தமிழர்களும் இந்தியாவும் இலங்கையும்..

         பேரறிஞர் அண்ணா அவர்கள்," வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்று மத்திய அரசும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியும் தென்மாநிலங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவது குறித்து அன்றே கூறினார்.           அண்ணா கூறிய மத்திய அரசின் பாரபட்சம் இன்றும் தொடர்கிறது. அன்றும் காங்கிரஸ் ஆட்சி இன்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் நடைபெறுகிறது. காங்கிரசின் பாரபட்சம், குறிப்பாக அது தமிழர்கள் மீதும் தமிழகத்தின் மீதும் கொண்டுள்ள பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.!


         தமிழர்கள் மீது  கடும் வெறுப்புணர்வை காட்டுவதற்கு காரணம், ஆதியில் இருந்து  பார்ப்பனிய பாசிசத்தை சாடியும், அதற்கு எதிராக திராவிடம் பேசியும் வந்ததாகும். !

           இன்று திராவிடம் என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது. திராவிடக் கொள்கை நீர்த்து போய்விட்டதாக தோன்றுகிறது. ஒட்டுமொத்த திராவிடர்களை,தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி தலைமையேற்கும் ஆற்றலை தமிழக தலைவர்கள் இழந்துவிட்டார்கள்.தங்களுக்குள் போட்டியும் ஆதிக்க குணமும் கொண்டு, சண்டை இட்டதால் ஆதிக்க சக்தியான பாசிச சக்திக்கும்,அதன் ஆட்சியாளர்களுக்கும் திராவிட வெறுப்பு இன்று தமிழின வெறுப்பாகவும்,விரோதமாகவும் வளர்ச்சி அடைந்து விட்டது. !

        இந்த உண்மையை உணராமல் தமிழின தலைவர்கள் இருந்து வருகிறார்கள் அதனால்  இன்றும் பாசிச ஆட்சியாளர்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்தியாவின் தமிழர்கள் மீதான வெறுப்பால்  தமிழர்களின் நலனும் முன்னேற்றமும் தமிழகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நின்று விடவில்லை!   எங்கெல்லாம் தமிழர்கள் பெரும்பான்மையாக இருகிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைக்காக போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.       இலங்கையில் பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் ஜீவாதாரம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் நசுக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, உயிருக்கே போராடும்  நிலைக்கு தள்ளப்பட்டனர்.!  காரணம் இந்திய ஆட்சியாளர்களின் தமிழர் மீதான வெறுப்புணர்வும், பாரபட்சமும் தான்.!


         இந்திய ஆட்சியாளர்களின் பாசிச குணமே  இலங்கையை நடப்பு நாடாக கருத செய்து வருகிறது.  அங்கே ஒடுக்கப்பட்டு, உரிமை இழந்து, தமிழர்கள் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதற்கும் காரணமாகும்.

           சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும்,விரும்பும் பாகிஸ்தானை பகை நாடாக எண்ணுவதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் பாசிச குணமே காரணமாகும்.

         எதிரியாக பகை நாடாக கருதும் பாகிஸ்தான் கூட தமிழக மீனவர்களை கொல்வதில்லை,சித்திரவதை செய்வதில்லை, உணவிட்டு,கண்ணியமாக நடத்தி, அனுப்புகின்றது .

          ஆனால், இந்தியாவின் நட்பு நாடக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்சமா என்ன?  தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதை என்ன வென்று சொல்வது.?  இன்றும் ,இலங்கையில் தமிழக மீனவர்கள் சிறைபட்டு சிறுமைப்பட்டு,சித்தரவதையை அனுபவிக்கிறார்கள். !

      ஆனாலும்,  இந்திய அரசு தமிழர்கள் என்பதாலேயே கண்டுகொள்வதில்லை. இலங்கையை தட்டி கேட்பதும் இல்லை! அதே சமயத்தில்  இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இந்தியாவில் கொல்லபடுவதில்லை, சித்திரவதையோ, கடுமையான சிறைதண்டனையோ அடைவதும் இல்லை.  அவர்கள் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்  படுகிறார்கள்.

        ஆக, இந்தியாவிலும், இலங்கையிலும்,  பாசிச கொடுமைகளை செய்யும் எந்த நாட்டிலும்  தமிழர்களுக்கு, சம உரிமை,  சமத்துவம், நியாயம் கேட்டு போராடும்  ஜனநாயக மக்களுக்கு கொடுமைகள் நடப்பது மட்டும் குறைய போவதில்லை என்பதையே  இந்தியாவும் இலங்கையும் தமிழர்களுக்கு  சொல்லும் செய்தியாக இருக்கிறது.!Comments

  1. //சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும் விரும்பும் பாகிஸ்தானை பகை நாடாக எண்ணுவதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் பாசிச குணமே காரணமாகும்.//
    அப்படி போட்டு இந்தியாவை தாக்குங்க சார்.
    ஏனெனில் பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு.
    இலங்கை ஒரு காபிர்கள் நாடு .நீங்க இலங்கையை தான் தாக்கணும்.
    நீங்க ஒரு சியா இஸ்லாமியரா அல்லது சுன்னி இஸ்லாமியரா தெரியாது. ஆனா இலங்கைக்கு ஈரானும், சவூதி அரோபியாவும் நெருங்கியநண்பர்கள்.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?