தமிழகத்தை குறிவைக்கும் தீவிரவாதம்

            சமீப காலமாக  தமிழகத்தில் நடந்துவரும்  தொடர் விபரீதங்களைப் பார்க்கும் போது  ஒட்டுமொத்த தமிழகமும்  தீவிரவாத நிழல் படிந்துள்ளதாக தோன்றுகிறது.  இந்துத் தலைவர்கள் கொல்லபடுகின்றனர்.

         அதற்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று  பொதுவான கருத்து உருவாக்கம்  ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.   இந்த கருத்து உருவாக்கத்தினை  ஒட்டியே உளவுத்துறையும்  சந்தேகத்திற்கு இடமே இன்றி.. முஸ்லிம்களை கைது செய்து, விசாரணை நடத்திவருகிறது.   முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டவுடன்  அவர்களைப்பற்றி  ஆதியோடு அந்தமாக இருந்து அறிந்துகொண்டதைபோல  பார்ப்பன ஆதரவு பரப்புரைகள்   ஊடகங்களில் பரபரப்பாக  செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன.


         இத்தகைய நிகழ்சிகள் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.  மறுபுறம் இந்துத்துவ தீவிரவாதம்  என்று எதுவும்  இல்லை என்பது நிலை  நாட்டப்பட்டு வருகிறது.  இந்துத்துவ வெறியர்கள்  என்பவர்கள்  தீவிரவாதிகள் இல்லை அவர்கள்
சாதுப்பூனைகள் என்ற நினைப்பை  பொதுமக்களிடம் விதைத்து வருவதைக்  காணமுடிகிறது.

        வேலூர் வெள்ளையப்பன் கொலை,சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை ஆகியவற்றின் குற்றவாளிகள்  மதுரையில்,நெல்லையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள்  என்று சொல்வது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

     காரணம். வேலூர்,சேலம், மதுரை,திருநெல்வேலி ஆகியவை  தமிழகத்தின் முக்கிய நகரங்கள். மாநகராட்சிகள்  மட்டும் இல்லை. வார்த்தக முக்கியத்துவம்  வாய்ந்த இந்த நகரங்களில்  லட்சகணக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  கோடிகணக்கான   சொத்துக்கள் அவர்களிடம் இருந்து வருகிறது.


             அரசியல் ரீதியாக அவர்களை அச்சுறுத்தவும், பயன்படுத்தவும், தீவிரவாதம் என்ற பெயரில்  மதக்கலவரத்தை ஏற்படுத்தி,  முஸ்லிம்களை கொலைசெய்யவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையிடவும் திட்டமிட்டு  இத்தகைய  விபரீதங்கள் நடைபெறுகின்றனவா? என்று சந்தேகம் எழுகிறது.  இத்தகைய சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே  அத்வானியின் சேலம் வருகை உள்ளது.!

       அத்வானி முன்பு மதுரை வந்தார்  திருமங்கலம் அருகில் பாலத்தின் கீழ் பைப் குண்டு இருந்ததாக சொல்லியும், கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  சொல்லப்பட்டு,அத்வானியை கொல்ல நடந்த சதி  என்று மதுரையில் இருந்த பலகடைகாரனும் சைக்கில் ரிப்பேர் காரனும்  தீவிரவாதிகள் என்று கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

          1998-யில் கோவைக்கு அத்வானி வந்தார் அவரைகொல்ல  குண்டுகள் வைத்ததாக  சொல்லி அப்பாவி பொதுமக்கள்  பலர் படுகொலை ஆனார்கள். முஸ்லிம் இளைஞர்கள் 18-பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் பலரும் கைது செய்யப்பட்டு  பத்தாண்டுகளுக்கு மேலாக விசாரணையே இன்றி, ஜாமீன் இன்றி சிறையில்  வாடினார்கள். ஷோபா டெக்ஸ்டைல் , முஸ்லிம்களின் நகைகடை, கடிகாரகடை ,பாத்திரக்கடை எல்லாம் கொள்ளையிடப்பட்டன.


            அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து  எடுப்பதைகூட  (பிக்பாக்கெட் ) குற்றம் என்று சொல்லி தண்டிக்கும் சட்டம் உள்ள நமது நாட்டில் கொள்ளை யிடப்பட்ட   இவைகள் எங்கே போனது.  யாரிடம் சேர்ந்தது என்பது குறித்து இன்றுவரை போலீஸ்,அரசு, சமூக ஆர்வலர்கள், நடுநிலை வகிக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள்  எதுவும்  கண்டுபிடிக்கவில்லை, அதைப்பற்றி கவலைப்படவில்லை.  குறைந்த பட்சம் கேள்விகேட்டகூட முன்வரவில்லை. 

      விளைவு?  முஸ்லிம்கள் துரத்தப்பட்டு, அந்த இடங்கள் மார்வாடிகள்,வட இந்தியர்களின்   வாழ்விடமாக, வளமான பிரதேசமாக இப்போது ஆகிவிட்டது. இதை போலவே,  முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் மதுரை,வேலூர், சேலம், திருநெல்வேலி ஆகியவையும்  குறிவைககபடுகின்றனவா? என்று சந்தேகம் தோன்றுகிறது.

        மகாபாரதத்தில்  குருஷேத்திர யுத்தம்  தொடங்கும் முன்  போரில் வெற்றியடைய  முதல் பலியாக  (அரவான்)ராமன் என்பவனை பலியிடுவார்கள்  வேலூர் வெள்ளையப்பன் ,ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரின் பலிகள் அதுபோன்றவைகளா? என்றும் சந்தேகம் எனக்கு.!  உங்களுக்கு?

 

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. மேலப்பாளையம் கைது - பொய் வழக்கில் அப்பாவிகள் ?

  செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2013 12:18

  நெல்லை:-- இரு நாட்களுக்கு முன் மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்ட ஆறு வாலிபர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பமும் உறவினர்களும் அவர்கள் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

  குற்றப்புலனாய்வு (C B C I D ) மற்றும் சிறப்புப் புலனாய்வு ( S I T ) பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆறு பேரும் சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்கு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அக்கொலைகள் தொடர்பாக இவர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்று அவர்களைச் சந்தித்து விட்டு வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.

  மேலப்ப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயீல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ள் அறுவரில் பிஸ்மி , ஷம்ஸு, நூருல் அமீன் ஆகிய மூன்று இளம் வயதுச் சிறுவர்களும் உள்ளனர்; வெடிமருந்துகள் வைத்திருந்ததாக அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

  கண்டுபிடித்ததாகக் காவல்துறையால் கூறப்படும் வெடி மருந்துகளுக்கும் அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

  பா ஜ க மற்றும் இந்து முன்னணியின் திருப்திக்காகப் பொய்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க, சட்ட ரீதியான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

  ReplyDelete
 3. PART 1. படுகொலைகளும் - பின்னணிகளும்!

  கடந்த ஓராண்டில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .

  இந்த கொலைகள் நடந்தவுடன் வழக்கம் போல ஊடகங்களும் இந்து முன்னணி காவி பண்டாரங்களும் முஸ்லிம்களின் மீது பழி போட்டு பேருந்து எரிப்பு ,கடையடைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றன.

  சில நாட்கள் கழித்து இந்த கொலை கள் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த கொலை தொடர்பான கேவல மான பின்னணி தெரிய வரும்போது , இதனை பத்திரிகைகள் சிறிய செய்தியாக வெளியிடுகின்றன.

  தற்போது சேலத்தில் பிஜேபி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் , ''ஏற்கெனவே பிஜேபி இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் அரவிந்த் ரெட்டி, கோயம்மேடு விட்டல் ,பரமக்குடி முருகன், நாகை புகழேந்தி ,ராமேஸ்வரம் குட்டநம்பு, வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரைக் கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளே ஆடிட்டர் ரமேசையும் கொலை செய் திருக்கிறார்கள் '' என மோடி முதல் ராமகோபால அய்யர் வரை கூறி திங்கள் கிழமை தமிழகத்தில் கடையடைப்பு நடத்துகிறார்கள்.

  உண்மையில் மேற்படி கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் ?

  கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .

  சென்னை விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127ஆ-வது வட்ட பா.ஜனதா தலை வராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுககாயங்களுடன் விட்டல் பிணமாகக் கிடந்தார்.

  கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தர பாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தர பாண்டியன் வீட்டுக்குச் சென்று வீட்டுப் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

  டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12.

  வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .

  கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடி குண்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .

  விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூல் ராஜா தீட்டியுள்ளார் .

  வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

  நாகப்பட்டினம் புகழேந்தி கொலை 5.7.12 நாகப்பட்டினத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட் டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.

  சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது :-

  கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினார் ஆனால் காவல்துறை விசாரணையில் .

  கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

  Countinued ……..

  நன்றி: http://www.viduthalai.in/page2/64729.html

  ReplyDelete
 4. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளே ..!


  1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார்
  2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
  3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
  4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
  5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
  6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
  7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
  8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

  9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
  நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

  10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

  11) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

  12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகுமாட்டி கொண்டவன் யார் ?

  13) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

  14) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

  15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

  16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

  2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
  2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
  2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
  2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.
  2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
  2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.
  2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
  2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.
  2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
  2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர்பலி.
  2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
  2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர்பலி.
  2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிரு ¬ந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ¬ திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
  இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ¬ 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருநத முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

  இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள் . மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

  மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின ஒருமுன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

  இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ¬ எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

  இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதஇயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின.

  ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

  இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

  SOURCE: http://www.pnotimes.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/

  ReplyDelete
 5. பகிர்தலுக்கு நன்றி..

  ReplyDelete
 6. "பள்ளிவாசலில் தீவைப்பு இந்து முன்னணி பிரமுகர் கைது" என்று தலைப்பிட்டு குற்றவாளியை வருடி கொடுக்கும் ஊடகங்கள், சந்தேகத்தின் பேரில் கைதாகும் முஸ்லிம்களை "தீவிரவாதி" என்றே தீர்ப்பையே வழங்கி பொது புத்தியில் ஆணி அடிக்கின்றன.

  ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அடுத்து, பாஜக வினர் முஸ்லிம்கள் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து ஒரு அரசியல் அஜென்டாவை முன்னெடுத்து செல்லும் போது, தமிழக டிஜிபியின் அறிக்கை வருகிறது. அதில் அவர் இதெல்லாம் தனிப்பட்ட பகை காரணமாகவும் இன்ன பிற காரணங்களுக்காகவும் நடத்தப்பட்டிருக்கிறது எனவும், ரமேஷ் படுகொலை குறித்து விசாரனை நடைப்பெற்று வருகிறது என்கிறார். உஷாரான பிஜேபியினர் விசாரணை முஸ்லிம்களை நோக்கி சென்றால் தான் நாம் அரசியல் லாபம் பார்க்க முடியும் என்று நினைத்து, ஊடகங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

  ரமேஷ் கொலையிலும் எந்த துப்பும் கிடைக்காமல் தடுமாறும் நிலையில், மேல்மட்ட அழுத்தங்கள், பிஜேபியின் அரசியல் லாபிகள் என்று விழி பிதுங்கும் காவல் துறையினர், இவற்றிற்கெல்லாம் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கவும் பிஜேபியின் வாயை அடைக்கவும் சவளைப்பிள்ளை சமுதாயமாகவுமாக இருக்கும் முஸ்லிம்களைப் பிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்கள் நிஜமான குற்றவாளிகளாக இருந்தால் சந்தோஷமே.. இல்லாவிட்டால் நிஜமான குற்றவாளி தப்பித்துக்கொண்டே அல்லவா இருப்பான்.

  இப்படித்தானே மேலே பின்னூட்டமிட்ட அத்தனை குண்டு வெடிப்புகளிலும் கைது செய்யப்பட்டது முஸ்லிம்களைத் தான். அத்தனை முஸ்லிம்களை கைது செய்தும் குண்டுவெடிப்பு தொடர்ந்து கொண்டே செல்கிறது. குற்றவாளிகள் கைதானவுடன் குண்டுவெடிப்புகள் தொடர்கிறது என்றால் நிஜ குற்றவாளி தப்பி வருகிறான் என்ற புரிதல் இன்றி காவல்துறை வழக்கை எளிதில் முடிக்க முஸ்லிம்களையே பலிகடாவாக்கினர். அப்புறம் தான்.. அசிமானந்தா மூலம் இந்துத்துவ பயங்கரவாதம் பல் இளிக்கிறது. அத்தோடு தொடர் குண்டுவெடிப்புகள் முற்று பெறுகின்றன. முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட தீவிரவாத பட்டத்தின் நிழலில் இந்துத்துவ தீவிரவாதம் ஒளிந்தே வளர்ந்து வருகிறது.

  குரல்வளை நெறிக்கப்பட்ட முஸ்லிம்களின் பலஹீன முனகல்களை கூட, சகோதர இந்துக்கள் தான் உரக்க பேசி பொதுவெளியில் நியாயம் கேட்கின்றனர். தங்கள் சமூகத்தை உள் நோக்கத்தோடு குற்றப்பரம்பரையாக சித்தரிக்கும் மீடியா, காவல் துறை, உளவுதுறை, போன்றவற்றை எதிர்கொள்ள முடியாதளவிற்கு சோர்ந்து போய் நலிவுற்று இருக்கிறார்கள்.

  காவல்துறையில் பணியாற்றும் நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார், சில சமயம்.. சில வழக்குகளில் துப்பு கிடைக்காத போதும் தடயங்கள் சிக்காத போதும் யாரையோ கைது செய்தால் தான், நிஜக்குற்றவாளிகொஞ்சம் ரிலாக்ஸாகி தடயங்களை விடுவான். அப்போது வளைத்து பிடிப்போம் என்றார். அவர் "யாரையோ" என்றது முஸ்லிம்களைத்தான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. காவல்துறைக்கு முஸ்லிம்கள் தூண்டில் மீன்கள் போலும்.

  இப்போது தமிழகத்திற்கு வரவிருக்கும் அத்வானி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்புடன் திரும்பி செல்ல வேண்டும் என்று பதைபதைப்புடன் இருப்பவர்கள் காவல்துறையினரைக் காட்டிலும் முஸ்லிம்களே..

  ReplyDelete
  Replies
  1. அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!

   சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.

   இந்த நிலையில் இந்த கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடு விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு வழங்கியுள்ளனர்.

   அந்த மனுவில் கூறப் பட்டிருப்பதாவது:

   "மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும், சேலம் நகரில், பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இது, சேலம் மக்களிடையே பீதி, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   இந்த படுகொலை சம்பவம், மனித நேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த பாதக செயலில் ஈடுபட்ட கயவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. படுகொலை சம்பவத்தை தொடர்ந்து செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகங்கள், யூகங்களின் அடிப்படையில், இந்திய மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம், முஸ்லிம் சமுதாயத்தை மையப்படுத்தி, முஸ்லிம்களை குற்றவாளிகள் என, தீர்மானித்து செய்தி வெளியிடுகின்றன.

   இதனால், முஸ்லிம்களின் கண்ணியத்தை குலைத்து, பொது நீரோட்டத்தில் தனிமைப்படுத்துவதாக உணர்கிறோம்.

   டி.ஜி.பி., ராமானுஜம் அறிக்கையில் குறிப்பிட்டதில், "பா.ஜ., மற்றும் இந்துத்துவ அமைப்பினர் சிலர் பணம், கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்னை, பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தான் இருந்தன' என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

   நடுநிலை பேணக் கூடியவர்கள் கருத்து இவ்வாறு இருக்க, ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை முன் வைத்து, ஒரு தரப்பினர் மலிவான அரசியல் செய்து வருவது, மதச்சார்பின்மையை பேணக் கூடியவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

   வரும் ஆக., 1ம் தேதி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சேலம் வருகை புரிவதாக தகவல் அறிகிறோம். அத்வானி கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், மத துவேஷங்களை தூண்டக்கூடிய வகையில் அமைந்து, அது பல விளைவுகளை ஏற்படுத்திய சம்பவங்களை, மக்கள் நன்கு அறிவர். எனவே, அத்வானி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கூடுதல் கட்டுப்பாடு விதித்து, சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தி, சேலம் வாழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   யார் எந்த வித குற்றம் செய்தாலும், அதை அந்த குற்றவாளியாக மட்டுமே பார்க்க வேண்டும். தவிர, மதச்சாயம் பூசி, உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாவண்ணம் செய்திகள் வெளிவர ஆவன செய்ய வேண்டும்.

   ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை துரிதமாக, தீர விசாரித்து, உண்மை குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்டத்தின் அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பான, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். "
   இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

   http://www.inneram.com/news/tamilnadu/1156-united-islamic-jamaat-request-control-advani-meeting.html

   Delete
  2. இப்போதுதான் நேரம் கிடைத்தது. உங்கள் கருத்துக்கள் அருமை.தெளிவாக விளகியுள்ளதர்க்கு நன்றி..!

   Delete
 7. அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை - ஐ.ஜி குற்றச்சாட்டு

  லக்னோ: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை முன்னாள் தலைவர் எஸ்.ஆர். தாராபுரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் நிலை என்னவாயிற்று என்பது கூட அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றும் அப்படி காணாமல் போனவர்கள் காவல்துறையினர் ரகசிய பாதுகாப்பில் எடுக்கப்பட்டு குண்டுவெடிப்பு தொடர்பான விசயங்களில் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார்.

  மேலும் உத்தரப்பிரதேச காவல்துறையினரிடம் மதவாதபோக்கு மிகுந்துள்ளதாகவும் இன்னும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் மோசமான மதவாத போக்கு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
  இதனால் அவர்கள் சிறுபான்மையினரிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

  காவல்துறை உயர் அதிகாரிகளின் இந்த கொடுமையான நடைமுறை இனிமேலும் தொடராமல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.ஆர். தாராபுரி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

  http://www.inneram.com/news/india/1158-muslim-youth-languishing-in-secret-prisons-across-the-country.html

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதான் நேரம் கிடைத்தது. உங்கள்செய்தி எனக்கு புதியது. நன்றி..!

   Delete
 8. சந்தேகப்படுவதே வேலையாப்போச்சு இந்துவுக்கு முஸ்லீம்கள் மீதுசந்தேகம் முஸ்லீம்களுக்கு இந்துக்களின் மீது சந்தேகம் ஆமாம் இந்த வாரத்தில் ஈராக் பாக்கில் குண்டு வெடித்ததே அதையும் இந்துதீவிரவாதிகள் தான் வைத்தாற்களா ஏனென்றால் ரமலான் புனித மாதத்திலே இஸ்லாமியர்கள் குண்டு வைக்கமாட்டார்களே!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரேல் மொசாம்பிக், அமெரிக்க போன்ற நாடுகள் வைக்கலாம் இல்லையா? அவைகள் உலக அளவில் முஸ்லிம்களை ஒழிக்க நினைத்து செயல்படுபவை. இந்து தீவிரவாதம் பற்றி முஸ்லிமும், முஸ்லிம் தீவிரவாதம் பற்றி இந்துக்களும் சந்தேகபடுவது நியாயமே.! ஆனால் ஊடகங்களும்,போலிசும் புலனாய்வு துறையும் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது சந்தேகபடுவது ஏன்.? அவர்களை மட்டும் கைது செய்வது,விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது எல்லாம் சரியா? நியாயமான நடைமுறையா? நீதியா? சொல்லுங்கள் நண்பரே!

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. Stupid Post...."அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" விபசார ஊடகத்தின் ௨டன் பிறப்பு இணையதள செய்திகள்....

  ReplyDelete
 11. Currently Islamic Muslims are getting revert back towards Hindustan . Because,Islamic Muslims also had a pre-plan to rule our Hindustan in the future as Islamic country. That is the reason currently most of the Hindu poor innocent peoples are being converted to Muslims. Ex : They have chosen Love Jihad as one of the route to convert into Muslims.Ex: Daud Ibrahim took birth in Hindustan,earned his illegal savings from Hindustan, but he is currently staying in terrorist country Pakistan .Now Daud Ibrahim is against to Hindustan and he is one of the noted criminal terrorist to Hindustan. That is why Islamic Muslims are selfish terrorist .
  Ex: Mumbai 26/11 attackers were Muslims The Shoe Bomber was a Muslims
  The Beltway Snipers were Muslims
  The Fort Hood Shooter was a Muslims
  The underwear Bomber was a Muslims
  The U-S.S. Cole Bombers were Muslims
  The Madrid Train Bombers were Muslims
  The Bafi Nightclub Bombers were Muslims The Charlie Hebdo attackers were Muslims The London Subway Bombers were Muslims
  The Moscow Theatre Attackers were Muslims
  The Boston Marathon Bombers were Muslims
  The Pan-Am flight #93 Bombers were Muslims
  The Air France Entebbe Hijackers were Muslims
  The Iranian Embassy Takeover, was by Muslims
  The Beirut U.S. Embassy bombers were Muslims
  The Libyan U.S. Embassy Attack was by Musiims
  The Buenos Aires Suicide Bombers were Muslims
  The Israeli Olympic Team Attackers were Muslims
  The Kenyan U.S Embassy Bombers were Muslims
  The Saudi, Khobar Towers Bombers were Muslims
  The Beirut Marine Barracks bombers were Muslims
  The Besian Russian School Attackers were Muslims

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?