ராகுல் இமேஜும், காங்கிரஸ் டேமெஜும் ..

           குற்றம் செய்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெரும் எம்.பி.கள்,எம்.எல்.ஏக்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து,நிறைவேறும் தருவாயில் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

          வாபஸ் பெற காரணம், காங்கிரஸ் கட்சியின் துணைப் பொது செயலாளர்  ராகுல் காந்தி என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். !
 ஆரம்ப கட்டத்திலேயே இந்த அவசர சட்டத்தை எதிர்க்காமல் கடைசி நேரத்தில், அதுவும் பிரதமர் வெளிநாட்டில் இருந்தபோது  ராகுல் தனது எதிப்பை தெரிவித்தது, பலவேறு சர்ச்சைகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. 
 
 
      
    ஊழல்,கிரிமினல் நாடாளுமன்ற எம்.பி.களை பாதுகாக்க  காங்கிரசின்  தலைவர்  சோனியா முதல்  கபில்சிபல்,  ப.சிதம்பரம் வரை அவசர சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து இருந்தனர். 
 
     எனினும்,  ராகுலின் தீவிர எதிர்ப்பால்  குற்றம் புரிந்து தண்டனைக்கு ஆளாகும் எம்.பி.கள் பதவியை இழக்கும் நிலை தற்போது  ஏற்பட்டு உள்ளது !
 
        அவசர சட்டத்தை வாபஸ் பெற வைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக ராகுல் காட்சி தருகிறார்.  இது,  ராகுலின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படும்.  நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தலுக்கும் காங்கிரசின் பிரச்சாரதிற்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தங்களை பரிசுத்தவான்களாக காட்டிக்கொள்ளவும் கூட பயன்படலாம், என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. ! 
 
     ஏற்கனவே,  டேமேஜாகி உள்ள காங்கிரஸ் கட்சி  ஊழல் கிரிமினல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு தரும்  சட்டத்தை கொண்டுவர முயற்சித்த செயலால்  பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மேலும்   டேமேஜாகி இருந்தது. 
 
 
 
        பா .ஜ.க.போன்ற கட்சிகள்  காங்கிரசின் ஊழலையும், முறைகேடுகளையும் கண்டித்தும்,வெளிபடுத்தியும் தனது செல்வாக்கை வளர்த்து வரும் நிலையில்  குற்றவாளிகளை பாதுகாக்கும் சட்டத்தையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்திக் கொள்ளும்   வாய்ப்பை  ராகுல் தடுத்துவிட்டார். 
 
     மேலும் இளைஞர்கள் மத் தியில் தான்  முந்தைய காங்கிரஸ் காரார்களைபோல  ஊழலுக்கு, முறைகேடுகளுக்கு ஆதரவாளன் இல்லை. என்பதை வெளிபடுத்த  வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. !
 
          ராகுலின் அவசர சட்ட எதிர்ப்பு ஒருவகையில் வரவேற்கதக்கதுதான். இனி ஊழல்,குற்ற செயல்களை எந்தவித பயமும்,கவலையும் இன்றி செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள் சற்று நிதானித்து,சாட்சிகள் இல்லாமல் செய்ய முடியுமா?என்று கவலைபடுவார்கள்.!

         சிலர் திருந்தவும்,  குற்ற செயலில் ஈடுபட யோசிக்கவும் கூட வாய்ப்பு உள்ளது.   மேலும் சிலர், இதுவரை தாங்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிக்க  நினைத்து முயற்சிகள்  மேற்கொள்ளுவார்கள் !   அதன் எதிர்வினையாக.. வக்கீல்கள்..ஏன் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளை மிரட்டவும் நீதிபதிகளிடம்  பேரம் பேசவும் கூட பிரயத்தனம் செய்வார்கள். 
 
       இவைகள் இன்றி,  எல்லா கட்சிகளும்   குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது ஓரளவு தடுக்கப்படவும், உண்மையில் சில நேர்மையாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் சூழல் ஏற்படுவதும் நடக்கும்.!  
 
      ஆகவே,  அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாட்டுக்கு,  நாட்டின் எதிர்கால நலனுக்கு,  நாட்டின் நலனை விரும்பும் கட்சிகளுக்கு,  நாட்டில் உள்ள நேர்மையாளர்களுக்கு  நல்லதுதான்  வரவேற்கத் தக்கதுதான் என்பது எனது கருத்தாகும் !

        இப்படீல்லாம் நடக்கும் என்று யார் கண்டார்கள் என்று நினைத்து புலம்பும் கிரிமினல் அரசியல் வாதிகளுக்கு வேண்டுமென்றால் இது வருத்தத்தை ஏற்படுத்தலாம்!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?