Posts

Showing posts from January, 2014

சஷிதரூரின் சர்ச்சைக் காதல்கள் ..

Image
மத்திய மனித வளத் துறை அமைச்சர் சசிதரூர்  சர்ச்சைகளில் சிக்கிகொள்வது புதிய செய்தி இல்லை. மந்திரியாக இருக்கும் இந்த மன்மத ராஜா..மன்னர்கள்  காலத்தில் வாழ்வதாக நினைக்கும் அதிசய விசித்திர பிராணி.. தனது அந்தரங்கத் தேவைகளுக்காக ஆட்சி,அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் அந்தப்புரங்களை  உருவாக்குவதில்அலாதி பிரியம் கொண்டவர்.


          கடந்த 2010-ம் ஆண்டு, தன் நீண்டநாள் காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது 3-வது திருமணம் ஆகும்.பண்பாடு,கலாச்சாரம் என்று பேசும் இந்தியாவில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரிபதவி அளித்தார்கள்.
இவர் தனது மூன்றாவது மனைவிக்காக கேரளா கிரிகெட் அணியை வாங்க முயன்று அது சர்ச்சையானது. அதற்கு முன்பு, அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் 123-யில் இந்தியா கையெழுத்து இடக்கூடாது என்ற பொது  "தலை அறுந்த கோழிகள்" என்று இடதுசாரிகள்,எதிர்கட்சிகள் அனைத்தையும் ஏகமனதாக கிண்டலடித்தவர்.

         அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான சஷிதரூருக்கு மூன்றாம் மனைவி சுனந்தா புஷ்கர் மீது இருந்த மோகம் குறைந்து போனதாலோ என்னவோ பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர…

இந்தியாவின் இரண்டு முகங்கள்..!

Image
அமெரிக்காவின் இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானி கோர்பகடேவை கைது செய்து,  அவமானபடுத்திய நிகழ்வில் வெகுண்டு எழுந்து பழிக்கு பழியாகவும், எதிர் நடவடிக்கையாகவும் இந்தியா நடந்துகொண்டது  இந்தியாவின் ஒரு முகம் என்றால்,   இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்துகொள்வது மற்றொரு முகமாகும்.!

       அமெரிக்கா மீது புலிபாச்சல் பாயும் இந்தியா,    அண்டைநாடான இலங்கையின்  மீது அவ்வாறு பாயாமல்,  அந்நாட்டின் ஊதுகுழலாகவே நடந்து வருகிறது.


           தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தருணங்களில் இலங்கை  செயல்பட்டு வந்துள்ளது  என்றபோதும், அந்நாட்டுக்கு எதிராக இன்றுவரை கடும் நடவடிக்கை எதுவும் இந்தியா எடுக்கவில்லை. எடுக்கவும் விரும்பாமல் நடந்துகொள்கிறது !

        இத்தனைக்கும் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமுல் படுத்தாமல்  ஏமாற்றிய போதும், இருநாட்டுத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிக்காமல்,நடைமுறைப் படுத்தாமல் இருக்கும் நிலையிலும்  இலங்கைக்கு எதிராக இந்தியாகண்டனம் கூட தெரிவிக்காமல்,அமுல்படுத்த வற்புறுத்தாமல் இருந்துவருகிறது.! இலங்கைக்கு எதிரானா எதிர் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இரு…

பி.ஜே.பி யும், ஆம் ஆத்மியும், அப்பாவி பொதுமக்களும்..!

Image
இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இந்துத்துவ தீவிரவாதிகள்,குறிப்பாக மோடியை பிரதமராகவே நினைக்கும் ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

          காஸ்மீரில் ராணுவத்தைக் குவிப்பது குறித்து, அம்மாநில மக்களின் கருத்துகளைக்  கேட்க  வேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று  ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர்களில் ஒருவர் சொல்ல போய்... எப்படி சுதந்திரமாக கருத்து சொல்லலாம்?  என்று வெகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன.           பொதுவாகவே, ஆதிக்க குணம் கொண்ட இந்துமத சக்திகள், இந்துத்துவ வாதிகள் தங்களுக்கு எதிரான, தங்களது  நலத்துக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் எற்றுகொள்வதில்லை. அனுமதிப்பதில்லை.!

         ஆதிக்க சக்திகளைப் பொருத்தவரை கருத்து  சுதந்திரம் என்பது எட்டிகாயைபோன்றது. ! ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் என்பது அடிப்படையாக உள்ள நிலையில்,  பி.ஜே.பி-கட்சியும் அதன் ஆதரவு அமைப்புகளும்  கருத்தை சொன்னாலே  தாக்குதல் நடத்துகின்றன.! இது இந்திய ஜனநாயகத்தை, எந்த அளவு எதேச்சதிகார சக்திகள் சீர்குலைத்து உள்ளன என்பதற்கு எடுத்துகாட்டாகும்.          ஆட்சி…