ராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..

       பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துராஜபக்சேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

        ராஜ பக்சே-வுக்கு ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ளாததற்கு வருத்தப்படும்  பிரதமர், இந்திய தமிழர்கள்,தமிழ் மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளதற்கும், சிறை பிடிக்கப்பட்டு வருவதற்கும் இன்றுவரை தமிழர்களிடமோ,தமிழக தலைவர்களிடமோ  வருத்தம் தெரிவிக்கவில்லை.!


      அவ்வளவு ஏன்? தனது ஆட்சியில், தனது நாட்டை சேர்ந்த மக்களை அண்டை நாடான இலங்கை கொல்வதைத்  தடுத்து நிறுத்த  முன் வரவில்லை. !  என்பதை  தமிழர்கள் அனைவரும்  கவனத்தில் கொள்ளவேண்டி இருகிறது.!

    இலங்கை கடற்படையினரால் தங்களது வாழ்வுரிமையை இழந்துள்ள தமிழர்கள் மீது, பிரதமர் கொண்டுள்ள மதிப்பீடு  இதுவென்றால்,   இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த  மனித உரிமை மீறல்கள்,போர் குற்றங்களைக் குறித்த பார்வையிலும் மாற்றம் ஏற்படவில்லை ! ராஜபக்சேவுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வருத்தக் கடிதம்  நமக்கு சொல்லுகிறது.! மேலும், இலங்கையின் செயல்களை இந்தியா தொடர்ந்து அங்கீகரித்து ஏற்று கொள்வதையும், நியாயப் படுத்துவதையும்  அது காட்டுகிறது.! 

   காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர்  கலந்து கொள்ளாமல் போனதால் மட்டும் மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத முடியாது.!

      இந்தியாவின் சார்பில் யாருமே கலந்துகொள்ளாமல் மாநாட்டை புறகணித்து இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்தியா சார்பில் குர்ஷித் கலந்து கொள்வது  கண்டனத்திற்கு உரியது.!  தமிழர்களை மேலும் முட்டாளாக்கும் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் தந்திரம்  இதுவாகும். !

   பிரதமர்  தமிழர்களுக்கு துரோகம் இளைத்து வருகிறார்.! அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் கூட தமிழர்களுக்கு துரோகம் இளைப்பதை வாடிக்கையாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

        காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள்,எம்.பி-க்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து,  இந்தியாவின் இந்த இரட்டை வேடத்தை, கபட நாடகத்தை  கண்டிக்கவேண்டும்,!  மதிய அரசில் இருந்து விலகி தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படவேண்டும்.தங்கள் பதவிகளை தூக்கி ஏறிய வேண்டும். ராஜினாமா செய்ய முன்வர வேண்டும், !

      இனியும் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காட்டும் மெத்தனமும்,அலட்சியமும் தமிழினத்துக்கு மட்டுமல்ல தங்களுக்கும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும் !


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?