ஊழலும், ஊழல் சார்ந்த... இந்தியாவும்.!

          உலக அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் இந்தியா 94-வது இடத்தில இருப்பதாக அறிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் 127-வது இடத்தில இருக்கிறதாம்.

         இந்தியாவில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் ஊழலிலும் எந்தவித வேறுபாடும் மாற்றமும் ஏற்படவில்லையாம்.அதே நிலையில்,அதே  இடத்தில நீடித்து வருகிறதாம்.


        ஏதோ,ஊழலில் தவிர மற்ற துறைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டது போல இதனைச் சொல்கிறார்கள். !  மக்களை மடையர்களாக நினைத்து செயல்படும் ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்தமர்கள் போல  ஆகி விடுகிறார்கள்.

        நடைபெற்றுவரும் 5 மாநில தேர்தலில்,காங்கிரஸ் ஆட்சி செய்த டெல்லி, இராஜஸ்தான் மாநிலங்களில் பி.ஜே.பி. கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

       இதுவரை நடந்த ஊழல்கள் எல்லாம் களையப்பட்டு,குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்பது போலவும் பி.ஜே.பி.கட்சி பிரசாரம் இருந்தது. 

        தேர்தல் கணிப்புகளின்படி  பி.ஜே.பி.கட்சி ஆட்சிக்குவந்தாலும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்லியே, தங்களது காரியத்தை பார்க்கப் போகிறார்கள். ஊழலை தொடருவார்கள்.என்பதுதான் இந்தியாவின் நிலை.ஏனென்றால் ஊழலும் ஊழல்  சார்ந்த இடமும் ஆக  இந்தியாவும் இருக்கிறது.!       போகட்டும், ஊழல் என்பது இந்தியாவின் அடையாளம் மட்டுமே  என்ற நிலை மாறி, இப்போது சர்வதேச அடையாளமாக மாறி வருவதை   ஊழல் பற்றிய சர்வே முடிவுகள் தெரிவிகின்றன.

        ஊழலை ஏற்றுக்கொண்டும்,சகித்துக் கொண்டும், ஊழல் செய்தும் வாழவும்  மக்கள் எல்லாநாடுகளிலும் பழகி வருகிறார்கள் என்பது அதிர்ச்சிதருகிறது.

        எல்லா நாட்டு மனிதர்களிடமும் பொதுநலம் போய்விட்டது. எங்கும்,எதிலும்,சுயநலமும் அதன் காரணமாக ஊழலும் முறைகேடுகளும் செய்யவும் தொடங்கிவிட்டார்கள்.மனிதர்கள்  மாறிவிட்டார்கள். அதனால் ஊழல் அதிகரித்து வருகிறது. உலகம் அன்பு,நட்பு,பாசம்,மனித நேயம் அற்ற காடாக,பாலைவனமாக ஆகிவருகிறது.

      சுருங்க சொன்னால், உலகம் அழிவுக்கு ஆளாகி வருவதன் அடையாளமாக இதனை நாம் பார்க்கவேண்டி உள்ளது.Comments

 1. "ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் இந்தியா 94-வது இடத்தில "

  இந்த பதம் தவறான கருத்தை தர கூடும்.
  ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் இந்தியா 94 வது இடம். இப்படி சொல்வது சரியாக இருக்கும்.
  டென்மாக் முதல் இடம் .
  சிங்கபூர் 5 வது இடம்

  பாகிஸ்தான் 127 வது இடம். ஆய்வின் படி பாகிஸ்தான் இந்தியாவை விட ஊழல் மிகுந்த நாடு

  ReplyDelete
 2. http://www.transparency.org/cpi2013/results

  ReplyDelete
 3. உலகமயமாக்கல் ,தாராளமயமாக்கல் கொள்கை மாபெரும் வெற்றி பெற்றுள்ளது !
  த .ம +!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?