Posts

Showing posts from November, 2013

சூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி..!

Image
சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு  ஒரு நீதி சாத்திரம் சொல்லிடுமானால் அது சாத்திரமில்லை, சதியெனக் கண்டோம்!   என்றான் பாரதி.

           இன்று நீதியின் பெயரால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டு இருப்பதையும்  சந்தேகத்தின் பெயரால்  பொட்டிகடை, பழக்கடை, பழைய இரும்பு செய்து   பிழைப்பு நடத்திவரும் முஸ்லிம்கள் பயங்கர சதி செயலில் ஈடுபட்டதாக பிடித்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்வதையும் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.


           மகாகவி  பாரதி சொன்னதுபோல மனுதர்மம சாஸ்திரப்படி இந்தியாவில் நீதி பரிபாலனம் நடக்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.!

           காஞ்சி மடச் சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட தீர்ப்பின்படி  பார்த்தால்,படு கொலை செய்யப்பட்ட வரதராஜர்கோயில் மேலாளர் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்துவிட்டதாக ஆகிறது.


          1998 ஜனவரி 28 அன்று பொள்ளாச்சியில் பழனிபாபாவை படுகொலை செய்த  வழக்கிலும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். சங்கரராமன் படுகொலையிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.! 

        இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்ன…

தரம் தாழ்ந்து வரும் இந்திய ஜனநாயகம்...

Image
இந்தியாவில் நமது தலைவர்கள்சமீப காலமாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

         வடமாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்றுவரும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் ஒன்றை ஒன்று எதிர்த்து செய்துவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனிதத்  தாக்குதல்கள் முன்னிலை படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கும்போது, வேதனை ஏற்படுகிறது. இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதைக் காண முடிகிறது.


           பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளராக அக்கட்சியால் களம் இறக்கப் பட்டு உள்ள நரேந்திர மோடியின் பேச்சுகள் மிகவும் தரந்தாழ்ந்து, ஒரு பேட்டை ரவுடியின் திமிர்த்தனத்தைக் காட்டுகிறது.

         பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் பொது சுகாதாரம் மோசமாக உள்ளது என்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்ட,"பெரிய கொசுக்கள்என்னை கடிகின்றன" என்று சொல்ல, அதற்கு மெனக்கெட்டு, நரேந்திர மோடி,"  ராகுலைக் கடித்த கொசுக்களை பாராட்டி" இருக்கிறார்.

       தனது தவறை, ஆட்சியில் உள்ள குறைபாட்டை களையவும், தீர்க்கவும் ஆலோசனை சொல்லாமல்…

மோடி கூட்டத்தில் குண்டுவைத்த இந்து தீவிரவாதிகள்.

Image
நாம் எதை விதைகிறோமோ, அதனைத்தான் அறுவடை செய்ய முடியும்.என்பார்கள்   தீவிரவாததை  விதைத்த மோடி அந்த தீவிரவாதத்தை அறுவடை செய்ய தொடங்கி விட்டார் எனத் தெரிகிறது.மோடியின் பாட்னா கூட்ட தொடர்வெடிகுண்டு  நிகழ்சிகள் நேற்றுவரை நட்பு கொண்டிருந்த பி.ஜே.பி-யின் தோழன் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


           அரசியல் கொடுங்கோலன்  மோடியைக் கொல்ல முஸ்லிம்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.  ஆனாலும் முஸ்லிம்கள் பல ஆயிரம் மக்கள் கூடும் மைதானத்தில், அதுவும் சக்திகுறைந்த குண்டுகளை வைத்து  நாசவேலை செய்வார்கள்என்றோ,மோடியைக் கொல்ல முயல்வார்கள் என்றோ  நம்ப முடியவில்லை. !

      பாட்னாவில் மோடி கூட்டத்தின் பொது வைத்த சக்தி குறைந்த வெடி குண்டுகள்,  மோடியின் செல்வாக்கை அதிகரிக்கவும், மோடியின் மீது பீகார் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தவும், பிகார் முதல்வர்  நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை  ஏற்படுத்தவும்,  பிகாரில் உள்ள இந்துக்களை பி.ஜே.பி-க்கு ஆதாரவாக திரட்டவும், முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்கள் மீது  இந்துக்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி முஸ்லிம்களை பழி வாங்கவும்  வை…

ராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..

Image
பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துராஜபக்சேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

        ராஜ பக்சே-வுக்கு ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ளாததற்கு வருத்தப்படும்  பிரதமர், இந்திய தமிழர்கள்,தமிழ் மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளதற்கும், சிறை பிடிக்கப்பட்டு வருவதற்கும் இன்றுவரை தமிழர்களிடமோ,தமிழக தலைவர்களிடமோ  வருத்தம் தெரிவிக்கவில்லை.!


      அவ்வளவு ஏன்? தனது ஆட்சியில், தனது நாட்டை சேர்ந்த மக்களை அண்டை நாடான இலங்கை கொல்வதைத்  தடுத்து நிறுத்த  முன் வரவில்லை. !  என்பதை  தமிழர்கள் அனைவரும்  கவனத்தில் கொள்ளவேண்டி இருகிறது.!

    இலங்கை கடற்படையினரால் தங்களது வாழ்வுரிமையை இழந்துள்ள தமிழர்கள் மீது, பிரதமர் கொண்டுள்ள மதிப்பீடு  இதுவென்றால்,   இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த  மனித உரிமை மீறல்கள்,போர் குற்றங்களைக் குறித்த பார்வையிலும் மாற்றம் ஏற்படவில்லை ! ராஜபக்சேவுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வருத்தக் கடிதம்  நமக்கு சொல்லுகிறது.! மேலும், இலங்கையின் செயல்களை இந்தியா தொடர்ந்து அங்கீ…

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளும்..!

Image
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும்  கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

      தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,மதிய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்றுவரை இலங்கையில் நடக்கும்  காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என்று இன்றுவரை  இந்தியா அறிவிக்காமல் உள்ளது.கள்ள மவுனம் சாதித்து வருகிறது.!


           சேனல் 4-யில் இசைபிரியாவின் கொடூர மரணம் குறித்த காட்சிகள் வெளியான சில நாட்களிலேயே  இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் ஆகியவைகளை சுட்டிக் காட்டி கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன. இன்னும் சில நாடுகளும் இலங்கையில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க போவதாக செய்திகள்  வருகின்றன.

        தமிழர்கள் படுகொலை மற்றும் இலங்கையின் போர்குற்றங்கள்  குறித்து வேறு  நாடுகளுக்கு இருக்கும் பார்வையும் மனிதாபிமானம் கூட நமது இந்திய தேசத்திற்கு இல்லை.! மத்திய அரசும்,பிரதமர் மன்மோகன் சிங்கும்   தமிழர்கள் குறித்த எ…