பி.ஜே.பி யும், ஆம் ஆத்மியும், அப்பாவி பொதுமக்களும்..!

          இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இந்துத்துவ தீவிரவாதிகள்,குறிப்பாக மோடியை பிரதமராகவே நினைக்கும் ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

          காஸ்மீரில் ராணுவத்தைக் குவிப்பது குறித்து, அம்மாநில மக்களின் கருத்துகளைக்  கேட்க  வேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று  ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர்களில் ஒருவர் சொல்ல போய்... எப்படி சுதந்திரமாக கருத்து சொல்லலாம்?  என்று வெகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன.           பொதுவாகவே, ஆதிக்க குணம் கொண்ட இந்துமத சக்திகள், இந்துத்துவ வாதிகள் தங்களுக்கு எதிரான, தங்களது  நலத்துக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் எற்றுகொள்வதில்லை. அனுமதிப்பதில்லை.!

         ஆதிக்க சக்திகளைப் பொருத்தவரை கருத்து  சுதந்திரம் என்பது எட்டிகாயைபோன்றது. ! ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் என்பது அடிப்படையாக உள்ள நிலையில்,  பி.ஜே.பி-கட்சியும் அதன் ஆதரவு அமைப்புகளும்  கருத்தை சொன்னாலே  தாக்குதல் நடத்துகின்றன.! இது இந்திய ஜனநாயகத்தை, எந்த அளவு எதேச்சதிகார சக்திகள் சீர்குலைத்து உள்ளன என்பதற்கு எடுத்துகாட்டாகும்.          ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு மூர்க்கமாகவும்,ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும் நடந்துகொள்ளும் இந்துத்துவ பி.ஜே.பி.கட்சி ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி கட்டவிழ்த்துவிடும் பயங்கரங்களை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. !

         ஆம் ஆத்மி கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்ற அச்சம்  பி.ஜே.பி.கட்சிக்கும் அதன் சங்கபரிவார அமைப்புகளுக்கும்  இருப்பதை  இந்த தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.!


         இதையெல்லாம் பார்க்கும்போது,எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பி.ஜே.பி.கட்சி அமைதியாக நடைபெற அனுமதிக்காது என்பது தெரிகிறது. !

         எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பி.ஜே.பி.யின் பதவி வெறியால்,அதிகார போதையால் தேர்தலுக்குள் நிறைய கலவரங்களை,மத சண்டைகளை, குண்டுவெடிப்புகளை நடத்த வாய்ப்பு உள்ளது.!

         பி.ஜே.பி-யின் பதவி வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாவதும், பாதிக்கபடுவதும்  தடுக்கபட வேண்டும்  !

         சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, இந்துமத வெறியர்களை .அதன் முகமூடியான பி.ஜே.பி-கட்சியை ஓரணியில் நின்று எதிக்க வேண்டும். !
Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?