Posts

Showing posts from October, 2013

மோடியும் அமெரிக்க விசாவும்

Image
பகீரதப் பிரயத்தனம் என்பார்களே அதுபோல  மோடியின் விசுவாசிகள் பலரும் பலவிதத்தில் முயற்சித்தும்  மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்த பாடில்லை. எப்படியாவது அமெரிக்க விசாவைப் பெற்று ஒருமுறையாவது அங்கே சென்று வந்துவிட்டால் மோடியை சர்வதேச தலைவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாட சங்க பரிவார அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

          அமெரிக்க அரசாங்கம்  மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் இல்லை என்று இப்போது பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. மோடியை ஆஹா ஓஹோ என்று தூக்கிபிடிக்கும் இந்துத்துவவாதிகள்   ஏமாற்றம் அடைந்து இருப்பது தெரிகிறது.


          இவ்வளவு நடந்தும் கூட  இந்தியாவின்  பிரதமராக பி.ஜே.பி-யால் முன்னிறுத்தப் படும்  மோடி இன்றுவரை அமெரிக்காவுக்கு எதிராக  எந்தவித கருத்துக்களையும் சொல்ல வில்லை. அமெரிக்கா குறித்தும், தனக்கு விசா வழங்காமல் மறுத்து வருவது குறித்தும்  ஏதாவது சொல்லப்போய், அது இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒருவேளை மோடி சொல்லாமல் தவிக்ககூடும்.!   வடிவேலு பாணியில் சொல்வதென்றால்  எவ்வளவு அடிச்சாலும் தாங்…

நில அபகரிப்பு தடுப்பு போலீசாரின் அராஜகங்கள்..

Image
கடந்த ஆட்சியில் தி.மு.கவினர்  முறைகேடாக  பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.அதுமட்டுமின்றி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  அப்பாவி பொதுமக்களை,வியாபாரிகளை மிரட்டியும்  மதிப்பு மிக்க நிலங்களை  ஆக்கிரமிப்பு செய்து, அபகரித்து உள்ளனர். பலரும் மிரட்டப்பட்டனர்.

           தி.மு.க-வினரின் இந்த அராஜக செயல்களால்,  கட்டை பஞ்சாயத்துகளால்,  தமிழகம்  எங்கும்  பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற குற்றசாட்டுக்கள் அப்போது  எழுந்தன.           ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ,  நில அபகரிப்பு குற்றங்கள் செய்தவர்களை   கண்டறிந்து  தண்டிக்கவும்  அபகரிக்கப்பட்ட நிலங்கள்  மீண்டும்  அதன் உரிமையாளர்களுக்கு  கிடைக்க செய்யவும்  நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எனறு  காவல்துறையில் புதிதாக ஒரு  பிரிவு தொடங்கப்பட்டது.

         மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில்  மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை கொண்டு தொடங்கப்பட்ட  நில அபகரிப்பு பிரிவானது    அது தொடங்கப்பட்ட உண்மையான  நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

         எந்த சட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் காவல் துறையினர்,  இந…

அமெரிக்க மர்மக் கப்பலுக்கு பின்னால்.?

Image
தீவிரவாத தடுப்பு குறித்து  புலனாய்வு போலீசும் போலீசுக்கு பக்க வாத்தியமாக ஊடகங்களும்  மோடியையும் மூன்று முஸ்லிம்களையும் சுற்றிசுற்றியே வட்டமடிகின்றன.  இதனை விட்டால்  வேறு வழியே இல்லை என்பதுபோல நடந்துகொள்ளும் நிலையில். தீவிரவாதம் என்றால் முஸ்லிம்கள்தான் அவர்களுக்கு பாகிஸ்தான் பின்னணி என்று கூறிவரும் நிலையில்  பயங்கர ஆயுதங்களுடன் அமரிக்காவின் கப்பல் ஒன்று  இந்திய கடல்பகுதியில் பலநாட்களாக சுற்றிவந்தது இப்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

      அமெரிக்காவின் இந்த மர்மகப்பல் கூடங்குளம் அணு உலை பகுதியில் ஆய்வு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.


       அமெரிக்காவின் வாஷிங்டன் ' அட்வான்போர்ட் நிறுவனத்தின் கட்டு பாட்டில் உள்ள இந்த கப்பலில் கேப்டன்  நிக்வாலன்டின் தலைமையில்  25 பாதுகாப்பு வீரர்கள்,10 மாலுமிகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

         கப்பலில் இருந்தவர்களிடம்  நடத்திய விசாரணையில் ஒரு மண்ணும் தெரிந்து கொள்ள முடியவில்லை  என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

      அமெரிக்க கப்பல் இந்தியாவில் நாச வேலைகள் செய்ய வந்தவர்களா ? அணு உலையை தகர்க்க வந்தவர்களா? தீவிரவாத பயிற்சி கொடுக…

பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

Image
சமூகநீதிக்கு குரல்கொடுத்து உழைக்கும் மக்களின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக முன்முயற்சி எடுத்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது சமகாலத்தில் மறக்கபட்டுவரும் வரலாறாகும்.
      முஸ்லிம்களின் உரிமைக்குரலாக விளங்கிய டாக்டர்.அல்ஹாஜ் பழனிபாபாவும், இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் அ.சேப்பனும் டாக்டர் ராமதாசுக்கு பக்கபலமாக இருந்தனர். வன்னியர் சங்கமாக இருந்த ராமதாஸின்  அமைப்பை பாட்டளிமக்கள் கட்சியாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்த இவ்விருவரும் ராமதாசுடன் இணைந்து தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பா.ம.கட்சியை கொண்டு சேர்த்தனர்.            டாக்டர் பழனிபாபாவின் வசிகர பேச்சாலும்,அவர்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் பா.ம.கட்சியில் இணைந்து பணியாற்றினார்.தலித்துகளும் ராமதாஸை தங்கள் தலைவராக ஏற்றனர்.
         வடமாவட்டங்களில் வன்னியர்களிடம்  கணிசமான  ஆதரவை பெற்றிருந்த ராமதாஸை  தமிழகம் எங்கும்  தலித்துகளும் முஸ்லிம்களும் ஆதரிக்கும் நிலையை  பழனி பாபாவும் சேப்பனும் அன்று ஏற்படுத்தி இருந்த…

பாபுலர் பிரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும்

Image
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், தாக்கபடுவதற்காகவே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதையும் உணர்ந்த முஸ்லிம்கள் காவி தீவிரவாதிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம்கள்  இந்திய சுதந்திரத்தின் காவலர்கள் என்பதையும் வெகுஜன மக்களுக்கு உணர்த்த முயன்றனர்.
         அதற்கான முயற்சியாக இந்தியாவெங்கும் பெருநகரங்களில் முஸ்லிம் இளைஞர்களை திரட்டி, சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களை நடத்தினர். சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களில் காக்கி சீருடை  அணிந்து,அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் மதுரையிலும் கேரளாவிலும்  பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்த அணிவகுப்புகள் நடந்தது.  காவி தீவிரவாதிகளுக்கு இது அதிர்ச்சியையும்,அச்சத்தையும் அளிததது.


        ஊடகம்,போலிசு,புலனாய்வு,அரசு இயந்திரம் எல்லாவற்றின் உதவியோடு முஸ்லிம்களை நாம் வெகுஜன மக்களிடம் தீவிரவாதிகளாக காட்டிவரும் நில…

காவி பயங்கரவாத பிடியில் தமிழகம்?

Image
எந்த ஒரு செயலும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை.எல்லா செயல்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.எல்லா குற்றச் செயல்களுக்கும் ஒரு உள் நோக்கம் இருக்கும்..உள்நோக்கம் என்பது வெளியில் தெரிவதில்லை..!

          தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் காவி பயங்கரவாதசெயல்களும்  அப்படிப் பட்டதே!

          காவி பயங்கரவாதம் அரசு,போலிசு,சட்டம்,சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கை,கோபம்,பிற சமூக மக்களிடம் காட்டும் வெறுப்புஉணர்வு ஆகிய அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி  இந்தியாவில்  செயல்பட்டு  வருகிறது. இதற்கு எடுத்துகாட்டாக  குஜராத்தில் நடந்த முஸ்லிம்களின் படுகொலைகளைக் குறிப்பிடலாம் !            காவி பயங்கரவாதத்தின் பார்வை  தமிழகத்தில் சமீப காலமாகவேகமாக பரவிவருகிறது. அமைதிபூங்காவாக ,பெரியார்,அம்பேத்கர் போன்றவர்கள் போராடி நிலைநிறுத்தி உள்ள சமூகநீதிக்கு எதிராக,தமிழர்களின் ஒற்றுமை,வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக பரவிவரும் காவி பயங்கரவாதத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும், கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் போக்கு தமிழகத்தில் அதிகர்த்து வருவதும் கவலை அளிக்கிறது !

            சுதந்தி…

போலீசின்( பயங்கரவாத)கதைகளும், பின்னணியும்..

Image
தமிழக  சினிமா கதை ஆசிரியர்கள்  தமிழக பொலிசாரிடம் பாடம் கற்க வேண்டும்! தமிழக போலீசாரிடம் அவ்வளவு கற்பனைத் திறனும் விஷயம்  இருப்பதை இன்றுவரை கவனிக்காமல் சினிமா கதாசிரியர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது !
          தமிழக போலீசார் ஆலிவுட் ரேஞ்சுக்கு கற்பனை திறன் கொண்டவர்கள் என்பதை இன்று  நிரூபித்து வருகிறார்கள். அவர்கள், ஊடகங்கள் வாயிலாக சொல்லும் கதைகள் மயிர்கூச்செறியச் செய்கின்றான். பயங்கரவாதிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவதாக சொல்லும் போலீசாரின்  கதைகள்,  சாதாரண மக்களுக்கு சுவாரசியமான, பொழுதுபோக்கும், ஆச்சரியம் ஊட்டும், திகில்,திரில் கதைகளாக ஒருபுறம் இருப்பதை அறிய முடிகிறது.
 சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட புத்தூரில் பிலால் மாலிக் பன்னா இஸ்மாயில் ஆகியோர்களை ஜேம்ஸ்பாண்டு கணக்காக பிடித்ததாக சொன்ன கதை  அந்த ரகமாகும்.! 
சென்னையில் ஒரு லாட்சில் தங்கியிருந்த பொது, கைதுசெய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை  ஓடும் பஸ்ஸில் பாலோவ் செய்து,அவனுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதாக கதை சொல்லி வருகிற போலீசார், பிடிபட்ட பக்ருதீனிடம் விசாரித்ததில் அவன் விசாரணையில் சொன்னதாக …

இலங்கையின் தொடர் அடாவடிகள்..

Image
இலங்கை அரசும்  அதன் பாசிச இராணுவமும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொள்கிறது.           சர்வதேச சட்டங்கள்,மனித நெறிமுறைகள் எதைபற்றியும் அந்நாட்டு அரசு கவலைகொல்வதாக, மதிப்பதாக தெரியவில்லை.
         ஐ.நா .வின்  மனித உரிமைகள் குழு தலைவர்  நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் நடத்தை மீறல்,மனித உரிமை மீறல் குறித்து காலம் கடந்து விசாரிக்க சென்றபோதும் கவலை படாமல் அவரை அவமதித்தது  இன்றும்  தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவத்தை கேடயமாக வைத்து மிரட்டி வருகிறது.            சமீபத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போதும் இராணுவத்தின் நெருக்கடிக்கு வேட்பாளர்களும் தமிழர்களும் ஆளாயினர். தேர்தல் முடிந்து தேர்வு பெற்ற விக்னேஸ்வரனும் ராஜபக்சேவுக்கு எதிராக, அவரது எண்ணத்திற்கு மாறாக எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையே எதார்த்தமாக உள்ளது.
          இவைகள் அனைத்தும் அறிந்திருந்தும் இந்தியா இன்றுவரை இலங்கைக்கு எதிராக சிறு நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது.  தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நிலையை இந்தியாவும் தொடர்ந்து ஆதரித்தும…

ராகுல் இமேஜும், காங்கிரஸ் டேமெஜும் ..

Image
குற்றம் செய்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெரும் எம்.பி.கள்,எம்.எல்.ஏக்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து,நிறைவேறும் தருவாயில் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
          வாபஸ் பெற காரணம், காங்கிரஸ் கட்சியின் துணைப் பொது செயலாளர்  ராகுல் காந்தி என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். !
 ஆரம்ப கட்டத்திலேயே இந்த அவசர சட்டத்தை எதிர்க்காமல் கடைசி நேரத்தில், அதுவும் பிரதமர் வெளிநாட்டில் இருந்தபோது  ராகுல் தனது எதிப்பை தெரிவித்தது, பலவேறு சர்ச்சைகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. 
    ஊழல்,கிரிமினல் நாடாளுமன்ற எம்.பி.களை பாதுகாக்க  காங்கிரசின்  தலைவர்  சோனியா முதல்  கபில்சிபல்,  ப.சிதம்பரம் வரை அவசர சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து இருந்தனர்.       எனினும்,  ராகுலின் தீவிர எதிர்ப்பால்  குற்றம் புரிந்து தண்டனைக்கு ஆளாகும் எம்.பி.கள் பதவியை இழக்கும் நிலை தற்போது  ஏற்பட்டு உள்ளது !         அவசர சட்டத்தை வாபஸ் பெற வைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக ராகுல் காட்சி தருகிறார்.  இது…