Posts

Showing posts from February, 2014

மோடி ஆட்சிக்கு வந்தால்...

சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்கிறார். அவர் கேட்பதுபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள்,இதர சிறுபான்மையினர் வாக்களித்து மோடி பிரதமர் ஆனால் என்ன நடக்கும்?

          இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை கேள்விக்குறியாக ஆகிவிடும்! இந்துத்துவவாதிகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும் அபாயம் ஏற்படும்.!

      இந்திய அரசியல் சட்டத்திற்கு மட்டுமா, ஆபத்து?  சிறுபான்மை சமூகங்கள் இந்தியாவில் வாழ்வதற்கே  இயலாத நிலை ஏற்படும்.!  சிறுபான்மை சமூகங்களின்  வாழ்வாதாரங்கள் சட்டப்படியே பறிக்கும் செயலில்  பாசிச இந்துக்கள் முயல்வார்கள்.!

          மோடி ஆட்சிக்கு வந்தால்..அரசின் அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்படும். தங்கள் விருப்பம்போல வரலாற்றை திருத்துவார்கள்! கோட்சேவை தியாகியாகவும் காந்தியை துரோகியாகவும் கட்டுவார்கள்!

        இந்து மத ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் வரிப்பணம்   ஆர்.எஸ்.எஸ். கைகாட்டும் அமைப்புகளுக்கும் ஆட்களுக்கும் கோடிகணக்கில் ஒதுக்கப்படும்.! அதைப்பற்றி  எவனும் கேள்வி கேட்க முடியாது.…

ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பு..

Image
முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்’  பாரதிய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த ஒருமுறை எங்களுக்கு நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள்.  என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்  வேண்டுகோள் விடுத்துள்ளார் 

          எப்போதாவது எங்கேயாவது இவர்கள்  சார்பில் முஸ்லிம் சமுதாயத்துக்கு  இவர்களால் நன்மை விளைந்திருக்கிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது.!         நரேந்திரமோடி குஜராத்தில் ஒரு முஸ்லிமுக்கு சட்டமன்ற சீட் கொடுத்து வெற்றிபெற செய்துள்ளாரா? குஜராத்தில் சிறப்பான்மையினருக்கு எதிரான 4000 வன்முறை வழக்குகளை மோடியின் அரசு முடித்துகொண்டது  ராஜ்நாத் சிங்குக்கு தெரியாதா? முஸ்லிம்களுக்கு இவர்களது அவதார புருஷன்," நமோ" செய்த நன்மைகள் என்னவென்று  கூற முடியுமா?        பெஸ்ட் பேக்கரி வழக்கில் சாட்சியங்களுக்கு நெருக்கடி கொடுத்து 14 குற்றவாளிகள…

மோடியின் மோசடிகளும் முறைகேடுகளும்..

Image
மோடியின் மோசடிகளையும்  முறைகேடுகளையும்  மூடி மறைத்து அவைகளையே   இன்று   சாதனைகளாக  கார்பரேட் கம்பனிகள், ஊடகங்கள் மக்களிடம்  காட்டுகின்றன.. அப்பாவி விவசாயிகள், குஜராத் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்பரேட் முதலாளிகளை வாழ்விக்க மோடி செய்த முறைகேடுகள் ஏராளமாகும்.!

       மோடியின் கார்பரேட் கம்பனிகள் மீதான தாராள குணத்தையும், மோடியால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் சிலவற்றையும் பார்க்கலாம்.


           குஜராத் உஜ்ரா விகாஸ் நிகமுடன் கார்பரேட்குழுமத்தின் அதானி பவர் லிட்  உடன்படிக்கை செய்திருந்தது.  உடன்படிக்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதானி குழுமத்திற்கு ரூ  240.08 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ  80.08  கொடிகளை மட்டும் அதானிக் குழுமத்திடம் பெற்றுக்கொண்டு, ரூ 160 கோடியை செலுத்த அக்கம்பனிக்கு விலக்கு  அளிக்கப்பட்டது.

      இதே.. அதானி நிறுவனதுக்கு சதுர மீட்டர் ரூ 1500 சந்தை மதிப்புள்ள குஜராத்தின் கடற்கரை பகுதி விலை நிலங்கள் சதுர மீட்டர் ரூ 1 முதல் 32 வரை சலுகை விலையில்  தொழில்  வளர்ச்சி மற்றும் துறைமுக அபிவிருத்திக்கு என்று மோடி அரசால் வழங்கப்பட்டன.மோடி அரசால் சலுகை…

குஜராத்தின் உண்மை நிலை.!

Image
மோடியின் பொய்களுக்கு அளவே இல்லை. மோடியின் குஜராத் வளர்ச்சி பற்றி ஊடகங்கள்  இந்துத்துவ கண்ணாடி போட்டுகொண்டு உண்மையை மறைத்து பொய்களை விதைத்து வருகின்றன. காரணம் அவைகள் இந்துத்துவ பாசிட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்கின்றன என்பதற்கு  அருந்ததி ராய்  அவர்களது கேள்வியே சான்றாக உள்ளதை அறியலாம்.!

மோடியின் கோயபல்ஸ் பொய்களுக்கு அளவே இல்லை. அவைகள் அடுத்தும்  தொடரும்.மோடியின் கோயபல்ஸ் பொய்கள்.!

பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி அதனை உண்மை என்று நம்ப வைக்கும் தந்திரத்தை செய்தவன் இட்லரின் மந்திரி கோயபலஸ் என்பார்கள்! 
அவனை போலவே, மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது.மோடியால் குஜராத்தைப் போல இந்தியா வளர்ச்சி அடையும் என்ற பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது!

              உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்து  உள்ளதா? விவசாயிகள்,தொழிலாளர்கள், சிறுபான்மையினர்,பழங்குடியினர், பெண்கள் வாழ்க்கை நிலை மோடியின் ஆட்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதா? என்று ஆய்வு செய்தால் அதிர்ச்சிதரும் வகையில் குஜராத்தில் அனைத்து தரப்பு மக்களும்  ஏழ்மையில்,வறுமையில் இருந்துவருவதும்  கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்றம், தொழிலாளர்கள் நலம் மோடியால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம்,வாழ்க்கைத்தரம் அனைத்திலும் உண்மையை மறைத்து கூறப்பட்டு வருகிறது. 

       பொய்யாக  மோடியைப் பற்றிய மாயையை மோடியால் பயனடைந்த கார்பரேட் கம்பனி முதலாளிகள்  உருவாக்குவதில் முனைப்புடன் செயல் பட்டுவருவதை அறிய முடிகிறத…

தமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் !

"இறந்தவர்களுக்கு நீதி வேண்டும்" என  தற்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காங்கிரசார். கேட்கிறார்கள்.காங்கிரஸார் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நீதி வழங்கி இருகிறார்களா? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!  

        (1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கேப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர்,
         தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்து ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல், 1990 --க்கு முன்னரே தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்!  தமிழ் ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தவர்,தமிழினத்திற்கு  விரோதியாக செயல்பட்டவர் ராஜிவ்காந்தி!

      (2) தியாக தீபம், திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணா நோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.

      (3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 …

தி.மு.க-வின் நாடகங்கள்..!

Image
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.

       மற்ற கட்சிகளை விட அன்றுமுதல் இன்றுவரை கலைத்துறையினர் அதிகம் உள்ளக் கட்சியும் தி.மு.க-தான்.   அன்று எம்.ஜி.ஆர்,,எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா  என்று ஒரு பட்டாளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.


             இன்று குஸ்பு, சந்திரசேகர், நெப்போலியன்,ரித்திஸ் என்று பலர்  இருகிறார்கள். அவ்வளவு ஏன்?  தி.மு.க-வின் தலைவர் கலைஞரே  திரைத் துறையை சேர்ந்தவர்தான்.!

         அதனால்தானோ, என்னவோ,அன்றுமுதல் இன்றுவரை அரசியலில் அவர் போடும் வேடங்களும் பேசும் வசனங்களும் நேரத்துக்கு தகுந்தபடியும் அவர் ஏற்றுகொண்ட  பாத்திரத்திற்கு தக்கபடியும் இருப்பதை கூர்ந்து நோக்கும் எவரும் அறிய இயலும்.

         ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரசின் உறவில் திளைத்து இருந்த கலைஞர், அப்போதுஅவர்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.!


            நாற்பது எம்பிக்கள் இவரது கட்டுபாட்டில் இருந்தும் ஆதரவை வாபஸ் பெறுவோம…

ராமதாசின் (சொ)நொந்த மனம்..

Image
எந்த திராவிட கட்சிகளுடன் தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபேற்றாரோ அந்த திராவிடக் கட்சிகளை சனியன்கள் என்று மருத்துவர் ராமதாஸ் சாடி உள்ளதுடன்,இந்த கட்சிகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

          சமூக நீதிக்கு குரல்கொடுத்த ராமதாஸ்,  தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் எண்ணங்களுக்கு எதிராக இன்று நடந்து கொள்வதை காலத்தின் கோலம் என்பதா? வாக்கு வங்கி அரசியலுக்காக வழிதவறி போனவர் என்பதா? தெரியவில்லை.!


      தமிழ்குடிதாங்கி என்று தோல்.திருமா அவர்களால் அழைக்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற திராவிடரான,  மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று ஆரிய,பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியாகி,ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படத் தொடக்கி இருக்கிறார்.

     சாதிகளை ஒழிக்கவும்,சாதிகள் அற்ற தமிழ் தேசியத்தைக் கட்டியமைக்கவும் வேண்டிய மிகப்பெரிய சமுதாயக் கடமையை மறந்துவிட்டு, புறக்கணித்து விட்டு, சாதியத்தை முனைப்புடன் தூக்கி நிறுத்தவும்,சாதிய கட்சிகளின் தயவுடன் ஆட்சி அதிகாரத்தை பெறவும்  ராமதாசின் (சொ)நொந்த மனம் இன்று துடிக்கிறது. தவியாய் த…

தேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..!

Image
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி விட்டது. எப்படியாவது இந்தமுறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமே என்று காங்கிரசும்,இந்தமுறையும் கோட்டை விடக் கூடாது என்று பி.ஜே.பி-யும் ஆளாய் பார்க்கின்றன. கொள்கை,லட்சியம், எல்லாவற்றையும் ஏறக் கட்டிவிட்டு முரண்பட்டு நிற்கும் அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க பேரம் பேசுகின்றன.

        கூடாத நட்பாயினும் கூட்டணியில் அதிக சீட்டுகளைபெறவும்,கேட்ட தொகுதிகளை பெறவும் துடிக்கும் மாநில கட்சிகளும்,சாத்திய அமைப்புகளும், தங்கள் பலத்தை காட்டுவதற்கு மாநாடுகளை பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை போட்டு மக்களை திரட்டி காட்டுகின்றன.


         இந்தியா எங்கும் நடக்கும் இத்தகைய கூத்துக்கள் தேர்தல் என்பதை திருவிழாக் கொண்டாட்டமாக எண்ணி செயல்படும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அடையாளம் காட்டுகின்றன.!

          இவைகளில் இருந்து பொதுவான ஒரு விஷயம் நமக்குத் தெரிகிறது. எந்தக்கட்சிக்கும் தனது கொள்கைகளை சொல்லி,நியாயமான வாக்குறுதிகளை சொல்லி, பொதுமக்களிடம் தனித்து நின்று வாக்கு கேட்கும் தைரியம் இல்லை.


        மக்களுக்கு இந்த கட்சிகளின் யோக்கியதை  ஏற்கனவே தெரிந்து இர…