இந்தியாவின் இரண்டு முகங்கள்..!

         அமெரிக்காவின் இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானி கோர்பகடேவை கைது செய்து,  அவமானபடுத்திய நிகழ்வில் வெகுண்டு எழுந்து பழிக்கு பழியாகவும், எதிர் நடவடிக்கையாகவும் இந்தியா நடந்துகொண்டது  இந்தியாவின் ஒரு முகம் என்றால்,   இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்துகொள்வது மற்றொரு முகமாகும்.!

       அமெரிக்கா மீது புலிபாச்சல் பாயும் இந்தியா,    அண்டைநாடான இலங்கையின்  மீது அவ்வாறு பாயாமல்,  அந்நாட்டின் ஊதுகுழலாகவே நடந்து வருகிறது.


           தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தருணங்களில் இலங்கை  செயல்பட்டு வந்துள்ளது  என்றபோதும், அந்நாட்டுக்கு எதிராக இன்றுவரை கடும் நடவடிக்கை எதுவும் இந்தியா எடுக்கவில்லை. எடுக்கவும் விரும்பாமல் நடந்துகொள்கிறது !

        இத்தனைக்கும் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமுல் படுத்தாமல்  ஏமாற்றிய போதும், இருநாட்டுத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிக்காமல்,நடைமுறைப் படுத்தாமல் இருக்கும் நிலையிலும்  இலங்கைக்கு எதிராக இந்தியாகண்டனம் கூட தெரிவிக்காமல்,அமுல்படுத்த வற்புறுத்தாமல் இருந்துவருகிறது.! இலங்கைக்கு எதிரானா எதிர் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்து வருகிறது.


             அதுமட்டுமின்றி, இலங்கை எதை செய்தாலும், இந்தியாவுக்கு எதிராக நடந்து கொண்டாலும்,இந்திய மீனவர்களை கொன்று குவித்தாலும், இந்திய கடல்பகுதியில் இலங்கை இராணுவம் அத்துமீறி பிரவேசித்தாலும், இந்திய மீனவர்களைச்  சுட்டு கொன்றாலும், இந்திய மீனவர்களின் வாழவாதாரத்தை தொடர்ந்து கேள்வியாக்கி, இந்தியாவின்  வல்லாண்மையை,அதிகாரத்தை கேலி செய்தாலும், கூட இந்தியா அமைதி  வருகிறது.!

         இதன் விளைவு , இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள தமிழ் மக்களிடம் தேச பக்தியும், தேசிய உணர்வும்  இல்லாத நிலைக்கு தமிழர்களை ஆக்கி விட்டதுதான்! 
.
        ஒருநாட்டின் அயலுறவு கொள்கை என்பது   பொதுவானதாக இருக்க வேண்டும்.. எல்லாநாட்டு விவகாரங்களிலும் பாரபட்சமற்ற, நடுவு நிலையில், ஒரே விதமான அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும்!


            ஆனால், இந்தியாவின் அயலுறவு கொள்கை என்பது  நடுவு நிலை உடையதாகவும்,  ஒரேவிதமான  அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை!   முற்றாக, முழுதாக  பாரபட்சம் உள்ளதாக இருக்கிறது.!

 .      இந்தியாவின்  அயலுறவு கொள்கையானது, இலங்கைக்கு ஒரு அளவு கோலையும்,  பாகிஸ்தானுக்கு,  சீனாவுக்கு, வங்காள தேசத்துக்கு ஒருவித அளவுகோலையும்,    அமெரிக்கா போன்ற நாடுகள் விசயத்தில் வேறு அளவுகோலையும், அணுகுமுறையையும் கொண்டுள்ளது.!  .

         இந்தியாவின் இத்தகைய நிலைபாட்டால்தான்  இலங்கை போன்ற நாடுகள் தொடர்ந்து வாலாட்டி வருகின்றன.  இந்திய தமிழ் மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்ற இந்தியாவின் நியாயமான  கோரிக்கை கூட புறக்கணிக்கப் பட்டு வருகின்றன.

        இலங்கை விவகாரத்தில் தனது நிலைபாட்டைஇந்தியா மாற்றிகொள்ள வெண்டிய நேரம் இது.!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?