பாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே?

        கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு.. ஆடு அறுப்பதற்கு முன்பு ஈரல் எனக்குக்குதான் என்பார்கள். அதுபோல நாடாளுமன்ற தேர்தல் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ஆர்.எஸ்.எஸ்.-உம  சங்க பரிவார அமைப்புகளும்,சிவசேனா போன்ற கட்சிகளும் முடிவுசெய்து அறிவித்து விட்டன. நாட்டுமக்கள் அவருக்கு அமோக ஆதரவு தருவதாக இந்துத்துவ பாசிஸ வாதிகள் ஆர்பாட்டஆரவாரம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

         முன்பு  அத்வானியை இதுபோலவே பாசிச வாதிகள் தூக்கிபிடித்து வந்தார்கள். அவரும் பிரதமர் கனவில் மிதந்து, இரத்த யாத்திரை நடத்தினார்,ஏகதா  யாத்திரை நடத்தினார்கள்.           நாட்டில் ஏகப்பட்ட இடங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடத்தி, இந்துக்களுக்கே இந்த தேசம் சொந்தம் என்று கூக்குரல் எழுப்பினார்கள். பாபர் முஸ்லிம் ஆகையால், அவரது பெயரில் மசூதி இருக்கலாமா? என்று விசம விஷத்தை பரப்பினார்கள்,  பாபர் மசூதியை இடிக்க செய்தார்கள்! முஸ்லீம்களை துடிக்கசெய்தார்கள் , கொலைசெய்தும்,கொள்ளையடித்தும் மத துவேஷத்தை வளரத்தார்கள்!  .இந்த்யாவின் இறையாண்மைக்கு சவால் விட்டு அச்சுறுத்தினார்கள்!! 

          ராமர் கோயில் கட்ட என்று இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் செங்கல்கள் பூஜை நடத்தி கொண்டுவந்து அயோத்தியில் குவித்தார்கள். எல்லாம் முடிந்து  பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அத்வானி பிரதமர் ஆக முடியவில்லை.!   அதுமட்டுமில்லை. இன்றுவரை அயோத்தியில் இராமனுக்கு  கோவிலும் கட்ட முடியவில்லை. !  மசூதியை இடித்த குற்றவாளிகள்  அசோக் சிங்கால் முதல் அத்வானி வரை இன்றுவரை ஒருவரும் தண்டிக்கப்பட வில்லை.!

         இன்று  1992-யில்  உத்திர பிரதேசத்தில்  நடத்தப்பட்ட கலவரத்தைப் போல  இப்போதும் நடத்த முயற்சிகளை  இந்துத்துவ பாசிஸவாதிகள் செய்து   வருகிறார்கள். முஸ்லிம்களை ஆத்திரமூட்டியும்,அப்பாவி இந்துக்களிடம் பொய் பிரசாரத்தை தொடங்கியும்  உ.பி-யில் காரியங்கள் நடந்து வருகின்றன.

           குஜராத்தில்  இதுபோன்ற தந்திரத்தை செயல்படுத்தி,  கலவரத்தை ஏற்படுத்தி, வெற்றி கண்ட இந்துத்துவ பாசிசத்தின் கொடுங்கோலன், பாசிஸ கொடுஞ செயல்களைக்  கூசாமல் செய்த, இனியும் செய்யப்போகிற  பாசிச  தளபதி நரேந்திர மோடியை  இந்தியாவின் பிரதமராக இப்போது முன்னிறுத்தி  உள்ளார்கள்.

            குஜராத் கலவரப் புகழ்   மோடியும்  தனது குற்றங்களுக்கு இன்றுவரை தண்டனை பெறாதவர்.  குற்றமே செய்யவில்லை என்று கூறிவருபவர். அப்படிப்பட்ட நரேந்திர மோடியை, இறையாண்மை என்றால் என்ன விலை? என்று கேட்கும் குணமுள்ளவரை,  இந்திய நாடு பிரதமராக அடையும் நிலையை  இந்துத்துவ பாசிசம் ஏற்படுத்தி இருக்கிறது.! 

         பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல, குற்றவாளையையே சட்டம் இயற்ற செய்யும் சாகசத்தை  ஜனநாயகத்தின் பெயரில் பாஸிசம் செயல்படுத்த முனைந்து விட்டது.

        பாசிசத்திற்கு தளபதி ரெடியாகிவிட்டார். அவர் பலிகொள்ளும்  ஆடுகளும் அப்பாவி மக்களும் தான் இன்னும் அறியாமல் இருகிறார்கள்.!  வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை கலவரங்கள் நடக்குமோ,அத்தனைக்கு பலிகள் இருக்கும். பாசிசத்தின்  வலிமைக்கு பயன்படும். என்பது தெரிகிறது.

   இந்த இலட்சணத்தில் நமக்கு கிடைக்கவேண்டிய நரபலி பூஜை நரேந்திர மோடிக்கு போய்விட்டதே என்ற வருத்தம்அத்வானிக்கு.! வயதாகிவிட்டதால் முன்பு போல வேட்டையாட முடியாது அல்லவா? அதனாலதான் அத்வானிக்கு பதில் இன்று அதகள,ரணகள  நரேந்திர மோடிக்கு தளபதி பட்டம்.!


Comments

 1. கிரிமினல் கும்பலின் தலைவனான கேடி மோடி பிரதமராவதா?


  ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தால் தூக்கு.

  அதை விட பன்மடங்கு கொடுமையானதாக முன்நின்று நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று
  குவிக்க‌ வழி நடத்தினால் பிரதமரா?

  13,09.2013 அன்று காலை ஊடகங்களில் வந்த செய்தி; தில்லி பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்த நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிப்பு.

  அதே 13.09.2013 அன்று மாலை ஊடகங்களில் வேறு ஒரு செய்தி; பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.

  இவ்விரு அறிவிப்புகளும் ஒரே நாளில் நிகழ்ந்தது தற்செயலாக இருந்தாலும் இவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள ஓர் ஒற்றுமையையும் அதற்கு கிடைத்த பரிசில் உள்ள வேற்றுமை குறித்துமே என் கேள்வி.

  ஒரு இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததற்கு தூக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டுமெனில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட குஜராத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன என்பது விளங்கவில்லை.

  குஜராத்தில் நடந்தவைகள் அரிதினும் அரிதானதாக இல்லாமல் சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றா என்ன?.

  ஏதோ ஒரு பெண்ணை பார்த்தவுடன் உணர்வுகளின் உந்துதலால் காமம் தலைக்கேறி வன்புணர்வு செய்த அக்காமுகர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கை ஆதரிக்கிறேன்.

  ஆனால் அதை விட பன்மடங்கு கொடுமையானதாக, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசே முன்நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று, நூற்றுக்கணக்கில் இளம் பெண்களை வன்புணர்வு செய்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கியதற்கு என்ன தீர்ப்பை இந்திய நீதிமன்றங்கள் தந்தன.

  தாயின் வயிற்றில் உள்ள சிசுவை நெருப்பில் போட்டு கொளுத்தியதை பாபு பஜ்ரங்கியே பெருமையாய் தெஹல்காவின் முன் சொன்னதற்கு இது வரை தூக்கு வழங்கப்படவில்லையே.

  அது போல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் பங்கு பெற்றதாக நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட மாயா கோட்னானியும் தூக்கில் இடப்படவில்லை.

  இவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்களை வழிநடத்திய மோடியோ இந்திய பிரதம வேட்பாளாரக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி கட்ட வில்லையென்றால் லோனில் வாங்கிய பசுமாட்டை பிடுங்கி கொண்டு செல்லும் வங்கிகளில் கோடிக்கணக்கில் வங்கி பணத்தை ஆட்டையை போட்டால் கண்டு கொள்வதில்லை.

  அது போல் வன்புணர்வே என்றாலும் செய்த தவறை ஒத்து கொண்டு நீதிமன்றத்தில் ஒத்து கொண்டால் தூக்கு தண்டனை வழங்கப்படும், அதுவே அதிகாரத்தில் இருந்து கொண்டு நூற்றுக்கணக்கில் பெண்களை வன்புணர்வு செய்தால் இந்திய பிரதமராகலாம். இனியும் சட்டத்தின் முன் சமம் என்று எவராவது சொன்னால் அவ்வளவு தான்.

  http://www.inneram.com/inneram-specials/readers-mail/1935-will-be-hanged-for-one-rape,-more-means-pm.html

  ReplyDelete
 2. உங்கள் உணவுகள் நியாயத்தின் வெளிப்பாடு..பாசிச இந்துத்துவ கும்பலால் இங்கே அநீதியே, நீதியாக போதிக்கபடுகிறது.மக்கள் பார்த்தும் பாராத குருடர்களாக உள்ளதுதான் வேதனை அளிக்கிறது!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?