ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இலட்சணம்...

            தேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து  இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.

         ஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள்.! ஆர்.எஸ்.எஸ். காவிக்  கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி  வந்தார்கள்.

          அதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள்,  முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போது,  இந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக  போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை! மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர்  இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்து ,ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி,சிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு  என்னே தேசபக்தி !)

           எப்போதும் தங்களது நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் பார்ப்பன கும்பல் இன்று தேசபக்திக்கு சொந்தகாரர்கள் போல போடும் வேடமும் அடிக்கும் கூத்தும், ஆர்ப்பட்டமும், நடிப்பும் சொல்ல தரமற்றது. வேட்கக்கேடானது.

          இந்தியாவில் எல்லோரும் சுதந்திரத்திற்காக போராடிய போது,சிறை பட்டபோது,செக்கிழுத்து,கல்லுடைத்து கஷ்டப்பட்டபோது ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது வாழ்வை, வசதியை இழந்தபோது, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆங்கிலேயரை   பயன்படுத்தி  தங்கள் சொந்த நலனை, வியாபரத்தை நடத்தினார்கள்.

டிரெவர் டிரைபர்க் என்ற பத்திரிக்கையாளர் அதனை  எழுதியுள்ளார்.

     "அதே நேரத்தில் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டீஷ்  ராணுவத்துக்கு வேண்டிய  ராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் டுகளை எடுத்தனர்.1943-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது,  இருந்த உணவுப் பொருள்களை எல்லாம்  இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாரிக் கொண்டு போய், பிரிட்டீஷ் ராணுவத்தினருக்கு கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்கு உள்ளாயினர். இந்த காண்ட்ராக்டு காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது பிரிட்டீஷ் ராணுவ நிதிக்கு பணத்தை அள்ளி வீசினர்.( அப்போதுதானே காண்ட்ராக்டு கிடைக்கும் } ஆர்.எஸ்.எஸ்செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கம்  பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது" 
என்று டிரெவர் டிரைபர்க் அவரது  FOUR FACES OF SUBVERSION என்ற நூலில்( பக்கம்-27) எழுதி  உள்ளார்.

          ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் காட்டி  இந்திய சுதந்திரத்துக்கு இடையுறாக ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் சேர்த்தும்,காண்ட்ராக்டு எடுத்தும், கூட்டிகொடுத்தும்,  காட்டிகொடுத்தும்  துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்  இன்று தேச பக்தர்களாக,சுதந்திர போராட்ட வீரர்களாக, தேச தலைவர்களாக,  தங்களை கூசாமல் சொல்லி கொள்ளுகிறார்கள்!   ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் ஆங்கிலபக்தியை  இன்று, இந்திய தேசபக்தியாக  சொல்லி  ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது?
 


Comments

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?