இலங்கையின் தொடர் அடாவடிகள்..

          இலங்கை அரசும்  அதன் பாசிச இராணுவமும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொள்கிறது.
          சர்வதேச சட்டங்கள்,மனித நெறிமுறைகள் எதைபற்றியும் அந்நாட்டு அரசு கவலைகொல்வதாக, மதிப்பதாக தெரியவில்லை.

         ஐ.நா .வின்  மனித உரிமைகள் குழு தலைவர்  நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் நடத்தை மீறல்,மனித உரிமை மீறல் குறித்து காலம் கடந்து விசாரிக்க சென்றபோதும் கவலை படாமல் அவரை அவமதித்தது  இன்றும்  தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவத்தை கேடயமாக வைத்து மிரட்டி வருகிறது. 
          சமீபத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போதும் இராணுவத்தின் நெருக்கடிக்கு வேட்பாளர்களும் தமிழர்களும் ஆளாயினர். தேர்தல் முடிந்து தேர்வு பெற்ற விக்னேஸ்வரனும் ராஜபக்சேவுக்கு எதிராக, அவரது எண்ணத்திற்கு மாறாக எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையே எதார்த்தமாக உள்ளது.

          இவைகள் அனைத்தும் அறிந்திருந்தும் இந்தியா இன்றுவரை இலங்கைக்கு எதிராக சிறு நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது.  தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நிலையை இந்தியாவும் தொடர்ந்து ஆதரித்தும், கண்டுகொள்ளாமலும் இருந்துவருவதால் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரசனை தொடர்கிறது.

         இந்தியா ஈழதமிழர்களின் மறுவாழ்வு,புனரமைப்பு பணிகளுக்கு வழங்கிய நிதி உதவியும்  இலங்கையால் தமிழர்களை  ஒடுக்கவும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ளும் விதத்தில் இருப்பது வேதனையாகும்.!

          இதுதவிர தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த அரசியல் தலைவர்கள் தமிழக மீனவர்களுக்கு  இலங்கை அரசும் அதன் இராணுவமும் இழைத்துவரும் கொடுமைகளைப் பற்றி கூக்குரல் எழுப்பியும், கண்டனம் தெரிவித்தும் கூட இலங்கை தனது போக்கில் இருந்து மாறவில்லை.! தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குவதையும்,சிறைபிடிப்பதையும், படகுகள், மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக செய்து வருகிறது.

         தனது நாட்டு மக்கள் பாதிக்கபடுவதை பார்த்தும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலும் கண்டிக்காமலும் இருக்கும் இந்தியாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.          இலங்கையுடன் இந்தியா கொண்ட கள்ள நட்பின் காரணமாக இந்தியாவுக்கு  எதிராகவும்  இலங்கை செயல்பட ஆரம்பித்து உள்ளதாக தெரிகிறது.
 
         இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில்  இஸ்ரேல்  மொசாம்பிக் பயங்கரவாதிகள் தீவிரவாத பயிற்சியை சிங்களர்களுக்கு கொடுத்துவருவதாக செய்திகள் வருகின்றன.

         இந்தியாவுக்கு எதிராக நட்பு நாடான இலங்கையில் தீவிரவாத பயிற்சிகள் நடக்கின்றன.  தீவிரவாதிகள், பயங்கவாதிகள் என்றாலே அது பாகிஸ்தான் தான்,என்று முட்டாள்தனமான நம்பிக்கையில் இருக்கும் இந்தியாவால்,  இலங்கையில் இஸ்ரேல் அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் நடவடிக்கைகளைப் பற்றி  கவலைபடுவதில்லை.!

        சொந்த மக்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய அரசு  எதிர்வரும் காலத்தில், இலங்கையினால் ஏற்படப்போகும் ஆபத்துகளை எப்படி தடுக்கமுடியும்? என்ற கேள்விஎழுகிறது.

       இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.!
Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?