Posts

Showing posts from September, 2013

ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இலட்சணம்...

தேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து  இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.
         ஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள்.! ஆர்.எஸ்.எஸ். காவிக்  கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி  வந்தார்கள்.
          அதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள்,  முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போது,  இந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக  போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை! மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர்  …

திருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்

Image
திருச்சிக்கு நரேந்திர மோடி வந்திருப்பது  தமிழர்களுக்கு வரப்போகும் மிகபெரிய  வேதனைக்கு சான்றாகும்.  தமிழகத்தில்  வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்-யும் அதன் பயங்கரவாதத்தை நடைமுறைபடுத்தும் கட்சியான பி.ஜே.பி-யும் வளர்வதும், அதற்க்கு ஆதரவு தருவதும் எரியும் கொள்ளியால் தலையை சொறிந்து கொள்வதாகும்.

         ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரியத்தை  அடிப்படையாக கொண்டது. தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டுக்கு எதிரானது. தமிழ் மொழிக்கு எதிரானது  என்பதால் அதனை  ஆரம்பம் முதலே தமிழர்கள்  எதிர்த்து வந்தனர் என்பதே வரலாறு. இன்று இந்த வரலாற்றை மறந்து தமிழர்கள் அறிய ஆதிக்க ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவது. தாயை வெறுத்துவிட்டு,தாசிக்கு மரியாதை தரும் இழிவுக்கு ஒப்பானதாகும்.         ஒரு பியூனாகபார்ப்பனன்  இருந்தாலும் அவனது காலை  பெரிய அதிகாரியாக (மற்றவர்கள்) இருப்பவர்கள் தொட்டு வணங்க வேண்டும் என்று  குறிப்பிட்டு  கோல்வாக்கர்( bunch of thoughts )எழுதினார்.  ஆர்.எஸ்.எஸ்-இன் பிராத்தனை பாடல் என்ன தெரியுமா? 
நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்    நாங்கள் உழைக்கும் புண்ணிய நாடே உன…

தமிழர்களும் இந்தியாவும் இலங்கையும்..

Image
பேரறிஞர் அண்ணா அவர்கள்," வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்று மத்திய அரசும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியும் தென்மாநிலங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவது குறித்து அன்றே கூறினார்.           அண்ணா கூறிய மத்திய அரசின் பாரபட்சம் இன்றும் தொடர்கிறது. அன்றும் காங்கிரஸ் ஆட்சி இன்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் நடைபெறுகிறது. காங்கிரசின் பாரபட்சம், குறிப்பாக அது தமிழர்கள் மீதும் தமிழகத்தின் மீதும் கொண்டுள்ள பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.!


         தமிழர்கள் மீது  கடும் வெறுப்புணர்வை காட்டுவதற்கு காரணம், ஆதியில் இருந்து  பார்ப்பனிய பாசிசத்தை சாடியும், அதற்கு எதிராக திராவிடம் பேசியும் வந்ததாகும். !

           இன்று திராவிடம் என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது. திராவிடக் கொள்கை நீர்த்து போய்விட்டதாக தோன்றுகிறது. ஒட்டுமொத்த திராவிடர்களை,தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி தலைமையேற்கும் ஆற்றலை தமிழக தலைவர்கள் இழந்துவிட்டார்கள்.தங்களுக்குள் போட்டியும் ஆதிக்க குணமும் கொண்டு, சண்டை இட்டதால் ஆதிக்க சக்தியான பாசிச சக்திக்கும்,அதன் ஆட்சியாளர்களுக்கும…

மோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்?

Image
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,பங்களா தேஷ்,இலங்கை, நேபாளம், உள்ளிட்ட அகண்ட பாரதத்தை இந்து ராஜ்ஜியமாக  நினைக்கும், தனது லட்சியமாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-யின்  ஏவலாள் நரேந்திர மோடி  பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட உடனே  காவி பண்டாரங்களும், காலிதனம் செய்யும் இந்துத்துவ குரங்குகளும் இந்தியாவில் மோடி அலை வீசுவதாக,இளைஞர்களிடம் எழுச்சி தோன்றி இருப்பதாக பொய்யையே மெய்போல பரப்பி வருகிறார்கள்!


         கள்ளுண்ட கருங்குரங்கு கணக்காய்  மோடியும் மயக்கத்தில் பிதற்ற ஆரம்பித்து விட்டார்.  முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு  இந்நாள் ராணுவ வீரர்களை  இந்துத்வா சதியில் சிக்க வைக்கவும், ஷாகாக்களில்      தனது குண்டர்களுக்கு வெறியுட்டுவதைப் போல நாட்டு மக்களுக்கு வெறியேற்றும் விதமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

            இந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க  மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு  கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.

      தமிழகத்தில்  வரும் 26-ம் தேதி இளந்தாமரை மாநாடு என்ற பெயரில…

அரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..

Image
ராகுல் காந்தி  காங்கிரஸ் கட்சியும்  ஆட்சியையும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவதாக சமீபத்தில் கூட்டமொன்றில் ஆவேசமாக பேசியுள்ளார். வழக்கம் போல பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

          காங்கிரஸ் கட்சி ஆகட்டும்,பி.ஜே.பி-யாகட்டும்  பன்னாட்டு தரகு முதலாளிகள் கார்பரேட் கம்பனிகள், பெரும் தொழிலதிபர்களின் கண் அசைவுக்கும்,விருப்பத்திற்கும் ஏற்ப கைகட்டி  சேவகம் பார்க்கும் அடிமை ஊழியர்களாகவே இருந்து வருகின்றன.


                   இதுவரை ஏழைகளின் நலனுக்காக,அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக  இவ்விரு கட்சிகளும் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. மாறாக மேலும் மேலும்  ஏழ்மையை வளர்த்து,ஏழைகளின் வாழ்கையை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வந்துள்ளன.

       பிகாரின் டொங்க்ரியா கோண்டு  இனமக்களின் வாழ்வாதாரமாக பன்னெடுங்காலம் இருந்துவந்த நியம்கிரி மலை  இப்போது லண்டனில் வாழ்ந்துவரும் இந்திய கோடிஸ்வரரான அனில் அகர்வால் என்பவருக்கு சொந்தமான வேதாந்தா என்ற மிகப்பெரிய சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது. இதனால் ஆயிரகணக்கான பழங்குடியின மக்களின் வாழ்க்கை கேள்விகுறி ஆகிவிட்டது.         …

உ.பி கலவரத்தின் பயங்கரம்..

Image
உ.பியின் முஸாஃபர் நகரில் நடந்த கூட்டுப் படுகொலையின் கொடூரத்தை கண்டு முஸாஃபர்நகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்கள் கூட நடுங்கிப் போயுள்ளனர். மருத்துவர்களின் அனுபவத்தை கேட்டால் நெஞ்சு பதறும். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக பிளந்துள்ளனர். தீயில் பொசுக்கிய உடல்கள் ஆணா? பெண்ணா? என்று கூட அடையாளம் காணமுடியவில்லை. ஒன்பது வயது சிறுவனின் தலையை அடித்து சிதைத்துள்ளனர். செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 12 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழு மாநிலத்தில் மிகக்கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பலியானவர்களின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக இரவு,பகலாக பணியாற்றி வருகின்றனர்.53 உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் 40 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 13 உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கோரமாக உள்ளன. வெள்ளிக்கிழமை மிகக்கோரமான நிலையில் போப், சிகேரா ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து வந்த இரண்டு ஆண்களின் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. பெரும்பாலானவை கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.      பு…

பாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே?

Image
கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு.. ஆடு அறுப்பதற்கு முன்பு ஈரல் எனக்குக்குதான் என்பார்கள். அதுபோல நாடாளுமன்ற தேர்தல் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ஆர்.எஸ்.எஸ்.-உம  சங்க பரிவார அமைப்புகளும்,சிவசேனா போன்ற கட்சிகளும் முடிவுசெய்து அறிவித்து விட்டன. நாட்டுமக்கள் அவருக்கு அமோக ஆதரவு தருவதாக இந்துத்துவ பாசிஸ வாதிகள் ஆர்பாட்டஆரவாரம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

         முன்பு  அத்வானியை இதுபோலவே பாசிச வாதிகள் தூக்கிபிடித்து வந்தார்கள். அவரும் பிரதமர் கனவில் மிதந்து, இரத்த யாத்திரை நடத்தினார்,ஏகதா  யாத்திரை நடத்தினார்கள்.           நாட்டில் ஏகப்பட்ட இடங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடத்தி, இந்துக்களுக்கே இந்த தேசம் சொந்தம் என்று கூக்குரல் எழுப்பினார்கள். பாபர் முஸ்லிம் ஆகையால், அவரது பெயரில் மசூதி இருக்கலாமா? என்று விசம விஷத்தை பரப்பினார்கள்,  பாபர் மசூதியை இடிக்க செய்தார்கள்! முஸ்லீம்களை துடிக்கசெய்தார்கள் , கொலைசெய்தும்,கொள்ளையடித்தும் மத துவேஷத்தை வளரத்தார்கள்!  .இந்த்யாவின் இறையாண்மைக்கு சவால் விட்டு அச்சுறுத்தினார்கள்!! 

கவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்!

Image
எனக்கும் கவிதைகளுக்குமான  பரிச்சயம்   பள்ளி நாட்களுடன்  ஆனது. கல்லூரி காலத்தில், எல்லோருமே கவிதை எழுதுவதாக தோன்றியதால் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, கவிதைகளை படிக்கும் ஆசை வந்தது. எளிமையான, மரபுக் கவிதைகளும்,பொருள்செறிந்த புதுக்கவிதைகளும் எனக்கு பிடித்தவைகள்!

                                                                                                                                                                               வாழ்க்கை பாதையில் பொருளைத்தேடி,வேலை தேடி,சமூக அங்கீகாரத்தை வேண்டி,எல்லோரையும் போல நானும் ஓடத் துவங்கியபோது, கவிதைகளும் என்னைப்போலவே எனது கவிதைகளும் தொலைந்து போய்விட்டன.

       எனது கவிதைகளின் நேசம் " பஞ்சத்தில்  ஏழை பார்க்கும் பழங்கணக்காக போய்விட்டது. "    இன்றும் கவிதைகள் என்னை கவனிக்கும்போது, அவைகள் என்னை அலை கடலாக்கி, ஆர்பரிக்க செய்து, சூறாவளியாக சுழலற்றுவதும் உண்டு. !  கவிதைகளைப்போல அவைகள் குறித்த கவலைகளும் இப்போது வருகின்றன..

          எது கவிதை? தனிமனிதனின் உணர்சிக்குவியல்களா ?  சமூக ஆதங்கங்களா?  தனிமனித உணர்ச…

உச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..

Image
தண்டனை வழங்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டி இடுவதை தடுக்கும் தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய   உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது.

          அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் பொது,ஜனநாயகம் கேள்விகுறியாகிவிடுகிறது. மக்களின் சேவை,பொதுநலம் போய்விடுகிறது. சுயநலமும்,ஊழலும்,முறைகேடுகளும் நியாயமாகி விடுகிறது. அரசு இயந்திரம் செயல்பட முடியாதவாறு சர்வாதிகாரம் தலைதூக்கி விடுகிறது. நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாகி,அடிப்படை கட்டமைப்பே சீரழிந்து விடுகிறது.  அத்தகைய நிலைக்கு  இந்தியா ஆட்பட்டு வருகிறது.


             ஜனநாயக போர்வையில்  கிரிமினல் குற்றங்களை செய்து விட்டு, தேர்தலில் நின்றும், வென்றும்  வரும் அரசியல்வாதிகள் இன்று அனைத்து  கட்சிகளிலும் அதிகரித்து வருகின்றனர். . இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிமினல்களைத் தவிர யாரும் இந்திய அரசியலில் ஈடுபடவும், நிலைக்கவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆளுக்கு தகுந்தவாறு  நீதியும்  தர்மமும்,செயல்படும்  நிலை வந்துவிடும்.

           இதுபோன்ற கேடுகள் ஏற்படக்கூடாது என்பதால், தேர்தலில் கிரிமினல்கள் போட்டி இடுவதை தட…