Posts

Showing posts from August, 2013

மணிமேகலை சோனியாவும் ஆ'புத்திரன் கை'மாறும் ...

Image
கலைஞர் கருணாநிதி  உணவு பாதுகாப்பு  சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்து உள்ளதுடன் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய சோனியா காந்தியை சிலப்பதிகாரம்  கவிய மங்கை மணிமேகலைக்கு  நிகராக  ஒப்புமை படுத்தி பாராட்டி உள்ளார். 

         உணவு பாதுகாப்பு மசோதா சட்டமாக ஆனதால்  மட்டுமே அதனால் உணவு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்ற மாய தோற்றம்  இப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


          இந்திரா காந்தி  கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது,தமிழர்கள் அத்தீவில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும், அங்கே  மீன்பிடி வலைகளை உலர்த்திகொள்ளவும்,தீவில் தங்கவும் எந்த தடையும் இல்லை, பிரச்னையும் இல்லை என்று கூறப்பட்டது.  ஆனால்,  இப்போது அந்த உறுதிமொழி, உத்திரவாதம் நடைமுறை படுத்த படுகிறதா? இருக்கிறதா? நடைமுறையில்  இருந்தால்  தமிழக மீனவர்கள்  நூற்று கணக்கில் பலியாகி இருப்பார்களா?  ஆகவே,  ஒரு ஒப்பந்தம், சட்டம்  வந்துவிட்டதாலேயே  அதனால்  பயன் ஏற்பட்டு விடுவதில்லை!

          தமிழகத்துக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின்  அளவு குறைக்கபடாது என்ற உறுதிமொழிக்கு எவ்வளவு காலம் ஆயுள் இருக்கும் என்று தெரியவில்லை!  மேலும் மூன்றா…

ஜனநாயக திரைக்குப் பின்னால்..

Image
நிலக்கரி ஒதுக்கீட்டில்  முறைகேடு நடந்து இருக்கிறது. 1.80 இலட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டில் பிரதமரும் சம்பந்தப்பட்டு உள்ளார். அதனால் பதவி விலக வேண்டும் என்று  போராடி  பாராளுமன்றத்தை முடக்கினர்.

       மவுன சாமியார் மன்மோகன் சிங் வாயே திறக்க வில்லை. !  பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்கவும்  மறுத்துவந்தார். ஒருவழியாக ஊழல் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரித்து வந்தது.


      வழக்குக்கு தேவையான ஆவணங்களை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். வழக்கை நடத்த   மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில்  முறையிட்ட பிறகு,  நிலக்கரி ஒதுக்கீடு,சுரங்க ஊழல் தொடர்பான  ஆவணங்களை காணோம் என்று இப்போது அறிவித்து இருகிறார்கள்.

        இப்போதும் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி  போராடி வருகிறது. இந்திய ஜனநாயத்தில் இதுபோன்ற போராட்டம் எல்லாம் புதிதல்ல.!

          போராட்டத்தால் செய்யப்பட்ட ஊழலும்,கொள்ளை போன செல்வமும் திரும்ப கிடைத்ததாக வரலாறே இல்லை.   எதிர்கட்சிகள் இப்படிதான் கொஞ்ச  காலத்துக்கு ஆர்ப்பாட்டம் செய்து விட்டு ,  அப்புறம் வேறு ஊழ…

அதிகார வெறியால் ஏற்படும் ஆபத்துகள்..

Image
மக்களுக்கு தொண்டு செய்யும் மகத்தான பணியாக கருதப்பட்ட  ஆட்சி அதிகாரம் இன்று அதன் நோக்கத்தை  இழந்துவிட்டது. உலகம் எங்கும் இப்போது நடந்துவரும் செயல்கள், ஆட்சி அதிகார வெறிக்கு  சான்றுகளாக உள்ளன.

      பல நாடுகளின்   ஆட்சியாளர்கள் மக்களைபற்றியோ, நாட்டின் முன்னேற்றத்தை பற்றியோ,சிறிதும் அக்கறை இன்றி, இருந்து வருகிறார்கள்.எதைபற்றியும் கவலை இன்றி,சுகபோகங்களில் திளைத்து வருகின்றனர்.


        ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்களை எதிர்த்து  போராட்டம் நடத்தும் மக்களைத் தங்கள் எதிரிகளாக கருதி, கொன்று குவிக்கவும் ஆட்சியாளர்கள் தயங்குவதில்லை !  சிரியாவில்  ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது ரசாயன வாயு குண்டுகள் போடப்பட்டு,1500-க்கு மேற்பட்டவர்களை ஆட்சியில் உள்ளவர்கள் கொன்றுள்ள செயல் நெஞ்சை கலங்க வைக்கிறது.

ஸ்ரீலங்காவில்  இவ்வாறு  அந்நாட்டு அரசு  ,லட்சக்கணக்கான   தமிழர்களை  கொன்றுள்ளது.  எகிப்தில் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில்  பலர் இறந்தனர். ஆப்கானிஸ்தானில்  இன்றுவரை தாலிபான்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் போராட்டங்கள் இருந்துவருகிறது. பாகிஸ்தானில் இரண்டு பிரிவாக அதிகார போட்டியில் அப…

கச்சத் தீவு மிச்சமாகுமா ?

Image
கச்சத் தீவை இலங்கைக்கு  கொடுத்து இந்தியா  ஒப்பந்தம் செய்ததால் தமிழக மீனவர்கள்  படும்  துயரம்  தொடர்கதையாகி விட்டது.

     "கையாலாகாதவன் பெண்டாட்டி கண்டவனுக்கு எல்லாம் வைப்பாட்டி" என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல ஆகிவிட்டது,  மீனவர்கள் நிலை.!    இந்திய அரசின்  கையால்  ஆகாத  (மெத்)தனத்தால்  இந்திய கடலும் கூட .. தமிழக மீனவர்களின் படுகொலைக் களமாக மாறிவிட்டது.   சுமார் 600 மீனவர்கள்  இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர்.  600 தமிழ் பெண்களின் தாலி அறுபட்டு,விதவைகள் ஆயினர். அவர்களது குழந்தைகள்  அனாதைகளாகினர்.! 


          இவ்வளவு நடந்த பிறகும், இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இலங்கை அரசை கண்டிக்காமல் இருகிறது.    நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன்றும் கூட இலங்கைச் சிறையில் உள்ளனர்.  அவர்களை விடுதலை செய்யகூட  உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசு உள்ளது.  கேட்டால்,  இலங்கை நட்பு நாடு என்கிறது.! 

    இந்திய அரசின்  நட்பு  நாடான இலங்கை அரசு, இந்தியா உடன் கொண்டுள்ள  நட்புக்கு  மரியாதையால், தமிழக  மீனவர்களின் வாழ்க்கை சீரழிகிறது !   இந்திய பெருங்கடல்  மீ…

புலிவேசம் போடும் இந்திய பொருளாதாரம்...

Image
புதிய பொருளாதார  கொள்கையை வேகமாக இந்தியா அமுல் படுத்த முனைந்து வருகிறது. அதன் காரணமாக  இந்தியவை ஆளும் அயிக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழிபிதுங்கி வருகிறது.

          இந்தியா வேகமாக வளரும்,மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், வல்லரசாகும் என்று நம்பிக்கையுடன் முன்பு பேசிய பொருளாதார புலிகளான மன்மோகனும், மன்டெக்ஸ் சிங்  அலுவாலியா-வும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும்  இன்று எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.


          கடந்தவாரம்  டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு படுபயங்கரமாக வீழ்ச்சி அடைந்தது.பங்குசந்தை வர்த்தகம் 769 புள்ளிகளாக சென்செக்ஸ் குறைந்து அதிச்சி அளித்தது. தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் 1888 ரூபாக்கு விலை அதிகரித்தது.

        இந்திய பொருளாதரத்தை வேகமாக அசைத்துப்பார்த்த இந்த நிகழ்வுகளால், பணவீக்கம் விலைவாசி உயர்வு போன்றவை அதிகரித்து இந்தியாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பது தெரிகிறது. பொருளாத தேக்க நிலையை ஏற்படுத்தி,   இந்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதியை  இது பாதிப்பதுடன் இந்தியாவின் கடன்  சுமையை,அதற்கான வட்டியையும் கணிசமாக அதிகரிக்கும்
.

சு'தந்திரம் என்னும் சோககீதம்..!

Image
ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு கிடந்தபோது, இந்தியர்களுக்கு  சுதந்திர உணர்வு ஏற்படுவதை தடுக்கவும்,தீவிரத்தைக் குறைக்கவும்  ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் தொடங்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ் கட்சியாக  பிறகு மலர்ந்தது. காந்தியின் வருகைக்கு பிறகு  சுதந்திர தாகமும் போராட்ட வடிவமும் மாறியது. உலகில் எங்குமே காணாத அதிசயமாக.. அமைதியான முறையில்  சுதந்திரம்  கோரி காந்திய வழியில் போராடும்போது நேதாஜி சுபாஸ்,பகத்சிங்,பசும்பொன் முத்துராமலிங்கம்  போன்றவர்கள்  தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர்.


                காந்தியை ஆதரித்து,நேதாஜியை எதிர்த்து  ஆங்கிலேய அரசு  நடந்துகொண்டது.  பல்லாயிரம் மக்கள்  சிறையில் சித்திரவதை பட்டு, தூக்கிலிடப்பட்டு, வாழ்வை இழந்து நடத்திய  போராட்டம் வலுவிழந்தது. கண்ணீரும் செந்நீரும்  சிந்திப் பெற்ற சுதந்திரம்,  "கத்தி  இன்றி,இரத்தம் இன்றி சத்தியவழியில்" பெற்றதாக இன்று  வரலாற்றை  படிக்கும் நிலைக்கு நாம் மாற்றபட்டு விட்டோம்.

     நாம் மட்டுமா மாறி இருக்கிறோம்.? சுதந்திரத்திற்கு பிறகு  நம்மை வழிநடத்திய தலைவர்கள்  அனைவரும்  இன்றைய நிலைக்கு  கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாற்றி வி…

கலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு..?

Image
"சொன்னதைச் செய்வோம்  செய்வதைச் சொல்வோம்" என்று அலங்காரமாக கூறிவந்த கலைஞரும் , அவரது கட்சியும்  சமீப காலமாக  தடுமாறி வருவதாக தெரிகிறது.

          ஈழ போராட்டம்  என்பதை  தனக்கு சாதகமான அரசியலாக இப்போது பார்க்கும் கலைஞரின், கடந்த கால  ஈழ அணுகு முறைகளும், செயல்களும்   அவருக்கு எதிராக இருப்பது  தெரிகிறது.  ஆட்சியில் இருந்தபோது,   கலைஞர் நடந்துகொண்டதும்,  அவர் பேசியவைகளும்   அவருக்கு எதிராகவும், விமர்சனமாகவும் இப்போது முன்வைக்கப்பட்டு,  சூடாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

                                                                                                                                                                              மறுபுறம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு,பிறகு, வாபஸ் என்று தடுமாறிய கலைஞர்,  தனது மகள் கனிமொழிக்காக.. கேவலம் ஒரு ராஜ்ஜிய சபை உறுப்பினர் சீட்டுக்காக  மீண்டும் சரண் அடைந்தது  போல  நடந்து கொண்டது, கலைஞர் மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையை வெகுவாக  குறைத்து விட்டிருக்கிறது.   மேலும் அவரது குடும்பதினரின்  பதவி வெறி, சுயநலம்  ஆகியவைற…

இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்

Image
இந்தியாவுக்கு குறிப்பாக ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் கள்ள தொடர்பு  இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

          இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பும் மிக முக்கிய விசயங்கள் குறித்து பொதுமக்கள் பரபரப்பாக விவாதிக்கும் நிலையிலும், பாரளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி தவிக்கும்போதும், உச்சநீதிமன்றம் கடுமையாக மத்திய அரசை விமரசித்து கருத்துக்கள் வெளியிடும்போதும்  இந்த பிரசனைகளை திசைதிருப்பும் விதத்தில்  பாகிஸ்தான்  தீவிரவாதிகள் நடந்துகொள்கிறார்கள! 

         அதாவது ஆளும் இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நெருக்கடியை உணர்ந்து, அறிந்து  அந்த நெருக்கடியில் இருந்து  இந்திய அரசையும்,  காங்கிரசையும் காப்பாற்றவேண்டி    இந்தியாவிலோ, அல்லது இந்திய எல்லையிலோ  துப்பாக்கி சூடு  நடத்துவது, ஊடுருவல் செய்வது    அல்லது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது போன்ற நிகழ்சிகள்  நடத்தபடுகின்றன.

        இவ்வாறு  செய்வதன் மூலம் இந்தியா ஆளும் அரசுக்கு ஏற்படும் நெருக்கடி மறக்க வைக்கப்பட்டுகிறது.,   அனைவரும்  பாகிஸ்தானின் தீவிரவாதம், எல்லை பயங்கவாதம், எதிரிகளின் அத்துமீறல், அராஜகம…

இந்தியாவில் வறுமை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது!

Image
இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாகிறது. இந்திய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, எத்தனையோ ஆயிந்தாண்டு திட்டங்கள் தீட்டியாகிவிட்டது.  இந்திய குடிமக்களின் உணவு,உடை,இருப்பிடதேவைகள்,பொது சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி,வேலைவாய்ப்பு  ஆகியவற்றை தருவதாக  வாய்கிழிய பேசி மக்களுக்கு உத்திரவாதம் தந்தனர் ஆளும் வர்கத்தினர்.


           இந்தியாவை முன்னேற்ற,அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய  பல்லாயிரம் கோடிகள் உலகவங்கி,பன்னாட்டு நிதியம்  என்று வாங்கியும் செலவழித்தும்  இந்தியாவில் வறுமை  ஒழியவில்லை. அடிப்படை வசதிகளை இன்று வரை அனைவருக்கும் தர இயலவில்லை.  குறைந்த பட்சம்  அனைவருக்கும் மூன்றுவேளை உணவுக்கு கூட உத்திரவாதம் இல்லாத நிலையைத்தான்  ஆளுவோர்கள்,அதிகார வர்கத்தினர் ஏற்படுத்தி இருகிறார்கள்.

         விவசாயத்தையே ஜீவநாடியாக,முதன்மைத் தொழிலாக கொண்ட நமது நாட்டில், கங்கை,யமுனை,சிந்து,பிரம்மபுத்திரா, கோதாவரி,நர்மதை ,கிருஷ்ணா,காவிரி,தென்பெண்ணை,பாலாறு, வைகை,தாமிரபரணி  என்று பல ஆறுகள் ஓடும் நமது நாட்டில்  உணவுக்கு வழியில்லை. மூன்றில் ஒருபகுதியினர்  இரவு உணவுக்கு வழியின்றி பட்டினியால…

மாயாவாதமும் சாமியார் மடங்களும்.!

Image
அனைத்து சாதியினரையும் அர்சசகராக்குவோம்.. கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்  என்ற கோஷங்களும் போராட்டங்களும் தமிழகத்தில் மீண்டும் புதுவீச்சில் எதிரோளிகின்றன.          தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் இன்றுவரை நிறைவேறாமல் தொடர்கிறது. தமிழகத்தை பல ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தபோதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. கோவில் கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர வேற்றாள்கள் நுழைந்தால் சாமிக்கு தீட்டு பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்! வழக்குமேல் வழக்கு போட்டு இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.            கோயிலை கட்ட செங்கல், சிமண்ட்டு , கருங்கல் சுமப்பது, கோயில் சிற்பம்,கடவுள் சிலை செய்வது,   சாரம் கட்டுவது,  கோபுரவேலைகள் செய்வது  அனைத்தும்   பல சாதி மக்கள்.  இந்துக்கள் என்கிறபோது,  கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு மட்டும் அவர்களுக்கு உரிமையில்லை என்பது  என்ன நியாயம்? அவ்வாறு கூறுவது மிகபெரிய சமூக அநீதியாகும்.             பார்ப்பனர்கள்  மட்டுமே கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும், அவர்கள் செய்தால் தீட்டில்லை, பிறசாதி  இந்துக்கள் செய்தால் தீட்டு…

ஆதார் கணக்கெடுப்பு-தனிமனித பாதுகாப்புக்கு ஆபத்து.

Image
மத்திய  அரசு  நடைமுறை படுத்தும் ஆதார் கணக்கெடுப்பு தனிமனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும்   ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.

       ஆதார் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இக் கணக்கு எடுப்பு குறித்து  மத்திய அரசு,"  உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும்  அரசின் நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள" உதவும் என்று கூறுகிறது.


        காவல்நிலையத்தில்  கொடும் குற்றங்களைச் செய்தவர்களின்  கைரேகை, கண்ணின் கருவிழி, வலதுகை ரேகை ஆகியவைகளை பதிவு செய்து, பாதுகாத்து வருவதைப் போல..  அதையும் விட கொடுமையாக  ஆதார் அடையாள கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

        இடது கை விரல்கள், வலதுகை விரல்கள், இடது-வலது கட்டைவிரல் ரேகைகள், இரண்டு கண்களின் கருவிழிகள் பதிவு செய்யபடுகின்றன. புகைப்படம் எடுக்கப்பட்டு, வயது, வங்கிக் கணக்கு, இமெயில் முகவரி, இருப்பிட முகவரி, தொலைபேசி,  செல்பேசி   உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யபடுகின்றன.  பதிவுக்கு  குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பான்கார்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களும்  கேட்க படுகின்றன.

       ஆதார்  அடையாள பதிவுகள் …