பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

         சமூகநீதிக்கு குரல்கொடுத்து உழைக்கும் மக்களின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக முன்முயற்சி எடுத்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது சமகாலத்தில் மறக்கபட்டுவரும் வரலாறாகும்.

      முஸ்லிம்களின் உரிமைக்குரலாக விளங்கிய டாக்டர்.அல்ஹாஜ் பழனிபாபாவும், இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் அ.சேப்பனும் டாக்டர் ராமதாசுக்கு பக்கபலமாக இருந்தனர். வன்னியர் சங்கமாக இருந்த ராமதாஸின்  அமைப்பை பாட்டளிமக்கள் கட்சியாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்த இவ்விருவரும் ராமதாசுடன் இணைந்து தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பா.ம.கட்சியை கொண்டு சேர்த்தனர்.
 
 
           டாக்டர் பழனிபாபாவின் வசிகர பேச்சாலும்,அவர்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் பா.ம.கட்சியில் இணைந்து பணியாற்றினார்.தலித்துகளும் ராமதாஸை தங்கள் தலைவராக ஏற்றனர்.

         வடமாவட்டங்களில் வன்னியர்களிடம்  கணிசமான  ஆதரவை பெற்றிருந்த ராமதாஸை  தமிழகம் எங்கும்  தலித்துகளும் முஸ்லிம்களும் ஆதரிக்கும் நிலையை  பழனி பாபாவும் சேப்பனும் அன்று ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பாதுகாவலர்களாக, ஒருங்கிணைப்பாளர்கள் ஆக வளர்ச்சி அடைந்து வருவதை பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள்  மூவரையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.!
 
       பழனிபாபா தலித்துகள்,வன்னியர்கள் இடையில் செல்வாக்குபெற்று வருவதாக,இராமதாஸ் கருதும் சூழலை ஏற்படுத்தினர். முஸ்லிம்கள் பா.ம.கட்சியில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது. தலித்துகளுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. ஆதிக்க சக்திகள் எப்படி தலித்துகளை தாழ்த்தபட்டவர் பிரிவு,சிறுபான்மையின பிரிவு என்று பாகுபடுத்தி  ஒரு குறுகிய வட்டத்துகுள் அடைத்து.கட்சியின் முக்கிய நிலைகளில் பொறுப்புக்கு வராமல்,அதிகாரம் பெறாமல் தடுக்கபடுகின்றனரோ அப்படியே முஸ்லிம்களும் தலித்துகளும் பா.ம.கட்சியில் தடுக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. அதிருப்பதி அடைந்த முஸ்லிம்களும்,தலித்துகளும் பா.ம.கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள்! 
 
 
         அன்று தொடங்கியது பா.ம.கட்சியின் வீழ்ச்சி. அதுவரை பெரியாரை, புரட்சிகர சிந்தனைகளை பேசிய,தலித் ஒருவரை தமிழக முதல்வராக ஆக்குவேன் என்ற, தவறு செய்தவர்களை சாட்டையால் அடிப்பேன் என்ற, எனது குடும்பம் அரசியலுக்கு வராது.நான் அதிகாரத்துக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சூளுரைத்து வந்த டாக்டர் இராமதாஸ் ஆதிக்க வர்கத்தின் அடிவருடியாக மாறி போனார்.ஆட்சி அதிகாரம்,பதவி மோகம், அவரை சராசரி அரசியல்வாதியாக மாற்றியது. 

      ஆதிக்க சக்திகள்  தலித்துகளும் வன்னியர்களும் மோதக் கூடிய சூழலை ஏற்படுத்தினர்.இரு சமூக மக்களிடம் ஏற்படும் சிறு மோதல்கள்,சண்டைகள் ஊதி  பெரிதாக்கப்பட்டது.தமிழகம் எங்கும் 20000 மேல் இருதரப்பிலும் வழக்குகள்.பதிவு செய்யப்பட்டது.பலர் கைது செய்யப் பட்டனர். ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சியால் இரண்டு சமூகங்களும் இணைத்து அரசியலில் பணியாற்றும் சூழல் தடுக்கப்பட்டது.

          மிகுந்த முயற்சிக்கு பிறகு  தோல்.திருமாவும் மருத்துவர் இராமதாசும் ஒன்றிணைத்தனர். ஆனால் இந்த ஒற்றுமை அதிககாலம் நீடிக்கவில்லை.! தருமபுரி கலவரம்,மரக்காணம் சம்பவம்  போன்றவற்றால் இன்று இரண்டு சமூகனகளும் ஒன்று சேர இயலாத நிலையை எற்படுத்தி கொண்டனர்.ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி பலித்துவிட்டது.


       தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறினார். கொள்கைகள் காற்றில் பறந்தன. அவரது ஆரம்ப கால லட்சியம் யாவும் குதிரைபேர அரசியல் வியாபாரமாக ஆனது.  தமிழக வாக்காளர்களிடம் தான் ஒரு சந்தர்ப்பவாத  அரசியல்வாதி என்பதை இராமதாஸ் புரியவைத்தால், வன்னியர்களும் கூட அவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.!

     இன்று  இழந்த செல்வாக்கை மீட்கவும் , தனது மகன் அன்புமணியின் மீது உள்ள ஊழல் முறைகேடு குற்றத்தில் இருந்து விடுபடவும், மதிய அரசில அதிகாரம் பெறவும் விரும்பி ராமதாஸ் பாரதீய ஜனதா .கட்சியுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறார்.

        காலம் காலமாக மிகவும் பிற்பட்ட வகுபினருக்கு அநீதி இழைத்து வந்த, பார்ப்பனர்களின் நலனுக்கு மட்டுமே பாடுபட்டு,ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்தும் கட்சியின் காலடியில் இன்று சரணாகதி அடைய துடிக்கிறார்.

       சாதிக்கு எதிராக போராடியவர் இன்று  சாதியை தூக்கி பிடிப்பதுடன், அனைத்து சாதி அமைப்புகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.  திராவிடன் என்ற அடையாளத்தை மறுத்துவிட்டு, வேசிமகன் என்ற  பட்டதை ஏற்க தயாராகி விட்டார்.  திராவிட கட்சிகளை தேர்தலில் எதிர்த்து தோற்க செய்வது காலம் நமக்கு இட்ட கட்டளை என்கிறார்.

    அரசியலில் ராமதாசின் வீழ்ச்சி  ஆரம்பமாகிவிட்டது. அஸ்தமனத்திற்கு வெகுதூரம் இல்லை.!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?