பாபுலர் பிரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும்

       சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், தாக்கபடுவதற்காகவே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதையும் உணர்ந்த முஸ்லிம்கள் காவி தீவிரவாதிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம்கள்  இந்திய சுதந்திரத்தின் காவலர்கள் என்பதையும் வெகுஜன மக்களுக்கு உணர்த்த முயன்றனர்.

         அதற்கான முயற்சியாக இந்தியாவெங்கும் பெருநகரங்களில் முஸ்லிம் இளைஞர்களை திரட்டி, சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களை நடத்தினர். சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களில் காக்கி சீருடை  அணிந்து,அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் மதுரையிலும் கேரளாவிலும்  பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்த அணிவகுப்புகள் நடந்தது.  காவி தீவிரவாதிகளுக்கு இது அதிர்ச்சியையும்,அச்சத்தையும் அளிததது.


        ஊடகம்,போலிசு,புலனாய்வு,அரசு இயந்திரம் எல்லாவற்றின் உதவியோடு முஸ்லிம்களை நாம் வெகுஜன மக்களிடம் தீவிரவாதிகளாக காட்டிவரும் நிலையில், முஸ்லிம்கள் இதுபோன்ற அணிவகுப்புகள் நடத்தினால் வெகுஜனமக்களிடம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவது எடுபடாது போய்விடுமே என்று கவலைப்பட்டன.

            ஆகவே,சட்டம் ஒழுங்குபிரச்னையைக்  காரணமாக காட்டி, முஸ்லிம்கள்  சுதந்திரதின அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது!
சுதந்திரத்தைக் கொண்டாடக்கூட முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.! உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 
     ஆனால்,இந்திய இறையாண்மைக்கு எதிரான, நாட்டுக்கு அச்சுறுத்தலையும்  உழைக்கும் மக்களை ஒடுக்கும் பாசிச காவி படைகளின் பயிற்சிக்கும் முயற்சிக்கும் எந்த தடையும் இல்லை.!

       ஆர்.எஸ்.எஸ்.பயிற்சிவகுப்புகள், நவீன ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக்  கொண்டே நடத்தபடுகிறது. அரசும் பார்த்துகொண்டிருக்கிறது!

         இந்திய தலைநகர் புது டெல்லியில் சுதந்திர தின, குடியரசு நாள் கொண்டாடங்கள்  நடக்கும்போது,  இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களின் கலாச்சார,பாரம்பரிய நடனம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். சுதந்திரம் அடைந்து  67- ஆண்டுகளாகிறது.
இத்தனை ஆண்டு கொண்டாட்டங்களில் இந்தியாவில் வாழும் மிகபெரிய தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியத்தை, அவர்களது கலையை விளக்கும்  நிகழ்சிகள்  நடத்தப்பட்டதை பார்த்திருகிறீர்களா ? பார்க்க  முடியாது!

       அவ்வளவு ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் நாட்டுபுற கலைஞர்கள், கலைபண்பாட்டு பிரிவின் கீழ் பயன் பெறுகிறார்கள, நலிந்தவர்களுக்கு மாத ஊதியம்,ஒய்வு ஊதியம் போன்ற சலுகைகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். முஸ்லிம்களுக்கு அதுபோல் வழங்கப்படுகிறதா? இல்லை என்பதுதான் எதார்த்தமும் கசப்பான உண்மையும் ஆகும்!
       முஸ்லிம்கள் என்பதற்காகவே சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தொடர்ந்து புரகநிக்கப்பட்டு,அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்களை இழந்து,இம்மண்ணில் தீவிரவாதிகளாக ஆக்க்படுவதை காவிபயங்கரவாதம் இந்துத்துவ பாசிசம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
        இப்படிப்பட்ட சூழல்கள் உள்ளநிலையில் சமூக நீதியை பற்றி,தந்தை பெரியாரை தூக்கி சுமந்து,திராவிட மக்களிடம், அதுவும் உழைக்கும் பாட்டாளி மக்களின் ஆதர்ச நாயகனாக உருவான  பாட்டளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று என்ன சொல்கிறார் தெரியுமா?

   "திராவிட கட்சிகளை தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை" என்கிறார். ராமதாசுக்கு  காலம்  இட்ட கட்டளை இல்லை அது ! காவிகளின் காலை பிடிக்க அவர்  போடும் நாடகமாகும்! 

    பாட்டாளி மக்கள் கட்சி காவிகும்பலிடம் சிக்கியுள்ள கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.Comments

  1. சட்டம் ஒழுங்குபிரச்னையைக் காரணமாக காட்டி முஸ்லிம்கள் சுதந்திரதின அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது என்பது எவ்வளவு தூரம் உண்மையா என்பது தெரியாது.இந்திய முஸ்லிம்கள் இந்திய சுதந்திரதின அணிவகுப்பு நடத்துவது என்பது பாராட்டபட வேண்டிய அருமையான விஷயம். எந்த மதத்தை சேர்ந்த இந்தியரானாலும் இதே மாதிரி அவசியம் செயல்படணும்.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?