குண்டுவெடிப்புக்கு புத்தரும் விலக்கில்லை!

          பீகாரின்  முக்கிய நகரான  புத்த கயாவில் உள்ள மகா போதி ஆலயத்திற்கு  உள்ளும் வெளியும் ஒன்பது குண்டுகள்  வெடிக்கப்பட்டு உள்ளது! உலக அளவில் பிரசித்திப்பெற்ற,புராதன சின்னமாக, புத்தர் ஞானம் பெற்ற இடமாக, கருதப்பட்டு வரும்  மகா போதி ஆலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி இருப்பதன் மூலம் தீவிர வாதத்துக்கு   புத்தரும் விலக்கில்லை என்று தெரிகிறது!


           வழக்கம் போல இந்த குண்டுவெடிப்புக்கும் இந்தியன் முஜாஹித் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று இந்திய ஊடகங்களும் புலனாய்வு புலிகளும் சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்திய முஜாஹிதுக்கள்  முஸ்லிம்கள் தான் என்று கூற ஆரம்பித்து,புத்தர் கோவிலில் குண்டுவைக்க ஒரு பொருத்தமான கற்பனையை கூறவும் செய்வார்கள்!

            ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, பிடிபட்ட இந்தியன் முஜாஹித் ஒருவர்  மியான்மரில்  முஸ்லிம்கள்  மீது நடத்தும் தாக்குதலுக்கு  பழிவாங்கப் போவதாக சொன்னதாகவும்,  டெல்லி பொலிசார், உளவு பிரிவுக்கு சொல்லி,உள்துறை அமைச்சகம்  மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை  செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பபடுகிறது!


            இந்தியன் முஜாஹித்  என்பதே உளவுத்துறையும்,  ஊடகங்களும் உலவவிட்டு வரும் கற்பனை அமைப்பு என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு   சொன்னது  ஒருபுறம்  இருக்கட்டும்!

         குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டதற்கு, பல்வேறு குண்டுவெடிப்புகள், கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பாதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு,சித்தரவதை செய்யப்பட்டு, சீரழிக்கப்பட்டதற்கு,  பழிவாங்க வக்கற்ற, கையாலாகாத, இந்திய முஸ்லிம்கள், இந்தியன் முஜாஹித்துக்கள், மியன்மாரில் தாக்கப்படும் முஸ்லிம்களுக்காக... இந்தியாவில் அதுவும் மாகாபோதிஆலயத்தில் குண்டு வைப்பதன்  மூலம்   பழிவாங்குகிறார்கள் என்கிறார்கள்! "தென்னைமரத்தில் தேள்  கொட்ட பனை மரத்தில் நெறிகட்டிய கதை"  சொல்கிறார்கள்!


       பீகாரில் பி.ஜே.பி-யுடன் வைத்திருந்த கூட்டணியை நிதிஷ் குமார் விளக்கிக் கொண்டார்.  காங்கிரசும் சுயேட்சைகளும்  ஆதரவு அளித்து வருகிறது.  பி.ஜே.பி. அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுகளைப் பெற வேண்டும்.!

       ஆகவே, அங்கு ஆட்சி நடத்தி வரும் நிதிஷ் குமாருக்கும், அவரது  கட்சிக்கும்,  அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும்.  கூடவே, லாலு பிரசாத்தையும்அவரது கட்சியையும் சமாளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் காங்கிரசுக்கும்  நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். என்பதெல்லாம் பி.ஜே.பி.யின்  நிலைபாடாக உள்ளது.


           இந்த நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை,  நிதிஷ் குமார் வெறுத்துவரும்  நிலையில் ,  புத்த கயாவுக்கும் , மகாபோதி  ஆலயத்துக்கும்  நரேந்திர மோடி  சமீபத்தில் சென்று திரும்பிய நிலையில்,  குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதை  கவனிக்க வேண்டி உள்ளது!

        "பாவி போன ஊருல ஏரியும் பாலாகும்" என்பதுபோல இருக்கிறது கதை! இதே நரேந்திர மோடி  மதுரைக்கும் வந்து சென்று இருக்கிறார். அவரை சோழவந்தான் சுப்பிரமணியம் சாமியும்   குஜராத் சென்று  சந்தித்து வந்திருக்கிறார். என்பதை எல்லாம் நினைத்து பார்க்கும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கூட எச்சரிக்கையுடன்   இருக்க வேண்டி நிலை ஏற்பட்டு உள்ளது!

     இன்னும் என்னென்ன கூத்துக்கள் நாடாளுமன்ற தேர்தல்வரை நடக்குமோ என்று பார்க்கலாம்

Comments

  1. சரியான் கோணத்தில் சிந்திக்கிறீர்கள் ....மிகவும் மகிழ்ச்சிக்குரியது ! இதில் இரண்டு தினங்களுக்கு முன் தினமலரில் இந்தியன் முஜாஹிதீனின் சதி அம்பலமாம் (!!) சரி அப்படி என்ன சதியை கண்டுபிடித்து விட்டார்கள் என்று ஆர்வமாய் பார்த்தால் "முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது " என்று மட்டும் தான் போட்டு இருக்கிறார்கள். (என்னத்த சொல்ல ! )

    சகோ.உங்களின் ரத்த பந்தங்களை இந்திய ஆட்சி, அதிகார பணிகளில் சேர்வதற்கு முயலுங்கள் ...நாடு உண்மையிலே நலம் பெறும்..!

    நன்றி !

    ReplyDelete
  2. WOW....markandeya katja once said that 90% Indians are fools and 80% hindus and muslims are communals....so don't fool others...

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?