சூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி..!

           சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு  ஒரு நீதி சாத்திரம் சொல்லிடுமானால் அது சாத்திரமில்லை, சதியெனக் கண்டோம்!   என்றான் பாரதி.

           இன்று நீதியின் பெயரால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டு இருப்பதையும்  சந்தேகத்தின் பெயரால்  பொட்டிகடை, பழக்கடை, பழைய இரும்பு செய்து   பிழைப்பு நடத்திவரும் முஸ்லிம்கள் பயங்கர சதி செயலில் ஈடுபட்டதாக பிடித்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்வதையும் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.


           மகாகவி  பாரதி சொன்னதுபோல மனுதர்மம சாஸ்திரப்படி இந்தியாவில் நீதி பரிபாலனம் நடக்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.!

           காஞ்சி மடச் சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட தீர்ப்பின்படி  பார்த்தால்,படு கொலை செய்யப்பட்ட வரதராஜர்கோயில் மேலாளர் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்துவிட்டதாக ஆகிறது.


          1998 ஜனவரி 28 அன்று பொள்ளாச்சியில் பழனிபாபாவை படுகொலை செய்த  வழக்கிலும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். சங்கரராமன் படுகொலையிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.! 

        இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால்,  இந்துத்துவ ஆதிக்கத்தை எதிர்க்கும் , எதிர்த்து  நீதி கேட்கும்,  நீதி கேட்டு போராடும் எவரையும்  இந்துத்துவ ஆதிக்க சக்திகள் கூசாது கொன்றுவிடும் என்பதுதான்.

       அவ்வாறு அவர்களை  கொன்றுவிட்டாலும்  கூட கொன்ற இந்துத்துவ வெறியர்கள்   குற்றவாளிகளாக மாட்டார்கள், கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காது  என்பதைத்தான்  நமது ஆட்சி மன்றங்களும் ,இந்திய நீதிமன்றங்களும் சங்கரராமன் கொலை வழக்கு  தீர்ப்பின் மூலம் சொல்லியிருக்கிறது.


         அதே சமயத்தில்,  போதிய ஆதாரங்கள்,சாட்சிகள் எதுவும் இல்லா விட்டாலும்கூட அதிக்க சக்திகளை எதிர்ப்பவர்களை, சூத்திரர்களை,   ஆதிக்க பேரறிவாளன், அப்துல் நாசர் மதானி, போன்றவர்களை கேள்வியே இன்றி, ஆண்டுகணக்கில் சிறையில் அடைத்து, சித்தரவதை செய்து வரும் என்பதையும்  நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.!

       பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த, நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க துடிக்கும் இந்திய ஜனநாயகத்தில், இறையாண்மை பற்றி வாய்கிழிய பேசி,  பாபர் மசூதியை பகிரங்கமாக இடித்து தள்ளிய இந்து மதவெறியர்களை தண்டிக்காத நீதிமன்றம்,"  தண்ட சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதியும், சூத்திரனுக்கு ஒரு நீதியும்" வழங்கிவருகிறது.!

        வேடிக்கையான நீதி பரிபாலனம்..வேதனையான தீர்ப்புகள்.

Comments

 1. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.
  "ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன். Reference:http://namathu.blogspot.in/2013/11/blog-post_4798.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பகிர்வுக்கு நன்றி அய்யா..

   Delete
 2. இந்த வழக்கில் குற்றவாளி சிக்கவில்லை என்பது நியாயம், இதனோடு முஸ்லீம் பிரச்சனைகளை கோர்த்து விடுவது நியாயமில்லை.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?