காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளும்..!

       காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும்  கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

      தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,மதிய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்றுவரை இலங்கையில் நடக்கும்  காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என்று இன்றுவரை  இந்தியா அறிவிக்காமல் உள்ளது.கள்ள மவுனம் சாதித்து வருகிறது.!


           சேனல் 4-யில் இசைபிரியாவின் கொடூர மரணம் குறித்த காட்சிகள் வெளியான சில நாட்களிலேயே  இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் ஆகியவைகளை சுட்டிக் காட்டி கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன. இன்னும் சில நாடுகளும் இலங்கையில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க போவதாக செய்திகள்  வருகின்றன.

        தமிழர்கள் படுகொலை மற்றும் இலங்கையின் போர்குற்றங்கள்  குறித்து வேறு  நாடுகளுக்கு இருக்கும் பார்வையும் மனிதாபிமானம் கூட நமது இந்திய தேசத்திற்கு இல்லை.! மத்திய அரசும்,பிரதமர் மன்மோகன் சிங்கும்   தமிழர்கள் குறித்த எந்த விசயத்திலும்தமிழர்களுக்கு ஆதரவாக இன்றுவரை செயல்பட்டதே இல்லை.  தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.களும் மந்திரிகளும் கூட மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைக் கொடுத்து வலியுறுத்தியதில்லை.!


       ஆந்திர  மாநிலத்தை பிரிக்கும் முடிவுக்கே அங்குள்ளவர்கள் எம்.பி. பதவியை,  மந்திரி பதவியை  ராஜினாமா செய்துவிட்டு, மத்திய அரசை மிரட்டுகிறார்கள். ஆந்திர அரசியல்வாதிகளிடம்  உள்ள காரமும் வீரமும் தமிழக எம்.பி.களுக்கும், மந்திரிகளுக்கும்  இல்லாமல் போய்விட்டது.

       மதிய அரசுக்கும் தமிழக அரசியல்வாதிகள் சும்மா பேசுவார்கள், மிரட்டுவார்கள்  ஆனால், காரியத்தில் இறங்க மாட்டார்கள்  என்ற விவரம் தெரிந்து இருப்பதால்தான், தமிழக அரசியல் வாதிகளின் வீரமும் ரோஷமும் வெத்து வேட்டுகள்   என்பதால்தான் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கபட்டாலும், நடுக் கடலில் அவர்களை சிங்களர்கள் கொன்று போட்டாலும், கற்பளிதாலும் சுட்டுக் கொன்றாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  இலங்கைக்கு வக்காலத்து வங்கி, நட்புக்கரம் வீசுகிறது.! நாயைப்போல இலங்கைக்கு வாலை  ஆட்டுகிறது.

        எனவேதான்  தமிழர்களின் உணர்வுகளை மதித்து, இந்தியா மாநாட்டை புறக்கணிக்க போவதாக  அறிவிக்காமல் இருந்து வருகிறது.   அகில இந்திய காங்கிரஸ்-யின்  ஸ்கோர் கமிட்டி இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளவும் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவும் அனுமதியும்  வழங்கி உள்ளது.

         நமது {?} இந்திய பிரதமரும்,வெளியுறவுத்துறை  செயலாளர் சிவசந்திர மேனன் சகிதமாக கலந்துகொள்ள ஆவலாகவும் ஆயத்தமாகவும் இருந்து வருகிறார்கள்! . மத்திய  அரசு இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறது ! என்றாலும் அதற்க்கு ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.! எங்கே இந்த கருணாநிதி திடீரென்று ஆட்சிக்கு தந்துவரும் ஆதரவு வாபஸ் என்று அறிவித்து விடுவாரோ என்ற சந்தேகம்தான். அதனை நிவர்த்தி செய்துகொள்ளவே ப.சிதம்பரம் வந்து கருணாநிதியை சந்தித்து விட்டு போயிருக்கிறார்.!

       மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி என்பதுபோல   வாசன்,ஜெயந்தி நடராசன் ஆகியோர்கள் அல்லாடுகிறார்கள்.!  பாவம் அவர்கள். தமிழ்கதில்தானே  அரசியல் செய்ய வேண்டும், தேர்தலில் நிற்க முடியும் என்பது அவர்களது வேதனையாக இருக்கிறது.

        வீரத்துடன் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கையாலாகாத தலைவர்களை, எம்.பிக்களை.அமைச்சர்களை வைத்துகொண்டு  இலங்கையை எதிர்த்து வெற்றிபெற நினைக்கும் தமிழர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.! பாவப்பட்ட ஜென்மங்கள் தமிழர்கள்.!


Comments

 1. இந்த மாநாட்டில் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்ற அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா? அந்நியச் செலாவணி கிடைக்குமா? பொருளாதார தேக்க நிலை மாறுமா? உறுதியுடன் கலந்து கொள்ள மறுப்பதுதான் இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தும்

  ReplyDelete
 2. //கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.//
  ஆஸ்திரேலியா தான் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று உங்களுக்கு மட்டும் தனியா அறிவிச்சதா?
  ஆஸ்திரேலியா தனது முடிவை தெளிவுபடுத்திவிட்டது.
  (It's our view that Commonwealth countries should work with Sri Lanka to meet the challenges that they face and we certainly will be encouraging countries to do that)

  கலந்துக்க போவதில்லை என்பது கனடா ஆளும் கட்சி பிதமர் முடிவு .ஆனா முன்னாள் பிரதமர் Mulroney கனடா கலந்துக்க வேண்டும் என்கிறார்.
  காமன் வெல்த் மாநாட்டில் கலந்துக்க போறது இந்தியாவின் அயல் நட்பு நாடுகள் பாகிஸ்தான், பங்களதேஷ்சும் தான்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?