போலி என்கவுண்டர்கள்...

           கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை,இராணுவம், துணை இராணுவத்தினர்  555 போலி என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் கமிஷன்  பதிவு செய்துள்ளது.

       போலி என்கவுண்டர்களில் 114 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. போலிஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில்  411 போலி என்கவுண்டர்கள் சம்பவங்கள்   இருந்துவருகின்றன.


      அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளில  புலனாய்வு துறை(C B I) ,C B C I D, அமைப்புகள் தலையிட்டு  விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம்  கேட்டுக்கொண்டும் இதுவரை போலி என்கவுண்டர் சம்பவங்களில் ஒன்றையும்  மேற்கண்ட அமைப்புகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும்  தெரியவந்துள்ளது.

        உத்திரபிரதேசத்தில் - 138 , மணிப்பூரில்- 62 ,அசாமில் -62 ,மேற்கு வங்கத்தில் -35 , ஜார்கண்டில் - 30 ,  சத்தீஸ்கரில் - 29 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இவைகள்  தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றவைகள் மட்டுமே.! ஆணையத்தின் கவனத்துக்கு செல்லாத போலி என்கவுண்டர்கள் எத்தனையோ?


         காஸ்மீர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் ,"சிறைக்குள் நான் இருக்கிறேன்,எங்களது மாநிலமே  ராணுவத்தின் சிறையாக உள்ளது"  . என்று கூறியதைப்போல  நம்மைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள இராணுவமும் போலீசும் கடமையை மறந்து நம்மை கொன்று அழிக்கும்  செயல்களைச்  செய்கிறது.

               உரிமைக்காக,நியாயத்திற்காக  குரல் எழுப்பினால், கொன்றுவிட்டு  நியாயப்படுத்துகிறது. !

        போலி என்கவுண்டர்கள் என்பது ஜனநாயகத்தை விரும்பும்  மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறையாகும்.  மக்கள் மீது  செலுத்தப்படும் அரசின் சர்வாதிகார தீவிரவாதம் ஆகும்!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?