுக்கு வக்காலத்து வாங்க காரணங்களை சொன்னால் நன்றாக இருக்கும்!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?