இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்

          இந்தியாவுக்கு குறிப்பாக ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் கள்ள தொடர்பு  இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

          இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பும் மிக முக்கிய விசயங்கள் குறித்து பொதுமக்கள் பரபரப்பாக விவாதிக்கும் நிலையிலும், பாரளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி தவிக்கும்போதும், உச்சநீதிமன்றம் கடுமையாக மத்திய அரசை விமரசித்து கருத்துக்கள் வெளியிடும்போதும்  இந்த பிரசனைகளை திசைதிருப்பும் விதத்தில்  பாகிஸ்தான்  தீவிரவாதிகள் நடந்துகொள்கிறார்கள! 

         அதாவது ஆளும் இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நெருக்கடியை உணர்ந்து, அறிந்து  அந்த நெருக்கடியில் இருந்து  இந்திய அரசையும்,  காங்கிரசையும் காப்பாற்றவேண்டி    இந்தியாவிலோ, அல்லது இந்திய எல்லையிலோ  துப்பாக்கி சூடு  நடத்துவது, ஊடுருவல் செய்வது    அல்லது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது போன்ற நிகழ்சிகள்  நடத்தபடுகின்றன.

        இவ்வாறு  செய்வதன் மூலம் இந்தியா ஆளும் அரசுக்கு ஏற்படும் நெருக்கடி மறக்க வைக்கப்பட்டுகிறது.,   அனைவரும்  பாகிஸ்தானின் தீவிரவாதம், எல்லை பயங்கவாதம், எதிரிகளின் அத்துமீறல், அராஜகம் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய அரசும்   எச்சரிகை விடுகிறது , எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து,,போராட்டம் நடத்துகின்றன. ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ,மக்கள் ஆர்வமாக இதுபோன்றவற்றில்  கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

        இவ்வளவும்  பாகிஸ்தான் தீவிரவாதிகளால், நடைபெறுவதால்  மத்திய அரசுக்கு ஏற்படும்  நெருக்கடிகள்,தலைவலிக்கு  தீர்வு ஏற்படுகிறது. இதுபோல  பலமுறை  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  தீர்த்துவைத்து இருகிறார்கள்  என்பதை பாராளுமன்றம் கூடும் நாட்களில் ஏற்பட்ட நிகழ்சிகள்,அசம்பாவிதங்களை பார்த்தல் நாமும் புரிந்துகொள்ள முடியும்.  முன்பு ஒருமுறை பாராளுமன்றம் கூடிய பொது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  குண்டு வெடிப்பு நடந்தது.  இப்போது காஸ்மீர் எல்லையில்  5 ராணுவ வீரர்கள்  சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

       அதானால்தான்   பாகிஸ்தான் தீவிரவாதிகள்  இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போது  எல்லாம்  அந்த நெருக்கடியை தீர்த்துவைக்க உதவுகிறார்கள். என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

     இல்லையில்லை. நெருக்கடி ஏற்படும்போது அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பிரசனைகளை திசைதிருப்பவும்  ஆளும் அரசே தனது  உளவுத்துறை,ராணுவம் மூலம் செய்கிறது என்று  எனக்கு சந்தேகம் இல்லை.  சிலருக்கு  ஏற்பட்டால்  நான்  பொறுப்பில்லை!

Comments

  1. யோசிக்க வேண்டிய கோணம்தான். அரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது திடீரென்று நாட்டுப் பற்று கிளப்பப்படுகிறது.

    ReplyDelete
  2. பாகிஸ்தான் ISI நமது காவி ஆர்.ஸ்.ஸ். மற்றும் இஸ்ரேலிய மொசாத் அமைப்புகளால் தான் கட்டுபடுதப்படுகிறது என்பது தான் உண்மையாக இருக்க முடியும்...தெஹெல்கா பத்திரிக்கை col.புரோஹிட் (ஆர்.ஸ்.ஸ்.) என்ற ராணுவ வீரன் கைது செய்யப்பட்ட பொது ஒளிபரப்பிய ரகசிய வாக்குமூலம்...

    http://www.tehelka.com/malegaon-mecca-masjid-ajmer-sharif-why-are-tapes-implicating-ultra-hindutva-outfits-in-terror-blasts-gathering-dust/2/

    இவர்களின் கைவரிசை அங்கும் உள்ளது...அதனால் தான் பாகிஸ்தானை எதிரி நாடாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.நமது பாதுகாப்பு துறை அமைச்சர் சொல்லும்பொழுது கூட தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்களின் உடையில் என்று தான் கூறினார்.இவர்களின் பாசிச கொள்கை என்னவென்றால் இவர்களே ஒரு பிரச்சைனையை உருவாக்கி அதை பூதாகரமாக சித்தரித்து பின்னர் அதை சரி செய்கிறேன் என்பார்கள்...நம் நாட்டில் ராணுவ பலத்திற்கு பாகிஸ்தான் வெறும் அரை மணி நேர வேலை,ஏன் அதை செய்யவில்லை?

    ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?