Posts

Showing posts from December, 2013

புது துடைப்பம் நன்றாக பெருக்குமா?

Image
இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு ஆம் ஆத்மி கட்சி  தலைநகர் டெல்லியில் நாளை ஆட்சி அமைக்க இருக்கிறது.

    அக்கட்சி துடைப்பம் சின்னத்தில் நின்று ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் ஊழலை எதிர்ப்பைத் தனது கொள்கையாக அறிவித்து ஆளும் கட்சியான காங்கிரசை எதிர்த்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது வேடிக்கை விநோதமாகும்!


        ஆட்சி அமைக்க முன்வந்தவுடன் ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும், குடிநீர் மின்சார பிரச்னைகள் தீர்க்கப்படும், நேர்மையான,ஊழல் அற்ற நிர்வாகம் நடக்கும் என்று உறுதி அளித்து உள்ளது.!

      ஆங்கிலத்தில்,"  புது துடைப்பம் நன்றாக பெருக்கும்" என்று பழமொழி உண்டு.!  அதனை உண்மை என நம்பும்படி "ஆம் ஆத்மி" கட்சியின் ஆரம்ப செயல்கள் உள்ளன.

       ஆட்சி அதிகாரம்,பதவியால் கிடைக்கும் புகழ்,பணம் ஆகியவைகள் குறித்து அக்கட்சிக்கு  தெரியவில்லை.!  மேலும் ஊழலில் ஊறித் திளைத்து இருக்கும்  இந்திய அரசியல்வாதிகள் தங்களை சுதந்திரமாக ஆட்சி நடத்தவும்,மக்கள் பணியை செய்யவும்…

ஊழலும், ஊழல் சார்ந்த... இந்தியாவும்.!

Image
உலக அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் இந்தியா 94-வது இடத்தில இருப்பதாக அறிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் 127-வது இடத்தில இருக்கிறதாம்.

         இந்தியாவில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் ஊழலிலும் எந்தவித வேறுபாடும் மாற்றமும் ஏற்படவில்லையாம்.அதே நிலையில்,அதே  இடத்தில நீடித்து வருகிறதாம்.


        ஏதோ,ஊழலில் தவிர மற்ற துறைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டது போல இதனைச் சொல்கிறார்கள். !  மக்களை மடையர்களாக நினைத்து செயல்படும் ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்தமர்கள் போல  ஆகி விடுகிறார்கள்.

        நடைபெற்றுவரும் 5 மாநில தேர்தலில்,காங்கிரஸ் ஆட்சி செய்த டெல்லி, இராஜஸ்தான் மாநிலங்களில் பி.ஜே.பி. கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

       இதுவரை நடந்த ஊழல்கள் எல்லாம் களையப்பட்டு,குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்பது போலவும் பி.ஜே.பி.கட்சி பிரசாரம் இருந்தது. 

        தேர்தல் கணிப்புகளின்படி  பி.ஜே.பி.கட்சி ஆட்சிக்குவந்தாலும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்லியே, தங்களத…