உச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..

           தண்டனை வழங்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டி இடுவதை தடுக்கும் தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய   உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது.

          அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் பொது,ஜனநாயகம் கேள்விகுறியாகிவிடுகிறது. மக்களின் சேவை,பொதுநலம் போய்விடுகிறது. சுயநலமும்,ஊழலும்,முறைகேடுகளும் நியாயமாகி விடுகிறது. அரசு இயந்திரம் செயல்பட முடியாதவாறு சர்வாதிகாரம் தலைதூக்கி விடுகிறது. நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாகி,அடிப்படை கட்டமைப்பே சீரழிந்து விடுகிறது.  அத்தகைய நிலைக்கு  இந்தியா ஆட்பட்டு வருகிறது.


             ஜனநாயக போர்வையில்  கிரிமினல் குற்றங்களை செய்து விட்டு, தேர்தலில் நின்றும், வென்றும்  வரும் அரசியல்வாதிகள் இன்று அனைத்து  கட்சிகளிலும் அதிகரித்து வருகின்றனர். . இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிமினல்களைத் தவிர யாரும் இந்திய அரசியலில் ஈடுபடவும், நிலைக்கவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆளுக்கு தகுந்தவாறு  நீதியும்  தர்மமும்,செயல்படும்  நிலை வந்துவிடும்.

           இதுபோன்ற கேடுகள் ஏற்படக்கூடாது என்பதால், தேர்தலில் கிரிமினல்கள் போட்டி இடுவதை தடுக்கும் வகையில்,தண்டனை தீர்ப்பு பெற்றவர்கள் யாரும் எதிர்வரும் தேர்தல்களில் நிரபராதி என்று தீர்ப்பாகும் வரை போட்டி இடுவதையும்,  தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுபினர்களாக இருந்தால், அவர்கள் பதவி இழக்கவேண்டும் என்று  கருதி  உச்சநீதிமன்றம்  செயல்பட  முன்வந்து இருக்கிறது.         இந்த விசயத்தில் பாராட்டவேண்டிய,  ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய,  மத்திய அரசு   உச்ச நீதிமன்றத்தின் நல்ல நோக்கத்திற்கு   எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.  தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யக்கோரி  இரண்டு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

       பாராளுமன்றம் கவிழ்ந்துவிடும்,மெஜாரிட்டி போய்விடும், அப்பீலில் நிரபராதி என்று பிறகு தெரியவந்தால் என்ன செய்வது.? போட்டியிடும் கிரிமினல் அரசியல்வாதிக்கு நஷ்டம் ஏற்படும்  என்றெல்லாம் காரணங்களை   அரசியல் கட்சிகள் அடுக்குகின்றன. 


          அரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்யும் பணி , செவை மனப்பான்மை உள்ளவர்கள்,தன்னலம் கருதாத சமூக சிந்தனையாளர்கள், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் . ஆகவே, கிரிமினல்களுக்கு நாங்கள்  தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம் . கிரிமினல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை, கிரிமினல்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது,  என்று நினைத்து அரசியல் கட்சிகள் செயல்பட்டால் அதில் நியாயம்  இருக்கிறது.  மக்களும் அதனை வர வேற்பார்கள் !  

        அப்படி செய்யாமல், செய்ய முன்வராமல்,  குறைந்த பட்சம் அதுபோன்ற சிந்தனையைக்  கூட வளர்த்துக் கொள்ளாமல் மேலும் மேலும் கிரிமினல்களுக்கு ஆதரவாக செயல்படுவதை என்னென்பது?Comments

  1. பாராளுமன்றம் கவிழ்ந்துவிடும்,மெஜாரிட்டி போய்விடும், அப்பீலில் நிரபராதி என்று பிறகு தெரியவந்தால் என்ன செய்வது.? போட்டியிடும் கிரிமினல் அரசியல்வாதிக்கு நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை அரசியல் கட்சிகள் அடுக்குகின்றன.
    நஷ்டம் ஏற்படும் என சொல்லவது நாங்கள் அரசியலுக்கு சேவை செய்ய வரவில்லை லாபம் ஈட்டவே வந்தோம் என ஒத்துக்கொள்வதுபோல் உள்ளது. தீர்ப்பு வரும்வரை ஓரிருவருடங்கள் பதவி இல்லாமல்தான் பொதுசேவையில் ஈடுபடட்டுமே.அந்த பக்குவம் ஏன் இல்லாமல்போனதோ?

    ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?