பொது சிவில் சட்டம் தேவையா?


        விஷ்வ இந்து பரிஷத் தலைவர்   பிரவீன் தொகடியா  பாபர் மசூதி இருந்த அதே இடத்தில ராமர் கோயில் கட்டவேண்டும்,பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் இந்துத்துவ அமைப்பு தலைவர்கள் பலரும்  வெகுஜன மக்களான இந்துக்களின் வாக்குகளை மனதில் வைத்து இதுபோல பேசுவதுவாடிக்கையாக இருந்துவருகிறது!

       இந்தியாவில் உள்ள  முஸ்லிமோ,இந்துவோ, சீக்கியனோ,கிருத்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்த்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் கிரிமினல் (குற்றச்)  சட்டம் பொதுவானதாகும். கிரிமினல் சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்களது குற்றசெயல்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்,தண்டனை வழங்கவும் முடியும்.!


         பொதுவான கிரிமினல் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில்,  இந்துத்துவ வாதிகள்,   பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று இந்துத்துவ வாதிகள் தொடர்ந்து  ஏன் கூறுகிறார்கள்?

        இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கல்வி நிலையங்கள்,வழிபாட்டு உரிமைகள், அரசின்  நிதி ஒதுக்கீடு,உதவித் தொகை போன்ற சலுகைகளை பெற்றுவரும் சிறுபான்மையினருக்கு அவைகளை வழங்க கூடாது என்று நேரடியாக  தடுப்பதற்கு பதிலாக, மேலும்  சிறுபான்மை சமூகங்களின் வாழ்வாதாரத்தை பறித்து, பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்ற பாசிச இந்துவெறியர்களின் நோக்கமே  பொது சிவில் சட்ட கோரிக்கையாக அவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.


          இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமுல்படுத்தினால் சிறுபான்மை இன மக்கள் மட்டும் பாதிக்க படுவார்கள் என்பதில்லை. இந்து மக்களாக அடையாள படுத்தும்  தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட  சமூகங்களும், சாதிகளும் கூட பாதிக்க படும். !

       இன்று அவர்களுக்கு வழங்கி வரும் கல்விச் சலுகைகள், கல்வி உதவித் தொகை,  இருப்பிட வசதி, இட ஒதுக்கீடு,  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அவர்களின் முன்னேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு கூறுகள் திட்டங்கள்,  அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கீடு, சிறப்பு தொழில் வாய்ப்புகள்,  கடன் வசதிகள்   ஆகிய அனைத்தும் கேள்விக்குறியாகும்.!

       பொது சிவில் சட்டப்படி, இவைகளை  S C , S T AND  M BC  மக்கள் எதிர்காலத்தில்  பெற முடியாமல் போகும். அவைகளை தொடர்ந்து பெற நீதிமன்றம் போனாலும்  சட்டத்தை காட்டி  தடுத்துவிட முடியும். . இந்த விவரங்களை அறியாமல்  முட்டாள்தனமாக, வெகுஜன  இந்துக்கள் எனபடும் தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பொது சிவில் சட்டம் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்!         பிராமணர்கள்,ஆதிக்க சாதிகள்,   அதிகார வர்க்கங்கள் ஆகியோர்தான் பொது சிவில் சட்டத்தால் மேலும்  லாபம் பெறுவார்கள். ! எல்லாம் சட்டப்படியே   நமக்கு மறுக்கப்படும்.   'அவாள்'களுக்கு கிடைக்கும். அதற்காக    நடத்தும்  நாடகமே, பொது சிவில் சட்டம்   என்பதை புரிந்து நாம்  கொள்ள வேண்டும்! .

       பொது சிவில் சட்ட கோரிக்கைப் பற்றி  முஸ்லிம் சமூக புரட்சியாளர், போராளி டாக்டர்.பழனிபாபா அவர்கள்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான பார்வை கொண்டு, கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.  அவரது கருத்துகளை  அடுத்த பதிவில் பார்ப்போம்.

Comments

 1. பொது சிவில் சட்டம் நம் நாட்டிற்கு பொருந்தி வராது. ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் என்று இருக்கும் நாட்டிற்கு தான் பொது சிவில் சட்டம் பொருந்தும்.

  முதலில் கிரிமினல் சட்டமாவது பொதுவாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  விபச்சாரம், பாரில் காபரே நடனம், போன்றவைகள் சில மாநிலங்களில் அனுமதி சில மாநிலங்களில் தடை.

  வாகனம் ஓட்டும் போது தலைகவசம் சில இடங்களில் அவசியம் மீறினால் அபராதம். ஆனால் பல இடங்களில் அவசியமில்லை.

  வரிவிதிப்பில் கூட பொதுத்தன்மை இல்லை. மாநிலத்திற்கேற்றால் போல மாறுது.

  இறந்த உடலை எரிப்பதா புதைப்பதா என்பதில் கூட பொது சிவில் சட்டம் குறுக்கிடும்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?