தேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..!

         நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி விட்டது. எப்படியாவது இந்தமுறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமே என்று காங்கிரசும்,இந்தமுறையும் கோட்டை விடக் கூடாது என்று பி.ஜே.பி-யும் ஆளாய் பார்க்கின்றன. கொள்கை,லட்சியம், எல்லாவற்றையும் ஏறக் கட்டிவிட்டு முரண்பட்டு நிற்கும் அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க பேரம் பேசுகின்றன.

        கூடாத நட்பாயினும் கூட்டணியில் அதிக சீட்டுகளைபெறவும்,கேட்ட தொகுதிகளை பெறவும் துடிக்கும் மாநில கட்சிகளும்,சாத்திய அமைப்புகளும், தங்கள் பலத்தை காட்டுவதற்கு மாநாடுகளை பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை போட்டு மக்களை திரட்டி காட்டுகின்றன.


         இந்தியா எங்கும் நடக்கும் இத்தகைய கூத்துக்கள் தேர்தல் என்பதை திருவிழாக் கொண்டாட்டமாக எண்ணி செயல்படும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அடையாளம் காட்டுகின்றன.!

          இவைகளில் இருந்து பொதுவான ஒரு விஷயம் நமக்குத் தெரிகிறது. எந்தக்கட்சிக்கும் தனது கொள்கைகளை சொல்லி,நியாயமான வாக்குறுதிகளை சொல்லி, பொதுமக்களிடம் தனித்து நின்று வாக்கு கேட்கும் தைரியம் இல்லை.


        மக்களுக்கு இந்த கட்சிகளின் யோக்கியதை  ஏற்கனவே தெரிந்து இருப்பதால், மக்கள் தங்களை புறக்கணித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லா கட்சிகளுக்கும் இருப்பது தெரிகிறது.!

        மேலும் இக்கட்சிகள் அனைத்தும் மக்களை கடந்த காலத்தில் ஏமாற்றி வந்ததால் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதும் தெரிகிறது. அதனாலேயே. தனித்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க முடியாமல் கூட்டணி என்ற பெயரில் கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டு வைக்க கொஞ்சமும் வெட்கமின்றி நடந்து கொள்கின்றன.!

        இவைகளைப் பார்க்கும்போது  ஒட்டுக்காகவும், எம்.பி.சீட்டுக்காகவும், ஆட்சி அதிகாரத்துக்காவும் ஆளை பறப்பது நாட்டை காப்பாற்றவும்,நாட்டு மக்களை முன்னேற்றவும் இல்லை என்பது தெரிகிறது.!


            கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து கொள்ளையும் ஊழலும், முறைகேடுகளும் செய்ய நடக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலால்  நாட்டின் பொருளாதாரம் மேலும் வீணாகிறது என்பதும் மக்கள் மேலும் திண்டாடப் போகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.!

      மோசமான அரசியல் கட்சியின் மோசமான நபர்களை,மோசடியாக தேர்ந்தெடுக்கும் இந்திய தேர்தலைப் பார்த்தால் என்ன தேர்தலோ,என்ன ஜனநாயகமோ, என்று கத்தலாம் போல் இருக்கிறது.!


Comments

  1. உண்மைதான். தவறு மக்களிடமும் இருக்கிறது. கொள்கை, நேர்மை என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை. யாருக்கு அதிகக் கூட்டம் வருகிறது என்று பார்க்கிறார்கள்.

    ஓட்டளிக்க பணம் வாங்கிவிட்டு, பிறகு //சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ// என்று பலபேர் பாடுகிறார்கள்.

    கே. கோபாலன்

    ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?