நில அபகரிப்பு தடுப்பு போலீசாரின் அராஜகங்கள்..

         கடந்த ஆட்சியில் தி.மு.கவினர்  முறைகேடாக  பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.அதுமட்டுமின்றி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  அப்பாவி பொதுமக்களை,வியாபாரிகளை மிரட்டியும்  மதிப்பு மிக்க நிலங்களை  ஆக்கிரமிப்பு செய்து, அபகரித்து உள்ளனர். பலரும் மிரட்டப்பட்டனர்.

           தி.மு.க-வினரின் இந்த அராஜக செயல்களால்,  கட்டை பஞ்சாயத்துகளால்,  தமிழகம்  எங்கும்  பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற குற்றசாட்டுக்கள் அப்போது  எழுந்தன.           ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ,  நில அபகரிப்பு குற்றங்கள் செய்தவர்களை   கண்டறிந்து  தண்டிக்கவும்  அபகரிக்கப்பட்ட நிலங்கள்  மீண்டும்  அதன் உரிமையாளர்களுக்கு  கிடைக்க செய்யவும்  நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எனறு  காவல்துறையில் புதிதாக ஒரு  பிரிவு தொடங்கப்பட்டது.

         மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில்  மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை கொண்டு தொடங்கப்பட்ட  நில அபகரிப்பு பிரிவானது    அது தொடங்கப்பட்ட உண்மையான  நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

         எந்த சட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் காவல் துறையினர்,  இந்த பிரிவையும் பயன்படுத்தி புகார் கொடுக்கும் பொதுமக்களிடமும், புகாருக்கு  ஆளானவர்களையும்  மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள்.!  அதுவும் ஆயிரம், ஐநூறு இல்லை.!   லட்ச கணக்கில், நிலத்தின் மதிப்புக்கு ஏற்றபடி பணம் கேட்கிறார்கள்.!

         பணம் கொடுக்க முடியாத  பொதுமக்களின் நியாயமான புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதில்லை.அரசு வழக்கறிஞரின் கருத்துரு பெற்று வழக்கு பதிவு செய்வதில்லை. மாறாக பொலிசார் புகார் கொடுக்க வருபவர்களை மிரட்டி நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்வதாக கட்டாயபடுத்தி எழுதி வாங்கிக் கொண்டு  வலக்கை முடித்து விடுகிறார்கள்.

         இதன் மூலம்  நிலத்தை அபகரித்து உள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, வழக்கு போடாமல் குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள். அவ்வாறு காப்பற்றியதற்கு   அவரிடம் கணிசமாக பணத்தை பெறுகிறார்கள்.!

        இதை விட கொடுமை என்னவென்றால்,  நிலத்தை அபகரித்தவர்கள் சார்பாக போலீசார் நடந்துகொண்டு, புகார் கொடுத்தவர்களை மிரட்டி, நிலத்தையே  எழுதி கொடுக்கும்படி நிர்பந்திப்பதும், கட்ட பஞ்சாயத்து செய்வதையும்  செய்து வருகிறார்கள்.!


        மேலும், அவ்வாறு போலிசின் மிரட்டலுக்கு பணிந்து நிலத்தை எழுதிக் கொடுக்க மறுக்கும் விவசாயிகள்,பொது மக்களை  நிலா அபகரிப்பு செய்தததாக வழக்கு போட்டு,கைது செய்து கொடுமைபடுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.! 

        ரியல்எஸ்டேட் செய்பவர்கள்,பெரும் தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க ஆளுங்கட்ச,எதிர்கட்சி பிரமுகர்களுக்கு  நில அபகரிப்பு செய்ய  உதவுகிறது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு.!

        மேலும், இந்த பிரிவில் பணியாற்றும் பொலிசார் குறுகிய  காலத்திலேயே  கோடிகணக்கான பணத்தை சம்பாதித்து வருகின்றனர். தங்கள்  பெயரிலும் பினாமிகள் பெயரிலும்  சொத்துக்கள் வாங்கி குவித்து வருகின்றன.

        நில அபகரிப்பு பிரிவில் போலீசார் நடத்திவரும் அராஜகங்களை  தடுத்து நிறுத்த வேண்டும். குறுக்கு வழியில் போலீசார்  பெற்ற  கோடிகணக்கான பணம், சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      ஆகவே, நில அபகரிப்பு பிரிவில்  இதுவரை பணியாற்றிய போலீசார்  அனைவரையும் விசாரணை நடத்த ஆவன செய்ய வேண்டும்.  போலீசார்  கையாண்ட புகார்கள், அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கைகள், புகார் தந்தவரின் நேரடி வாக்குமூலம் ஆகியவைகளை பதிவு செய்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போலீசார்  மீது  நடவடிக்கை எடுக்க  தமிழக முதல்வர் முன்வரவேண்டும்!  .

      போலீசாரின் சட்ட மீறல்களால் பொதுமக்கள் பாதிக்க படுவதை  முதல்வர் தடுக்க  முன்வரவேண்டும்.   சட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை  காக்க வேண்டியது   முதல்வரின் கடமை மட்டுமல்ல, அவசர அவசியமும்  ஆகும்.  செய்வாரா?Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?