கவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்!

           எனக்கும் கவிதைகளுக்குமான  பரிச்சயம்   பள்ளி நாட்களுடன்  ஆனது. கல்லூரி காலத்தில், எல்லோருமே கவிதை எழுதுவதாக தோன்றியதால் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, கவிதைகளை படிக்கும் ஆசை வந்தது. எளிமையான, மரபுக் கவிதைகளும்,பொருள்செறிந்த புதுக்கவிதைகளும் எனக்கு பிடித்தவைகள்!

                                                                                                                                                                               வாழ்க்கை பாதையில் பொருளைத்தேடி,வேலை தேடி,சமூக அங்கீகாரத்தை வேண்டி,எல்லோரையும் போல நானும் ஓடத் துவங்கியபோது, கவிதைகளும் என்னைப்போலவே எனது கவிதைகளும் தொலைந்து போய்விட்டன.

       எனது கவிதைகளின் நேசம் " பஞ்சத்தில்  ஏழை பார்க்கும் பழங்கணக்காக போய்விட்டது. "    இன்றும் கவிதைகள் என்னை கவனிக்கும்போது, அவைகள் என்னை அலை கடலாக்கி, ஆர்பரிக்க செய்து, சூறாவளியாக சுழலற்றுவதும் உண்டு. !  கவிதைகளைப்போல அவைகள் குறித்த கவலைகளும் இப்போது வருகின்றன..

          எது கவிதை? தனிமனிதனின் உணர்சிக்குவியல்களா ?  சமூக ஆதங்கங்களா?  தனிமனித உணர்சிகள்தான் கவிதைகள் என்றால், அவற்றிற்கு  என்ன சிறப்பும் பெருமையும் வேண்டிக்கிடக்கிறது?  சமூக ஆதங்கம்தான் என்றாலும் கூட அவைகளால் என்ன மாற்றம் நேருகிறது?  சொல்லபோனால், கவிதைகளின் நோக்கம் இவைகள் எதுவும் இல்லை!

       ஆனால், தன்னைபோன்ற மனிதர்களுக்கு ஆறுதலும் தைரியத்தையும் கவிதைகள் தருகின்றன.   பாலையில் சோலையாய், உற்ற தோழனாய் , உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், வலிகளுக்கு மறுந்திடுவதாகவும் கவிதைகள்   இருக்கின்றன .


             ஆனால்,கவிதைகள் எனது பார்வையில் இவைகளையும் தாண்டி வரவேண்டும் என்கிறது. . ச முகமாற்றங்களுக்கும் அவைகள் பயன்படவேண்டும்  என்ற எண்ணம் தொன்றுகிறது..  சுதந்திரத்துக்கு முன்பு, பாரதியின் கவிதைகளைப்போல இப்போதும் சமுகத்தை மாற்றும் வீரிய விதைகளாக கவிதைகள்  இருக்க வேண்டும்!   இன்று இணையத்தளத்தில் கவிதைகளைப்   படைக்கும் எல்லோருக்கும் எனது அன்பான வேண்டுகோளாக இதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

                                                    

"எந்திர வித்தைகள் வீணது கற்றோம்,
 என்னெனவோ பல புதுமைகள் பெற்றோம்,
சந்திரன் செவ்வாய் மண்டலத்தோடு,
 சங்கதி பேசும் வழிகளைத்    தேடும்,
அந்தமில்லா பல சக்திகள் பெற்றும்,
 அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்றும் அறிந்திலம் அய்யா
தரணியில் மக்கள் தவிப்பது பொய்யா? "

                                                                             
"காக்கையின் குஞ்சு
பச்சையாகவா
 பரிணமிக்கும்?
இன்று, சீர்செய்கிறேன்..
 நாளை, சீர்பட்டுவிடும் என்று!"


Comments

 1. எது கவிதை?

  o
  ஒரு கவிதையை வாசித்தப்பின் அது தொடர்பானா அத்தனை நினைவுகளையும் மனதில் அசைபோடச்செய்து அந்த கவிதையில் விட்டுபோனதாய் தோன்றுவனவற்றை நம்மை எழுத்தத்தூண்டுவதே நல்ல கவிதை. ( அந்த உந்துதலில் நாம் எழுதுவது நல்ல கவிதையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை )

  ReplyDelete
 2. கவிதை குறித்து நல்ல பயனுள்ள கருத்து
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?