அரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..

         ராகுல் காந்தி  காங்கிரஸ் கட்சியும்  ஆட்சியையும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவதாக சமீபத்தில் கூட்டமொன்றில் ஆவேசமாக பேசியுள்ளார். வழக்கம் போல பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
 
          காங்கிரஸ் கட்சி ஆகட்டும்,பி.ஜே.பி-யாகட்டும்  பன்னாட்டு தரகு முதலாளிகள் கார்பரேட் கம்பனிகள், பெரும் தொழிலதிபர்களின் கண் அசைவுக்கும்,விருப்பத்திற்கும் ஏற்ப கைகட்டி  சேவகம் பார்க்கும் அடிமை ஊழியர்களாகவே இருந்து வருகின்றன.


                   இதுவரை ஏழைகளின் நலனுக்காக,அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக  இவ்விரு கட்சிகளும் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. மாறாக மேலும் மேலும்  ஏழ்மையை வளர்த்து,ஏழைகளின் வாழ்கையை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வந்துள்ளன.

       பிகாரின் டொங்க்ரியா கோண்டு  இனமக்களின் வாழ்வாதாரமாக பன்னெடுங்காலம் இருந்துவந்த நியம்கிரி மலை  இப்போது லண்டனில் வாழ்ந்துவரும் இந்திய கோடிஸ்வரரான அனில் அகர்வால் என்பவருக்கு சொந்தமான வேதாந்தா என்ற மிகப்பெரிய சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது. இதனால் ஆயிரகணக்கான பழங்குடியின மக்களின் வாழ்க்கை கேள்விகுறி ஆகிவிட்டது.         இதுபோலவே பல்வேறு  சுரங்க நிறுவனங்களுக்கு வரைமுறையே இன்றி,அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளனர். தங்களது வாழ்விடத்தை பறிகொடுத்து உள்ளனர். இயற்கை ஆதாரங்கள்,ஊற்றுகள்,ஆறுகள்,காடுகள் அழிக்கப்பட்டு,மக்கள் வறுமைக்கு ஆளாகி இருப்பது குறித்து இந்த ஆளும் கட்சி, எதிர்கட்சிகளுக்கு கவலை இல்லை.

       லட்சகணக்கில் விவசாயிகள் தற்கொலை, புதிய தொழில் கொள்கையால் பல லட்சம் தொழிலாளர்கள்  வேலை இழப்பு, மக்கள் அன்றாடம் வாங்கும்,உணவுப்பொருள் விலை ஏற்றம்,பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்,சமையல் எரிவாயு விலையேற்றம்,   என்று  நடுத்தர மக்களும் ஏழைகளாக ஆட்சியாளர்களால்  மாற்றப்பட்டு வருவதை வசதியாக மறந்து விட்டு,இவர்கள் ஏழைகளின் நலனுக்காக  பாடுபடுவதாக கூறுவது ஏழைகளை கிண்டல் செய்து  அவமானபடுத்தும் செயலாகும்.  வக்கிர குணத்தை காட்டுவதாகும்.


            இது ஒருபுறம் இருக்க,  பாரதிய ஜனதா கட்சியும் ஏழைகளை உருவாக்குவதிலும்,அவர்களை சுரண்டி,கொடுமைப்படுதுவதிலும்  காங்கிரசுக்கு சளைத்த கட்சி இல்லை. அக்கட்சியின் ரிமோட் கண்ட்ரோலான ஆர்.எஸ்.எஸ். மற்றும் உள்ள சங்க பரிவார அமைப்புகள்  இந்தியாவில் நடத்திய வன்முறைகள்,கலவரங்களால், ஏழ்மைக்கு ஆளானவர்கள் ஏராளமாகும், உடமைகள்,வீடுகள்,இழந்து அகதிகள் ஆக்கப்பட்டு ஏழைகளாக ஆனவர்கள் எண்ணில் அடங்காதவர்கள்.

          இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, 1981-ஆம் ஆண்டுக்குள் ஆர்.எஸ்.எஸ். 5000-க்கு மேற்பட்ட கலவரங்களை நடத்தி நாட்டை சுடுகாடாக்கியது. இந்திய மக்களின் ஏழ்மையைக்கு  ஆர்.எஸ்.எஸ்,சங்க பரிவார அமைப்புகளை விட வேறு எந்த அமைப்பும் கட்சியும் அதிகம் உழைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கட்சி ஏழ்மையை பற்றிய கருத்துக்கு கண்டனம் செய்கிறது. எல்லாம் காலத்தின் கோலம்.

          போகட்டும் இப்போது காங்கிரசுக்கும் பி.ஜே.பி-க்கும் ஏழைகள் மீது எதற்கு இந்த கருனைபார்வை,பரிவு?  இன்னும் பறிக்க முடியாத  வாக்குகள்  ஏழைகளிடம் இருப்பதும்,அவைகளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு  எய்த்து,பார்க்கவும்தான் இவ்விரு கட்சிகளும்  நாடகம் நடத்துகின்றன. நீலிகண்ணீர் வடிகின்றன. காமராஜர்  கூறியதுபோல ஒருகுட்டையில் ஊறிய மட்டைகள் அல்லவா ?


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?