கச்சத் தீவு மிச்சமாகுமா ?

        கச்சத் தீவை இலங்கைக்கு  கொடுத்து இந்தியா  ஒப்பந்தம் செய்ததால் தமிழக மீனவர்கள்  படும்  துயரம்  தொடர்கதையாகி விட்டது.

     "கையாலாகாதவன் பெண்டாட்டி கண்டவனுக்கு எல்லாம் வைப்பாட்டி" என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல ஆகிவிட்டது,  மீனவர்கள் நிலை.!    இந்திய அரசின்  கையால்  ஆகாத  (மெத்)தனத்தால்  இந்திய கடலும் கூட .. தமிழக மீனவர்களின் படுகொலைக் களமாக மாறிவிட்டது.   சுமார் 600 மீனவர்கள்  இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர்.  600 தமிழ் பெண்களின் தாலி அறுபட்டு,விதவைகள் ஆயினர். அவர்களது குழந்தைகள்  அனாதைகளாகினர்.! 


          இவ்வளவு நடந்த பிறகும், இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இலங்கை அரசை கண்டிக்காமல் இருகிறது.    நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன்றும் கூட இலங்கைச் சிறையில் உள்ளனர்.  அவர்களை விடுதலை செய்யகூட  உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசு உள்ளது.  கேட்டால்,  இலங்கை நட்பு நாடு என்கிறது.! 

    இந்திய அரசின்  நட்பு  நாடான இலங்கை அரசு, இந்தியா உடன் கொண்டுள்ள  நட்புக்கு  மரியாதையால், தமிழக  மீனவர்களின் வாழ்க்கை சீரழிகிறது !   இந்திய பெருங்கடல்  மீனவர்களின் இரத்தத்தால் செந்நீராகிறது . கடலில் உள்ள உப்பு போதாது என்று  மீனவர்களின் கண்ணீரும் சேர்க்கிறது.!
 
           இந்த நிலையை மாற்ற,மீனவர்களின் துயரம் தீர  இந்தியா  முன்வராமல் இருக்கிறது.   இலங்கை நட்பு நாடு  என்பது  சரி என்றே இருக்கட்டும், தமிழர்கள்  இந்திய அரசுக்கு அன்னியர்களா?  எதிரிகளா ?   தமிழர்கள் இந்தியர்கள்  இல்லையா?  சொந்த மக்களை  கொன்று குவிக்கவும், துயரத்தில் ஆழ்த்தவும் நட்பு  நாடாகவே இருந்தாலும், இலங்கையை அனுமதிக்கலாமா?

             தனது வீட்டில்  அத்துமீறி ஒருவன் நடந்துகொண்டால்,  நண்பனாக இருந்தாலும் அதனை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம் !   இலங்கையின் செயலை   இந்திய அரசு  எப்படி ஏற்றுகொள்கிறது? ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? நிர்பந்தம்   என்ன ? என்பதற்கு பதிலை இன்றுவரை இந்திய அரசு  சொல்லவில்லை !


         ஒருவேளை  ராஜீவ் காந்தி  கொலையின்  இன்னொரு கோணம், இரகசியத்தை தெரிந்துகொண்டு, இந்தியாவை இலங்கை மிரட்டுகிறதா? அதனால்தான் மன்மோகன் அரசு,  இந்திய நாட்டு மக்களை கொன்றாலும், எது நடந்தாலும்    இலங்கையை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்து வருகிறதா? சந்தேகம் எழுகிறது.!

      ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே செய்த ஒப்பந்த்ததைகூட நிறைவேற்ற இலங்கை அரசு இப்போது மறுத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, இதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை,இலங்கை தமிழர்களின் தொல்லைகள் குறையாது என்றுதானே  பிரபாகரன்  ஏற்க மறுத்தார். அதனால்தானே  அமைதிப்படை என்று  இந்திய படை  இலங்கை சென்று  அதகளம் செய்தது.!


         விடுதலைப் புலித் தலைவர். பிரபாகரன் எதிர்த்த  ஒப்பந்தத்தை  இலங்கை இப்போது நிறைவேற்ற முடியாது என்கிறது !  நிறைவேற்ற வலியுறுத்தி வந்த இந்தியா  என்ன செய்ய வேண்டும்?  நிறைவேற்ற இலங்கையை  நிர்பந்தம் செய்ய வேண்டாமா ? ஆனால், அப்படியும்  செய்யாமல் இந்தியா அமைதி காத்து வருகிறது.  அமைதி காப்பது  ஏன் என்று  தெரிய வில்லை !

      போகட்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே  ஒப்பந்தத்தை  மதிக்காமல், நிறைவேற்றாமல்   தொடர்ந்து   இலங்கை மறுத்து வரும் நிலையில்  இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

     இலங்கையானது  இந்தியாவுடன், செய்துகொண்ட  இருநாட்டுக்கு இடையிலான ஒப்பந்த்தத்தை நிறைவேற்றாமல், மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறி நடந்துகொள்வதை காட்டி,  இலங்கையுடன்  ஏற்படுத்திக்கொண்ட  கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை இந்தியாவின் கட்டுப்பாட்டில்  மீண்டும் கொண்டுவர நடவடிக்கை  எடுக்க முன்வரவேண்டும்.  அதற்கும் இந்தியா முன்வரவில்லை என்றால், இந்திய அரசு  கையாலாகாத அரசாக,  மீண்டும் கையே இல்லாத அரசாகவே இந்திய அரசு  இருக்கும் !

தமிழக மீனவர்களின் கண்ணீரும் செந்நீரும்  இனியும் சிந்தபோகிறதா ? இல்லை இந்தியா கச்சத் தீவை மீட்கப்போகிறதா?  என்பது   நவம்பருக்குள் தெரிந்து விடும்!Comments

  1. If you cross the control lines and enter into the territority of sri lanka this will happen.Any government will not tolerate this type of intrudence.

    ReplyDelete
  2. பாஸு. நா உங்க வூட்டுக்குள்ள வந்து உங்க உடமைகல எடுத்துக்கிட்டு போனா , நீங்க என்ன பண்ணுவீங்க? சிரிச்சுக்கிட்டு டாட்டா சொல்லுவீங்களா??இல்லதானே. அதுதான் இலங்கையிலயும் நடக்கிறது. இந்திய அரசாங்கமோ/ தமிழக அரசாங்கமோ செய்ய கூடியது, இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் சொல்ல விடாமல் ரோந்து நடவடிக்கைகள போற்கொள்ளலாம். இல்ல புடி படுபவர்கள மீட்கலாம். இன்னுமொரு முக்கிய செய்தி. இலங்கை கடற்படையில் இந்த ரோந்து நடவடிக்கைகளீல ஈடுபடுபவர்களில் ஒன்ரிரண்டு இஸ்லாமியர்களும் இருப்பார்களாம். முத்தலீப் முத்தலீப்ப்னு ஒரு இஸ்லாமியர். புலிகளுக்கு எதிராக உலவு வேலை பார்த்ததாக 05/06 கொல்லப்பட்டாராம். அவர் கூட முன்னம் இந்த கடற்படையில் மொழிமாற்றுக்காக இணைக்கப்ட்ட தமிழ் பேசும் இஸ்லாமியரான்.

    ReplyDelete
  3. தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்னவானார்கள்? இவர்களை அந்தப் பகுதி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையா அல்லது (இதற்கும் மீனவர்கள் கடத்தல்) அவர்களுக்கும் சம்பந்தமே இல்லையா? மக்களுக்கு ஏன் இன்னும் உணர்ச்சியற்று இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் காரணம் தேர்தலின் போது அவர்கள் கொடுத்த எச்சில் சாராயத்துக்கும் பிரியானிக்கும் நமது மக்கள் விலைபோனதே. இன்னும் நிறைய பார்க்க போகிறோம். நமக்கு, நமது தமிழனுக்கு அன்றைக்கும் சூடு சொரனை வராது.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?