மோடிக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக்!

விவேக சிந்தாமணி என்ற பழைய நூலில் உள்ள பாடல் ஒன்று

"குக்கலைப் பிடித்து  கூண்டிலே அடைத்துவைத்து 
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும்
அக்குலம் வேறாமோ அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லலால் குலந்தனில் வேறாமோ ?! " -என்கிறது. குக்கல் என்றால்    நாய் என்று பொருள். (தெலுங்கில்)

       குஜராத் படுகொலைகள்,முஸ்லிம் மக்கள் இன அழிப்பு குறித்து   நரேந்திர மோடிபேசியதற்கு கடும் கண்டனங்களும்,விமர்சனங்களும் எழுந்து வருகின்றன


         நாய்களின் குணம் மாறாது என்பதை அப்போதே தமிழர்கள்   நூலில் பாடல்களாக எழுதி வைத்துள்ளதை அறிந்தால், "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடிபோகும்", அதன் குணம் மாறாது என்ற உண்மையை அறிந்தவர்களுக்கு, நரேந்திர மோடியின் நாய்குணம்,  பேய்குணம் குறித்தும் தெரிந்திருக்கும்!

       பி.ஜே.பி.-யின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அறிவித்த உடன் நரேந்திர மோடிக்கு இந்தியாவின் பிரதமராகவே ஆகிவிட்டது போல நினைப்பும், திமிர்த்தனமும் வந்துவிட்டது.ஆணவத்தின்எல்லைக்கே போய்  ஏதோதோ பிதற்ற ஆரம்பித்து விட்டார்.!        இனம் இனத்தோடு சேரும் என்பார்களே?  அதுபோல,  மோடிக்கு வக்காலத்து வாங்க  தமிழகத்தில் ஒருவர்  பத்திரிக்கை  நடத்துகிறார் !  "சோ" என்ற அந்த  மகா மேதை, அறிவு ஜீவி  தனது துக்ளக்  பத்திரிக்கையில் " நரேந்திர மோடி இந்தியாவிலேயே  மிகச் சிறந்தவர்,  அப்பழுக்கற்றவர், நேர்மையாளர்  " என்று பாராட்டி சான்று  தருகிறார்.  டாயிலெட்டுக்கு  கூட உபயோகமில்லாத  பத்திரிக்கையில் (17.07.2013) மோடிVS காங்கிரஸ் என்று 11.08.2010-ல்  எழுதியதை மறு தலையங்கமாக  போட்டு  அறிய கண்டுபிடிப்பை  வெளிபடுத்துகிறார்.

       மேலும் நேர்மையாக,மிகத் திறமையுடன் ஆட்சியை நடத்த முடியும்  என்று நரேந்திர மோடி நிருபித்து வருகிறார்   என்று துக்ளக்  சொல்கிறது. நரேந்திர மோடியின்  நேர்மை  எப்படி பட்டது என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று நினைத்து இப்படி பிதற்றுகிறது!


       காவி குண்டர்களை வைத்து,  குஜராத்தில் நடத்திய காட்டுமிராண்டித் தனங்களை, படுகொலைகளை, கொள்ளைகளை, நரேந்திர மோடியின் மிக சிறந்த நிர்வாகம்  எப்படி காவல்துறையை வைத்து மிரட்டியது, சாட்சியங்களை அழித்தது,  சாட்சி சொல்ல வந்தவர்களை மிரட்டியது, என்பதெல்லாம்  பூனை கண்ணை மூடிகொண்டதுபோல   மூடிக்கொண்டு, மோடியின்  ஆட்சியில் அவரது  கண்பார்வையில் நடந்த சொல்லொண்ணா துயரங்களை  மூடி மறைத்துவிட்டது,  இவரது கண்களுக்கு மட்டும் நேர்மையும் , மிகத் திறமையும் ஆக தெரிகிறது.


      2002ம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலையின்போது தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்து 504, எரிக்கப்பட்ட கடைகள் பத்தாயிரத்து 429, தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி காலாஸ்கள் இரண்டாயிரத்து 623.வாழ்க்கையை இழந்து 103 நிவாரண முகாம்களுக்கு ஓடி வந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 13ஆயிரத்து 697. இந்திய வரலாற்றில் மிக மோசமான இந்த வன்முறையின்போது கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை முழுமையான தகவல் இல்லை. எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப் பட்டார்கள் என்பது மட்டும் உண்மை! 

 நாய்களின் வாலை நிமிர்த்த முடியாது, குணத்தையும் தான்!  நரேந்திரமோடி,'சோ'.ராமசாமியை  திருத்த முடியாது! 

        இன்றும் கூட மனித உரிமை மீறல் குற்றங்கள், பெண்களை வாடகை தாய்களாக  தனி அறைகளில் அடைத்து வைக்கும்  கொடுமைகளில்  குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருப்பது   இந்த குருடனுக்கு  தெரியவில்லை ! தெரிந்தாலும்  கூட..   அதனையும்  மிக திறமையாகவும், நேர்மையான செயலாகவும்   பாராட்டி சுகம் காணும் இதுபோன்ற ஜென்மங்கள் என்பதில் வியப்பு இல்லை!

Comments

 1. “நாடாளுமன்றத் தாக்குதலும்
  மும்பை பயங்கரவாதத் தாக்குதலும்
  அரசாங்கமே திட்டமிட்டு நடத்தியவைதாம்...!”

  -புதிய அதிரடித் தகவல்கள்
  *********************************************************


  2001இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலும்
  2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதலும்
  இந்திய அரசாங்கமே திட்டமிட்டு நடத்தியவைதாம்
  என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை
  மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.


  குஜராத்தைச் சேர்ந்த
  சீனியர் ஐபிஎஸ் ஆபீசர் சதீஷ் சர்மா என்பவர்தான்
  இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
  இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த
  எஸ்ஐடி சிபிஐ குழுவின் உறுப்பினர் ஆவார் இவர்.


  இஷ்ரத் வழக்கு விசாரணையின்
  ஒரு பகுதியாக உள்துறை அமைச்சகத்தின்
  முன்னாள் அன்டர் செகரடரி
  ஆர்விஎஸ் மணியை கடந்த ஜூன் 22ஆம் தேதி
  சதீஷ் சர்மா விசாரணை செய்தார். அப்போது
  நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகவும்,
  மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும்
  ஆர்.வி.எஸ்.மணியிடம் சதீஷ் சர்மா
  இந்த அதிர்ச்சியான கருத்துகளைச் சொன்னாராம்.


  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின்
  டெபுடி லாண்ட் டெவலப்மெண்ட் அதிகாரியான ஆர்விஎஸ் மணி
  உடனடியாக இதைக் குறித்து தமது
  துறைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


  “நாடாளுமன்றத் தாக்குதலும்
  மும்பை பயங்கரவாதத் தாக்குதலும்
  அரசாங்கமே திட்டமிட்டு நடத்தியவைதாம்.
  பயங்கரவாதத்துக்கு எதிரான கருப்புச் சட்டங்களைக்
  கொண்டுவருவதற்காகத்தான் அரசே இவற்றை நடத்தியது.
  நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு
  ‘பொடா’ சட்டம் கொண்டுவரப்பட்டது.
  மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு
  யு.எ.பி.ஏ. சட்டம் கொண்டுவரப்பட்டது”
  என்று சதீஷ் சர்மாவை மேற்கோள் காட்டி
  மணி தம் கடிதத்தில் கூறியுள்ளார்.


  சதீஷ் சர்மாவின் கருத்தை உண்மைப்படுத்தும் வகையில்
  ஏற்கனவே சில புத்தகங்களும் வெளிவந்துள்ளன.
  ‘13 December, a Reader: The Strange Case of the Attack
  on the Indian Parliament
  எனும் நூல் நாடாளுமன்றத் தாக்குதல்
  அரசின் கைவரிசைதான் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.


  அதேபோல் Who Killed Karkare? எனும் புத்தகமும்
  பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
  இந்திய உளவுத் துறையும்(ஐபி) இந்துத்துவ சக்திகளும்
  இணைந்து நடத்திய சதித்திட்டத்தின் விளைவுதான்
  ஹேமந்த் கார்கரே கொலை என்று
  அந்தப் புத்தகத்தின் ஆசிரியரும்
  கார்கரேயுடன் பணிபுரிந்தவருமான
  முஷ்ரிப் உறுதிபடக் கூறுகிறார்.


  என்னதான் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு
  அவர்களைப் பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்தாலும்
  காலம் சதிகாரர்களின் முகத்திரைகளைக் கிழிக்காமல் விடாது...!

  -சிராஜுல்ஹஸன்

  ReplyDelete
 2. உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது.

  ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை

  http://www.gujarat-riots.com/

  என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது.

  ReplyDelete
 3. thanks to nagur meran,photo gallery ,and uthayam !

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?