சஷிதரூரின் சர்ச்சைக் காதல்கள் ..

       மத்திய மனித வளத் துறை அமைச்சர் சசிதரூர்  சர்ச்சைகளில் சிக்கிகொள்வது புதிய செய்தி இல்லை. மந்திரியாக இருக்கும் இந்த மன்மத ராஜா..மன்னர்கள்  காலத்தில் வாழ்வதாக நினைக்கும் அதிசய விசித்திர பிராணி.. தனது அந்தரங்கத் தேவைகளுக்காக ஆட்சி,அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் அந்தப்புரங்களை  உருவாக்குவதில்அலாதி பிரியம் கொண்டவர்.


          கடந்த 2010-ம் ஆண்டு, தன் நீண்டநாள் காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது 3-வது திருமணம் ஆகும்.பண்பாடு,கலாச்சாரம் என்று பேசும் இந்தியாவில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரிபதவி அளித்தார்கள்.
இவர் தனது மூன்றாவது மனைவிக்காக கேரளா கிரிகெட் அணியை வாங்க முயன்று அது சர்ச்சையானது. அதற்கு முன்பு, அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் 123-யில் இந்தியா கையெழுத்து இடக்கூடாது என்ற பொது  "தலை அறுந்த கோழிகள்" என்று இடதுசாரிகள்,எதிர்கட்சிகள் அனைத்தையும் ஏகமனதாக கிண்டலடித்தவர்.

         அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான சஷிதரூருக்கு மூன்றாம் மனைவி சுனந்தா புஷ்கர் மீது இருந்த மோகம் குறைந்து போனதாலோ என்னவோ பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெர் தரார் என்பவருடன் பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டதை உணர்ந்த சுனந்தா புஷ்கர் சுதாரித்துகொண்டு டுவிட்டர்,மூலம்  புலம்பி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது இருந்தார் நேற்று மாலை அவர் மர்மமான முறையில்  டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் இறந்துள்ளார்.

                                                                                                                                                                அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும்இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்து உள்ளார்.


            "13 வயதில்  மகன் உள்ள மெர் தரார், பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.அவர்  ஏதோ காரணத்துக்காக சசிதரூரை என்னிடம் இருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். நான் சிகிச்சைக்காக 4 மாதங்கள் வெளிநாட்டில் இருந்தபோது, எங்கள் திருமண பந்தத்தை உடைக்க முயன்றார். அவர் சசிதரூருடன்  உறவை விரும்புகிறார்.அவருடன் வாழ்நாள் முழுவதும் உறவைத் தொடர விரும்புகிறார். அதற்காக என்னை விலகிச் செல்லுமாறு கூறுகிறார்." என்று கூறிய சுனந்தா,மெர் தராரிடம் இருந்து விலகி இருக்குமாறு என் கணவரிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

      பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் சசிதரூர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் சசிதரூரிடம் இருந்து விவாகரத்து கேட்கப் போவதாகவும் சுனந்தா கூறி இருந்த நிலையில் அவர் .. மர்மமாக இறந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.         சுனந்தா கொல்லபட்டாரா? ஆம்என்றால்  யாரால்?கொலையாளி சஷி தரூரா? ஐ.எஸ்.ஐ-யா?  அல்லது அரசியல் எதிரிகளா? கொலையாளி சட்டத்தின் மூலம் தண்டிக்கபடுவாரா? அரசியல் காரணத்தால் நடந்த படுகொலையா? கள்ள உறவால் வந்த வினையா? தற்கொலையா?  சஷிதரூருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையா? தகுமா? சொல்லுங்கள் தோழர்களே, இந்தியா  எங்கு செல்கிறது!


Comments

 1. இந்த ஊடக பரபரப்பு இன்னும் கொஞ்சம் நாள் நீடிக்கலாம். பிறகு அடுத்த பரபரப்பிற்கு தாவப் படலாம் அதிலும் தேர்தல் நெருங்கும் வேளையில் ஊடகத்தின் பரபரப்பு தீனிக்கு பஞ்சமொன்றும் இருக்காது. இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து இது தற்கொலை என்று முடித்து வைக்கப் படலாம். ஆட்சி மாறினால் மீண்டும் தோண்டப்படலாம் இல்லை என்றால் அதோகதிதான். தரூர், மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அயல் நாட்டு தூதர் ஆக்கப் படலாம். வேறு ஆட்சி என்றால் அரசியலில் தலையிடாது பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன் அமைதியாக குடும்பம் நடத்தலாம்.

  நாமளும் எத்தனை அரசியல் பிரச்சினைகளை வாழ் நாளில் பார்த்திருக்கோம் :(

  ReplyDelete
 2. "காலேஜிக்கு போகாமலே கல்வி மந்த்ரி ஆனான்,இவன் காப்பி ஓட்டல் வைச்சிருந்தவன் உணவு மந்திரி ஆனான்"

  ReplyDelete
 3. need your books please reply with your contact to our email: psiraj25@gmail.com by siraj chennai

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?