மோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்?

          ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,பங்களா தேஷ்,இலங்கை, நேபாளம், உள்ளிட்ட அகண்ட பாரதத்தை இந்து ராஜ்ஜியமாக  நினைக்கும், தனது லட்சியமாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-யின்  ஏவலாள் நரேந்திர மோடி  பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட உடனே  காவி பண்டாரங்களும், காலிதனம் செய்யும் இந்துத்துவ குரங்குகளும் இந்தியாவில் மோடி அலை வீசுவதாக,இளைஞர்களிடம் எழுச்சி தோன்றி இருப்பதாக பொய்யையே மெய்போல பரப்பி வருகிறார்கள்!


         கள்ளுண்ட கருங்குரங்கு கணக்காய்  மோடியும் மயக்கத்தில் பிதற்ற ஆரம்பித்து விட்டார்.  முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு  இந்நாள் ராணுவ வீரர்களை  இந்துத்வா சதியில் சிக்க வைக்கவும், ஷாகாக்களில்      தனது குண்டர்களுக்கு வெறியுட்டுவதைப் போல நாட்டு மக்களுக்கு வெறியேற்றும் விதமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

            இந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க  மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு  கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.

      தமிழகத்தில்  வரும் 26-ம் தேதி இளந்தாமரை மாநாடு என்ற பெயரில்  பிரசாரத்தை ஆரம்பித்து, தனது பிரதாபத்தை காட்ட இருக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகம்  மோடி வருகையால் ரணகளமாகும் சூழலுக்கு மாறும் ஆபத்து இருக்கிறது. காவிகளின் காலித்தனங்கள் ஜே-அரசுக்கும் அதிகாரத்துக்கும் ஆபத்து ஏற்படுத்துவதுடன் தமிழகத்தின் அமைதிக்கும் ஆப்பு வைக்கும் என்பதை இப்போதே சொல்லலாம்.

      இது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் நடந்து மோடி ஒருவேளை பிரதமர் ஆகிவிட்டால்  என்ன நடக்கும்? முஸ்லிம்கள் வழக்கம் போல பாதிக்கப் படுவார்கள்.  ஆட்சியையும்,அரசு இயந்திரமும்  காவி மயமாகும், பகவத் கீதையும்,  பஜனைகளும் பாடதிட்டங்கள் ஆகும்.  அரசு கஜானா ,மக்கள் வரிப்பணம்,  நலத்திட்டங்களுக்கு செலவழிப்பது மாறி,காவிகளின் வளத் திட்டங்களுக்கு திருப்பிவிடப்படும்.  கல்விகொள்கை என்பது காவி கொள்கை ஆகும்.  இதுபோன்ற சீர்கேடுகள்,கொடுமைகள் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் !

        ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி,சர்வ வல்லமை உள்ள பிரதமராக அவதரித்து இருக்கும்  மோடியால்  இந்தியாவின் அயல் உறவுக் கொள்கையில் மற்றம் ஏற்படும்.பெட்ரோல் முதலியவைகளை  முஸ்லிம் நாடுகளிடம் இருந்து  இறக்குமதி செய்வது  மெல்ல மெல்ல குறையும், பெட்ரோல் அதிகம் உள்ள முஸ்லிம் நாடுகளை ஏற்கனவே  ஆக்கிரமித்து, அடாவடி செய்து  பெட்ரோல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமரிகாவிடம் பெட்ரோலுக்கும்,ஆயுதத்தை போல கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமரிக்க வல்லரசு போடும் அணைத்து கண்டிசன்களுக்கும் ஆமாம் போடவேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும். 

        ஆமாம் போடுவதை இந்தியாவில் எதிப்பவர்களை சமாளிக்க அண்டை நாடுகளிடம் அடிக்கடி உரசிகொள்ளவும்,சீண்டிபார்க்கவும் வேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி, அகண்ட பாரத கனவை, இலட்சியத்தை வைத்திருக்கும்   ஆர்.எஸ்.எஸ். கொள்கையால், பாகிஸ்தானுடனோ, சீனாவுடனோ போர் தொடுக்கவும் மோடி முனையலாம். இந்துவை ராணுவமாக்கும்   இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தத்தால்...  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்  அது  மூன்றாம் உலகபோராக  மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று  நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.! 

        மோடி.. நாஸ்டர்டாம் கணிப்பையும், ஆர்.எஸ்.எஸ். கனவையும் நிறைவேற்ற மாட்டார் என்பதை எப்படி நம்ப முடியும்..?

Comments

 1. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு

  ReplyDelete
 2. டேய் யோக்கியரு...
  ரொம்ப மண்டைய ஓடச்சுக்காத..நாடு நாசமாப் போய்கிட்டு இருக்கு...நீ எதிர்பாக்குற உரிமை மசிரு இங்க யாருக்கும் இல்லை..போட்டி தட்டுறத விட்டுட்டு போய் ஒரு எம்மெல்லே வ கேள்வி கேளு...நாறிடுவ ..ஓட ஓட வெரட்டுவான்...

  ஏற்கனவே இருக்குற மசிரானால ஒன்னும் இதுவர உருப்புடல...எல்லா மசிரானுக்கும் வாய்ப்பு குடுத்தாச்சு...இவனுக்கும் வாய்ப்பு குடு...என்ன பண்ணுறான்னு பாப்போம்...

  ReplyDelete
 3. 55 years congress government what did to common indian people ?

  ReplyDelete

 4. இந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.////
  அப்படியென்றால் மன்மோகன் சிங் சீனாவையும், பாகிஸ்தானையும் தலையில் தட்டி இந்தியாவின் பலத்தை நிரூபித்துவிட்டார் என்கிறீர்களா?... குட்டி நாடு இலங்கை சீனாவையும் ,பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை ராஜதந்திரம் என்ற பெயரில் டம்மியாக்கி வைத்திருக்கிறது... அண்டை நாடுகள் நாம் என்ன செய்தாலும் இந்தியாவில் கேட்க ஆளில்லை எனும் ரகத்தில் அடாவடி செய்யும்போதும்... எங்கே எதில் எதைச்சுருட்டலாம் என கங்கணம் கட்டித்திரியும் காங்கிரஸ் அரசு சூப்பர் என்கிறீர்களா?...

  இது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் நடந்து மோடி ஒருவேளை பிரதமர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்? முஸ்லிம்கள் வழக்கம் போல பாதிக்கப் படுவார்கள்.///

  குஜராத்தில் மூன்றாவது முறையாக மோடி முதலமைச்சர் ஆகியிருக்கிறார்... இப்போது குஜராத்தில் முஸ்லீம்களே இல்லை... மொத்த முஸ்லீம்களையும் மோடி கொன்று குவித்து விட்டார் என்கிறீர்களா?...

  அமரிகாவிடம் பெட்ரோலுக்கும்,ஆயுதத்தை போல கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமரிக்க வல்லரசு போடும் அணைத்து கண்டிசன்களுக்கும் ஆமாம் போடவேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும்...

  இப்போதிருக்கும் காங்கிரஸ் அரசு இந்திரா காந்தி போல அமெரிக்காவை எதிர்த்து தில்லாக ஆட்சி செய்கிறது என்கிறீர்களா?... அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டும் வேலையைச்செய்வதை மன்மோகன் மற்றும் காங்கிரஸ்தான் என்பது உங்களுக்கு இன்னமும் தெரியாதா?...

  மூன்றாம் உலகப்போர் மோடியால்?... செம காமெடி சார்... தாய்நாட்டை ஆக்கிரமிப்பவர்களை தலையில் குட்டி தட்டி வைக்க வேண்டுமா?... இல்லை வடிவேலு பாணியில் அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய கதைபோல கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா?...

  கொஞ்சம் சிந்தியுங்கள் சார்... எழுத வேண்டும் என்பதற்காக எதையோ எழுதாதீர்கள்... மோடி ஒன்றும் யோக்கியனில்லாமல் இருக்கலாம்... ஆனால் காங்கிரஸ் எனும் திருட்டுகூட்டத்தை விரட்ட மோடி எனும் பாப்புலாரிட்டி இன்று தேவை என்பதே நிதர்சனம்...

  ReplyDelete
 5. இது போன்ற கட்டுரைகள் மோடியின் ஆதரவை அதிக்கரிக்கவே செய்யும்.

  ReplyDelete
 6. மோடியை எதிர்ப்பதால் காங்கிரசை ஆதரிப்பதை அர்த்தம் இல்லை இவை இரண்டுமே விரட்ட பட வேண்டும்

  ReplyDelete
 7. மோடி மீதுள்ள பயத்தில் கண்டபடி உளறுகிறீர்கள்!

  ReplyDelete
 8. எவ்வளவோ பாத்துட்டோம் மோடியின் மோடிவித்தையயும் பார்ப்போமே

  ReplyDelete
 9. நீங்க தான் என் அடுத்த படத்தோட ரைட்டர், டைரக்டர்... ஆப்பீஸுக்கு வந்து அட்வான்ஸை வாங்கிக்கோங்க.

  …-விசயகாந்து
  …தேதிமுக
  ……மதுரை குறுக்குசந்து
  …மதுரை

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?