இந்தியன் முஜாஹிதீன்கள் இந்துக்களா,முஸ்லிம்களா?

         சோனியாவும்,சிண்டேவும் குண்டுகள் வெடித்த மகாபோதி ஆலயத்தை பார்வை இட்டு உள்ளனர்.   குண்டு வெடிப்புக்கு  எந்த தீவிரவாத  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராத நிலையில், இந்தியன் முஜாஹிதீன்கள் பொறுப்பு ஏற்றுகொண்டதாகவும் அவர்களது ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்து உள்ளதாகவும்  செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

           அதுமட்டுமின்றி மும்பையில் ஒருவாரத்தில் பயங்கர நாசவேலையை செய்ய இருப்பதாகவும்  முடிந்தால் தடுங்கள் என்று எச்சரித்து உள்ளதாகவும் கூறுகிறார்கள்.


          எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இவ்வாறு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து,  சதிவேலைகளை செய்வதில்லை.  சதிவேலைகள் நடந்த பிறகுதான் செய்தது யார் என்றோ, எந்த அமைப்பு என்றோ  புலனாய்வு செய்து கண்டுபிடிப்பார்கள்!   இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ட்விட்டெரில் பகிரங்கமாக சவால் விட்டு இருப்பதை பார்க்கும்போது, அது உண்மையான பயங்கரவாத அமைப்பு இல்லை என்பதை (கற்பனை ) எளிதாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

          மேலும் அந்த செய்தி வந்த இணைய பக்கங்கள் போலியாக உருவாக்கப் பட்டவை என்று புலனாய்வு அதிகாரிகள் சொல்கிறார்கள்! அந்த இணைய தளத்தை யார் பயன்படுத்துகிறார்கள்?,  எப்போது உருவாக்கப்பட்டது,? எங்கிருந்து  செய்தி அனுப்பப்பட்டது ?  என்பதெல்லாம் இன்றைய நவீன தொழில் நுட்பத்தினால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.  ஆகவே, அந்த கோணத்தில்  உண்மையாக  புலனாய்வு செய்தால் சதிக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியும்.  அதனை செய்யாமல், அரசியல்  காரணங்களுக்காக   குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தானை குறை கூறுவது தவறு என கருதுகிறேன்.


          காரணம், இந்தியாவைப் போலவே தீவிரவாதத்தால்... இந்தியாவை விட அதிகமாக பாதிக்கப்படும் நாடு,  ஏராளமான குண்டுவெடிப்புக்கு ஆளான நாடு பாகிஸ்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.!

         பாகிஸ்தானில்  நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இந்தியாதான்  காரணம் என்று கூற முடியுமா?   இந்தியாவில் குண்டு வெடித்தால், உடனே பாகிஸ்தான் காரணம் என்று சொல்வதை என்னவென்று  நினைப்பது?

       உண்மையில் இருநாடுகளும் அணுஆயுதம் உள்ள நாடுகள், மதரீதியான  சச்சரவுகள்,  பொருளாதார நெருக்கடிகள்,  எல்லைப் பிரசனைகள் , காஸ்மீர் பிரச்சினை  என்று  உள்ள நாடுகள்.   இந்த நாடுகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும்  நிலவகூடாது என்று எண்ணி, ஆதாயம் பெரும் நாடுகள் ஏன் சதிவேலைகளை இருநாடுகளிலும் செய்ய கூடாது? என்று நினைக்கவும் அவ்வாறு  செய்கின்ற சதிவேலைகளா? என்றும் பார்க்கவேண்டி உள்ளது.


       அதனைப் பற்றி சிந்திக்காமல்,  "மொட்டைதாசன் குட்டையில் விழுந்தான்" என்பது போல, நமது புலனாய்வு புலிகளும்,"ஈஅடிச்சான் காப்பி" கணக்கான இந்துத்துவ சிந்தனை ஊடகங்களும்  சுற்றி,சுற்றி  குண்டு வெடிப்புகளுக்கு இந்திய முஜாஹீதீன்கள் காரணம் என்றும்  பாகிஸ்தான்  பின்னணி என்றும் கூறுவதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது.   ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி உண்மையாக நம்பவைக்கும், கோயபல்ஸ்  யுக்தியாக நினைக்கத் தொன்றுகிறது!

      போகட்டும்!   உண்மையில்  இந்தியன் முஜாஹிதீன்கள்  இருகிறார்களா? இருகிறார்கள் என்றால், அவர்கள்  இந்துக்களா? முஸ்லிம்களா? புலனாய்வு செய்து இன்டர்போல் அமைப்பு  சொல்ல  வேண்டும்.! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,சொல்லுங்க பிளீஸ்!


Comments

 1. இந்தியாவில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் எல்லாம் ஒன்று இந்து தீவிரவாத அமைப்பின் வேலை அல்லது இந்திய உள உ துரையின் செயலாகத்தான் இருக்க செய்யும்

  ReplyDelete
 2. மும்பை வெடிகுண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு,மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதல்ல. இந்துக்களால் நடத்தப்பட்டவையே. முஸலிம்கள் ரொம்ப சாதுவானவர்கள்.

  ம்.ம்.ம் அவிழ்த்துவிடுங்கள். நாம மதச்சார்பற்ற நாட்டில் இருக்கிறோம்.

  ReplyDelete
 3. Ada pogaya...now all T.V channels now exposed the terrorism support of pakistans...so poly-murpokuvathigale ungal mugathirai kizhithathu

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?