காவி பயங்கரவாத பிடியில் தமிழகம்?

         எந்த ஒரு செயலும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை.எல்லா செயல்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.எல்லா குற்றச் செயல்களுக்கும் ஒரு உள் நோக்கம் இருக்கும்..உள்நோக்கம் என்பது வெளியில் தெரிவதில்லை..!

          தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் காவி பயங்கரவாதசெயல்களும்  அப்படிப் பட்டதே!

          காவி பயங்கரவாதம் அரசு,போலிசு,சட்டம்,சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கை,கோபம்,பிற சமூக மக்களிடம் காட்டும் வெறுப்புஉணர்வு ஆகிய அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி  இந்தியாவில்  செயல்பட்டு  வருகிறது. இதற்கு எடுத்துகாட்டாக  குஜராத்தில் நடந்த முஸ்லிம்களின் படுகொலைகளைக் குறிப்பிடலாம் !            காவி பயங்கரவாதத்தின் பார்வை  தமிழகத்தில் சமீப காலமாகவேகமாக பரவிவருகிறது. அமைதிபூங்காவாக ,பெரியார்,அம்பேத்கர் போன்றவர்கள் போராடி நிலைநிறுத்தி உள்ள சமூகநீதிக்கு எதிராக,தமிழர்களின் ஒற்றுமை,வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக பரவிவரும் காவி பயங்கரவாதத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும், கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் போக்கு தமிழகத்தில் அதிகர்த்து வருவதும் கவலை அளிக்கிறது !

            சுதந்திரத்திற்கு முன்புவரை ஆங்கிலேயர்கள் அண்டிப்பிழைத்த  ஆர்.எஸ்.எஸ்-யும், இந்துத்துவ மதவெறியர்களும் இன்று எப்படி தேசபக்தர்களாகவும் தியாகிகளாகவும்   இன்று  நம்ப வைக்க படுகிறது.

       அன்று சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்கள்,தியாகிகள்,தேசபக்
தர்கள், இன்று தேச துரோகிகளாக, தீவிரவாதிகளாக ஆக்கும் முயற்சிகள் தமிழகத்தில் வேகமாக அரங்கேறிவருகின்றன.

        காவி பயங்கரவாதம் தமிழகத்தில் அரங்கேற்றும் செயல்திட்டங்களுக்கு அப்பாவி முஸ்லிம்கள் பளிகடவாக்கபடுவது ஆரம்பம் ஆகிஇருக்கிறது. அது முஸ்லிம்களை தீவிரவாதியாக கட்டுவதற்கு ஊடகங்கள்,உளவுத்துறை, ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் சிறு தவறுகளும், பூதாகரபடுத்தபட்டு வருகின்றன. 
         நாயைக் கொள்ளவேண்டுமானால் அதற்கு வெறிபிடித்து இருக்கிறது என்று முதலில் சொல்லவேண்டும்,அவ்வாறு நம்பவைக்கவேண்டும் பிறகு நாயைக் கொள்ளவேண்டும். இந்த நியதிப்படியே  முஸ்லிம்களை அழித்து ஒழிக்க, முஸ்லிம்களை அச்சபடுத்தி அப்புறப்படுத்தவும் நினைத்து  சாதாரண பொதுமக்களிடம் முஸ்லிம்களைப் பற்றிய  நல்லெண்ணத்தை அழிக்க நினைத்தும்,முஸ்லிம்களை  பொதுமக்கள் வெறுக்க செய்யவும் எண்ணி தீவிரவாதிகளாக, தேசவிரோதிகளாக முஸ்லிம்களை  தொடர்ந்து காட்டி வருகிறார்கள்.

         தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுகளை,வதந்திகளை பரப்பி வருகின்றன. முஸ்லிம்கள்  குறித்து தாங்கள் பரப்பிவரும் அவதூறுகளை உண்மையாக்க வேண்டி, குண்டுவெடிப்புகள்,  தீவிரவாத செயல்களை காவி பயங்கரவாதிகள் செய்து,  தீவிரவாத செயல்களை  ,முஸ்லிம்கள் செய்தததாக நம்ப வைத்து,   முஸ்லிம்களில் சிலரை கைதுசெய்து, காவல்துறை, ஊடகங்கள் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தீவிரவாதிகளாக,தேச விரோதிகளாக சாதாரண மக்களிடம் காவி பயங்கரவாதிகள் காட்டி வருகின்றனர்.!

        காவி பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளில் ஈடுபடுவது, குண்டு தயாரிப்பது,  பதுக்கி வைப்பது குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் அவற்றை திட்டமிட்டே இந்துதுவ  சார்பு  ஊடகங்கங்கள் மறைத்து,இருட்டடிப்பு செய்து வருகின்றன.

         இந்த உண்மைகளை உணராமல் செய்திகளாக ஊடகங்களும், பொலிசும், சொல்லும் கதைகளை ,கற்பனைகளை சாதாரண பொதுமக்கள் எந்தவித சிந்தனையும் இன்றி அப்படியே நம்பி வருகின்றன. இவைகள் யாவும்
இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைப்படி நடத்தப்படுகின்றன.  இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்றால், இந்து அல்லாத மக்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.அல்லது இந்துக்கள் அல்லாத மக்களை அழிக்க வேண்டும்.
       இந்துக்கள் அல்லாத மக்களான முஸ்லிம்களை அப்புறப்படுத்தவும்  அழிக்கவும் நினைத்து காவி பயங்கரவாதம் தமிழகத்தில் தனது செயல்திட்டத்தை ஆரம்பித்து உள்ளது.

           கடந்த ஆண்டு ரத யாத்திரை நடத்துவதாக கூறிக்கொண்டு, அத்வானி என்கிற காவி தீவிரவாதி மதுரைக்கு வந்தபோது இருந்து தமிழகத்தில் நடந்துவரும் பயங்கரவாத செயல்களை கவனித்தால் இந்த உண்மை விளங்கும்.!
          அவர் வந்தது முதல் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் ஆக்கபடுவது அதிகரித்து உள்ளது தெரியவரும்.  முஸ்லிம்கள் அதிகம் வாழும் வேலூர்,சேலம்,திருச்சி,மதுரை,திருநெல்வேலி,திருப்பூர்,கோவை ஆகிய அணைத்து இடங்களும் தீவிரவாதிகள் இருப்பதாக செய்தி பரப்பபடுவதையும், சோதனைக்கு ஆளாவதையும்,சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் குறிவைக்க படுவதையும், கைது செய்யப்பட்டு வருவதையும் தீவிரவாத முத்திரை குத்த படுவதையும் பார்த்தால்,  காவி தீவிரவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளது தெரியவரும்.Comments

  1. உண்மைதான்.....திட்டமிடப்பட்ட செயல்களாகவே தோன்றுகிறது....

    ReplyDelete
  2. இவர்கள் எண்ணத்தை நமது தேசத்தை நேசிக்கும் அனைவரும் ஒன்று பட்டு எதிர்த்து முறியடிக்க முன் வர வேண்டும்.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?