Posts

Showing posts from July, 2013

தமிழகத்தை குறிவைக்கும் தீவிரவாதம்

Image
சமீப காலமாக  தமிழகத்தில் நடந்துவரும்  தொடர் விபரீதங்களைப் பார்க்கும் போது  ஒட்டுமொத்த தமிழகமும்  தீவிரவாத நிழல் படிந்துள்ளதாக தோன்றுகிறது.  இந்துத் தலைவர்கள் கொல்லபடுகின்றனர்.

         அதற்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று  பொதுவான கருத்து உருவாக்கம்  ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.   இந்த கருத்து உருவாக்கத்தினை  ஒட்டியே உளவுத்துறையும்  சந்தேகத்திற்கு இடமே இன்றி.. முஸ்லிம்களை கைது செய்து, விசாரணை நடத்திவருகிறது.   முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டவுடன்  அவர்களைப்பற்றி  ஆதியோடு அந்தமாக இருந்து அறிந்துகொண்டதைபோல  பார்ப்பன ஆதரவு பரப்புரைகள்   ஊடகங்களில் பரபரப்பாக  செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன.


         இத்தகைய நிகழ்சிகள் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.  மறுபுறம் இந்துத்துவ தீவிரவாதம்  என்று எதுவும்  இல்லை என்பது நிலை  நாட்டப்பட்டு வருகிறது.  இந்துத்துவ வெறியர்கள்  என்பவர்கள்  தீவிரவாதிகள் இல்லை அவர்கள்
சாதுப்பூனைகள் என்ற நினைப்பை  பொதுமக்களிடம் விதைத்து வருவதைக்  காணமுடிகிறது.

        வேலூர் வெள்ளையப்பன் கொலை,சேலம் ஆடிட்டர் ரமேஷ் க…

போலி என்கவுண்டர்கள்...

Image
கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை,இராணுவம், துணை இராணுவத்தினர்  555 போலி என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் கமிஷன்  பதிவு செய்துள்ளது.

       போலி என்கவுண்டர்களில் 114 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. போலிஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில்  411 போலி என்கவுண்டர்கள் சம்பவங்கள்   இருந்துவருகின்றன.


      அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளில  புலனாய்வு துறை(C B I) ,C B C I D, அமைப்புகள் தலையிட்டு  விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம்  கேட்டுக்கொண்டும் இதுவரை போலி என்கவுண்டர் சம்பவங்களில் ஒன்றையும்  மேற்கண்ட அமைப்புகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும்  தெரியவந்துள்ளது.

        உத்திரபிரதேசத்தில் - 138 , மணிப்பூரில்- 62 ,அசாமில் -62 ,மேற்கு வங்கத்தில் -35 , ஜார்கண்டில் - 30 ,  சத்தீஸ்கரில் - 29 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இவைகள்  தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றவைகள் மட்டுமே.! ஆணையத்தின் கவனத்துக்கு செல்லாத போலி என்கவுண்டர்கள் எத்தனையோ?


         காஸ்மீர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் ,"சிறைக்கு…

காவல் துறையின் குற்றங்கள்..

Image
காவல் துறை உங்கள் நண்பன்  உங்களது இயல்பான வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும்  பணிபுரியும் சேவகர்கள்  என்று  கூறுவது  வாடிக்கையாகும். ஆனால், பல சந்தர்ப்பங்களில்  காவல்துறையினரின்  செயல்பாடுகளால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதும் எதார்ததமாகும்!

        தனக்கு வேண்டிய ஆள் சொன்னார்,தனது மேலதிகாரி சொல்கிறார்,  ஆளும்கட்சி பிரமுகர் சொல்லுகிறார்   என்னும் காரணங்களுக்காக குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறை  தக்க நடவடிக்கை எடுப்பதில்லை.! நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.


        இதன்மூலம், குற்றங்களின் தன்மை, குற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அளிக்க வேண்டிய பாதுகாப்பு, கிடைக்க வேண்டிய நிவாரணம், சட்டபடி  கிடைக்க வேண்டிய  நீதி ஆகியவைகள் கிடைக்காமல்  செய்துவருகிறது.

            குற்றம் செய்தவர்களின் மீது நியாயமாக எடுக்கும் நடவடிக்கையை  கைவிடுவது, அல்லது  குற்றத்தை மறைக்கும் செயல்களில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது, போன்ற செய்கைகளால் தனது அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகி,குற்றங்களை தடுப்பதற்கு பதில் அதிகரிக்கவும், குற்றங்கள் தொடரவும் …

படுகொலைகளைத் தடுப்பது எப்படி..?

Image
தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகள்  அதிகரித்து வருகிறது.  அரசியல் தலைவர்கள்  படுகொலை செய்யப் படுவதற்கு அரசியல் காரணங்கள்  மட்டுமின்றி,  வேறு காரணங்களும்  இருப்பதை மறுப்பதற்கு இல்லை.!

         தி.மு.க-வின்   திருச்சி  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரருமான,  ராமஜெயம் படுகொலைக்கு காரணம் என்ன? என்பது  இன்றுவரை தெரியாத மர்மம் ஆகவே இருந்து வருகிறது.!


           தி.மு.க-ஆட்சியில்  மிக சக்தி வாய்ந்தவராக மதுரையில்  இயங்கிய பொட்டு சுரேஷ் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார் .  கொலை வழக்கில்  பலரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் நிலையில் "அட்டாக் பாண்டி' என்பவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை அறிவித்து இருக்கிறது.  இன்றுவரை அவரை கைதுசெய்ய காவல்துறையால்  இயலவில்லை. !  நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் இந்நாளில் அட்டாக் பாண்டியை கைது செய்யாமல் உள்ளது  சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.!  அட்டாக் பாண்டி உண்மையில் உயிருடன் உள்ளாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

          தேர்தல் தகராறுகள், முன்விரோதம், கொடுக்கல்-வாங்கலில் ஏற்படும் பிரசன…

விப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்

Image
பெங்களூரில் இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்துக்கு  வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும்,அதனால் பெங்களூர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும்  செய்திகள் கூறுகின்றன.

       முன்பு நடந்த  ஒரு குண்டுவெடிப்புக்கு கேரளா முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானியை  தொடர்புபடுத்தி கைது செய்தது,கர்நாடக காவல்துறை.! பிறகு மல்லேஸ்வரம் பி.ஜே.பி அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பில்  திருநெல்வேலி காரனையும் ,மதுரை தள்ளுவண்டி முஸ்லிம்களையும், காரணமோ என்று கிசுகிசுத்தார்கள். தென்காசி முஸ்லிம் ஒருவரை  தொடர்பு இருக்குமோ என்று  கர்நாடாக காவல்துறை போலீஸ் கஸ்டடி எடுக்க இருப்பதாக  செய்தியை வெளியிட்டு உள்ளனர்..

         இத்தனை ஏற்பாடுகளுக்கு பிறகு விப்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது  இதுவரை குற்றம் சுமத்திய முஸ்லிம்களை இந்த மிரட்டலுக்கும் காரணமாக்கி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கவும் ,குண்டு வைப்பது முஸ்லிம்கள்தான் என்று நம்ப வைக்கவும் நடக்கும் நாடகம் இது என சந்தேகம் ஏற்படுகிறது!

        இது ஒருபுறம் இருக்க,  மாலேகானில் குண்டுவைத்த பெண் சாமியார் பிரக்யா சிங்கின…

பொது சிவில் சட்டம் தேவையா?

Image
விஷ்வ இந்து பரிஷத் தலைவர்   பிரவீன் தொகடியா  பாபர் மசூதி இருந்த அதே இடத்தில ராமர் கோயில் கட்டவேண்டும்,பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் இந்துத்துவ அமைப்பு தலைவர்கள் பலரும்  வெகுஜன மக்களான இந்துக்களின் வாக்குகளை மனதில் வைத்து இதுபோல பேசுவதுவாடிக்கையாக இருந்துவருகிறது!

       இந்தியாவில் உள்ள  முஸ்லிமோ,இந்துவோ, சீக்கியனோ,கிருத்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்த்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் கிரிமினல் (குற்றச்)  சட்டம் பொதுவானதாகும். கிரிமினல் சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்களது குற்றசெயல்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்,தண்டனை வழங்கவும் முடியும்.!


         பொதுவான கிரிமினல் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில்,  இந்துத்துவ வாதிகள்,   பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று இந்துத்துவ வாதிகள் தொடர்ந்து  ஏன் கூறுகிறார்கள்?

        இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கல்வி நிலையங்கள்,வழிபாட்டு உரிமைகள், அரசின்  நிதி ஒதுக்கீடு,உதவித் தொகை போன்ற…

மோடிக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக்!

Image
விவேக சிந்தாமணி என்ற பழைய நூலில் உள்ள பாடல் ஒன்று

"குக்கலைப் பிடித்து  கூண்டிலே அடைத்துவைத்து 
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும்
அக்குலம் வேறாமோ அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லலால் குலந்தனில் வேறாமோ ?! " -என்கிறது. குக்கல் என்றால்    நாய் என்று பொருள். (தெலுங்கில்)

       குஜராத் படுகொலைகள்,முஸ்லிம் மக்கள் இன அழிப்பு குறித்து   நரேந்திர மோடிபேசியதற்கு கடும் கண்டனங்களும்,விமர்சனங்களும் எழுந்து வருகின்றன


         நாய்களின் குணம் மாறாது என்பதை அப்போதே தமிழர்கள்   நூலில் பாடல்களாக எழுதி வைத்துள்ளதை அறிந்தால், "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடிபோகும்", அதன் குணம் மாறாது என்ற உண்மையை அறிந்தவர்களுக்கு, நரேந்திர மோடியின் நாய்குணம்,  பேய்குணம் குறித்தும் தெரிந்திருக்கும்!

       பி.ஜே.பி.-யின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அறிவித்த உடன் நரேந்திர மோடிக்கு இந்தியாவின் பிரதமராகவே ஆகிவிட்டது போல நினைப்பும், திமிர்த்தனமும் வந்துவிட்டது.ஆணவத்தின்எல்லைக்கே போய்  ஏதோதோ பிதற்ற ஆரம்பித்து விட்டார்.!        இனம் இனத்தோடு சேரும் என்பார்கள…

காதலுக்கு மரியாதை செய்வோம்,வாருங்கள்!

Image
இளவரசனின்  இறப்பு பரபரப்பாக  ஆக்கப்பட்டு, மிகபெரிய தலைவர் ஒருவரின் இறப்பைபோல  முக்கியத்துவம்  பெற்றுது. மனமொத்து காதலித்து கலப்புமணம் செய்துகொண்ட  இளம் ஜோடியான இளவரசன் திவ்யாவுக்கு  சமூக பாதுகாப்பு  இல்லாமல் போனதும்,அவர்கள் சேர்ந்து வாழ அனுமதிக்காமல்  போனதும் மிகபெரிய சமூக கொடுமையாகும்.!

       இளவரசனின் காதல் விவகாரம்  ஆரம்பத்தில் இருந்து சர்ச்சையாக ஆக்கப்பட்டது.   நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஊடகங்களும்,விடுதலை சிறுத்தைகளும்,வழக்கறிஞர்களும், இளவரசன் தரப்பினரும் முன்னுக்கு பின் முரணாக சித்தரித்து   குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.


         நீதித் துறையும் கூட உணர்வு பூர்வமான  இந்தவிவகாரத்தை  முறையாக விசாரிக்கவில்லை. இளவரசனுடன்  திவ்யா  இருப்பதை அறிந்தும்,அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வருவதை அறிந்திருந்தும் திவ்யாவின் தாயார்  கொடுத்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யாமல்,விசாரணைக்கு ஏற்றுகொண்டதால் இருவரும் சேர்ந்து வாழும் சூழலை கெடுத்து விட்டது! விளைவு,   திவ்யா ஒன்றாம் தேதி இளவரசனுடன் செர்ந்துவால்வதாக சொன்னவர்,மூன்றாம் தேதி மூளை சலவை செய்யப்பட்டு, இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ வழி…

இந்தியன் முஜாஹிதீன்கள் இந்துக்களா,முஸ்லிம்களா?

Image
சோனியாவும்,சிண்டேவும் குண்டுகள் வெடித்த மகாபோதி ஆலயத்தை பார்வை இட்டு உள்ளனர்.   குண்டு வெடிப்புக்கு  எந்த தீவிரவாத  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராத நிலையில், இந்தியன் முஜாஹிதீன்கள் பொறுப்பு ஏற்றுகொண்டதாகவும் அவர்களது ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்து உள்ளதாகவும்  செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

           அதுமட்டுமின்றி மும்பையில் ஒருவாரத்தில் பயங்கர நாசவேலையை செய்ய இருப்பதாகவும்  முடிந்தால் தடுங்கள் என்று எச்சரித்து உள்ளதாகவும் கூறுகிறார்கள்.


          எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இவ்வாறு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து,  சதிவேலைகளை செய்வதில்லை.  சதிவேலைகள் நடந்த பிறகுதான் செய்தது யார் என்றோ, எந்த அமைப்பு என்றோ  புலனாய்வு செய்து கண்டுபிடிப்பார்கள்!   இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ட்விட்டெரில் பகிரங்கமாக சவால் விட்டு இருப்பதை பார்க்கும்போது, அது உண்மையான பயங்கரவாத அமைப்பு இல்லை என்பதை (கற்பனை ) எளிதாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

          மேலும் அந்த செய்தி வந்த இணைய பக்கங்கள் போலியாக உருவாக்கப் பட்டவை என்று புலனாய்வு அதிகாரிகள் சொல்கிறார்கள்! அந்த இணைய தளத்தை யா…

ஊழலில் இந்தியா முதல் இடம்

Image
'டிரான்ஸ்பெரன்சிஇண்டர்நேஷனர்'என்றஅமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் லட்சத்து 14 ஆயிரத்து270 பேரிடம்  சர்வே நடத்தியது.
       இந்த சர்வேயில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் நடந்த 'ஊழல் அளவுக்கோல் 2013' சர்வேயில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது          ஊழலை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க, இந்திய அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

    '86 கதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கருத்துரைத்து உள்ளனர்!.
       ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையிலும் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.
          உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில்,   உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது' என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்தி…

குண்டுவெடிப்புக்கு புத்தரும் விலக்கில்லை!

Image
பீகாரின்  முக்கிய நகரான  புத்த கயாவில் உள்ள மகா போதி ஆலயத்திற்கு  உள்ளும் வெளியும் ஒன்பது குண்டுகள்  வெடிக்கப்பட்டு உள்ளது! உலக அளவில் பிரசித்திப்பெற்ற,புராதன சின்னமாக, புத்தர் ஞானம் பெற்ற இடமாக, கருதப்பட்டு வரும்  மகா போதி ஆலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி இருப்பதன் மூலம் தீவிர வாதத்துக்கு   புத்தரும் விலக்கில்லை என்று தெரிகிறது!


           வழக்கம் போல இந்த குண்டுவெடிப்புக்கும் இந்தியன் முஜாஹித் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று இந்திய ஊடகங்களும் புலனாய்வு புலிகளும் சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். இந்திய முஜாஹிதுக்கள்  முஸ்லிம்கள் தான் என்று கூற ஆரம்பித்து,புத்தர் கோவிலில் குண்டுவைக்க ஒரு பொருத்தமான கற்பனையை கூறவும் செய்வார்கள்!

            ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, பிடிபட்ட இந்தியன் முஜாஹித் ஒருவர்  மியான்மரில்  முஸ்லிம்கள்  மீது நடத்தும் தாக்குதலுக்கு  பழிவாங்கப் போவதாக சொன்னதாகவும்,  டெல்லி பொலிசார், உளவு பிரிவுக்கு சொல்லி,உள்துறை அமைச்சகம்  மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை  செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பபடுகிறது!


            இந்தியன் முஜாஹித்  என்பதே உளவுத…

சாதிகள் மட்டுமே நீதியானது!

Image
ஷாஜகானே.. ! நீயும் காதலித்தாய், மும்தாஜை நேசித்தாய்!
 உங்களால் காதல்ஆசீர்வதிக்கப்பட்டது!
காதலியின் இறப்புக்குப் பின்பும் உனதுநேசம்  உன்னதமென; உலகுக்கு அறிவித்தாய்! உதயமானது தாஜ் மஹால்!
உனது காதல் மட்டுமல்ல, நீ கட்டிய கல்லறையும்; காதலின் அடையாளமானது! உலகின் அதிசயமானது!
சாதியைச் சொல்லி,
காதலின் நீதியைக் கொன்று, காதலே குற்றமென்று.. இங்கே கல்லறை கட்டுகிறார்கள்!
சில்லறை மனிதர்களின், சிறுமதியால்  துவேசத்தால்; காதலே இன்று சமாதியானது! சாதிகள் மட்டுமே நீதியானது!

தரம்கெட்ட மனிதர்களும், சட்டங்களும்!

Image
மனிதர்கள் கல்வி பெற்றுள்ளனர். வசதி வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது,பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் அன்பு,பாசம்,அறிவு,நற்சிந்தனை, மனித நேயம்  முதலிய குணங்களை இழந்து,மிருகங்களாக மாறிவருகின்றனர் என்பதையே தருமபுரி  சம்பவங்கள், மரக்காணம் சம்பவங்கள் உணர்த்துகின்றன !

        மனிதர்கள் தரம்கெட்ட மிருகங்களாக மாறும் நிலையை கட்டுபடுத்த நமது அரசும்,  சட்டங்களும் தவறிவிட்டன என்பதால், இளவரசன் இறப்புக்கு... (அது  கொலையாக  இருந்தாலும் தற்கொலையே ஆனாலும்) அரசே  முதல் காரணம் ஆகும். !


        காதலுக்கு ஒரு சமூகம் ஆதரவாக,ஒரு சமூகம் எதிராக இயங்கியதை அறிந்தும் கண்மூடிக்கொண்டு மவுனமாக நமது அரசும்,சட்டங்களும் இருந்தது.

        கலப்பு திருமணத்தை சட்டம் அங்கீகரிக்கிறது, தீண்டாமை கொடும் குற்றம் என்று சொல்கிறது. காதலித்து,கலப்பு திருமணம் செய்த திவ்யா-இளவரசன் தம்பதிகளுக்கு  சமூக பாதுகாப்பு இல்லாத நிலையை அறிந்தும், அரசு பாதுகாப்பு தரவில்லை. இருவரும் சேர்ந்து வாழ எந்த ஏற்பாடும் செய்யவில்லை.!


        தீண்டாமையை  குற்றம் என்று  சொல்லும் சட்டம், தலித்துகள் குடியிருப்புகள்  கொளுத்தப்பட்டு, உடமைகள் கொ…

இந்தியா வல்லரசாக மாறும் வழிகள்!

Image
நமது நாடு, நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது!  கண்ணை மூடிக்கொண்டு எதைப் பற்றியும்  கவலை கொள்ளாமல் புதிய பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துவிட்டு,அதனை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது!


          புதிய பொருளாதார கொள்கையால் நுழைந்த பன்னாட்டு கம்பனிகள்,  எந்த விதிமுறைகளையும்,இந்திய சட்டதிட்டங்களை பற்றியும் கவலைப் படாமல்,  இந்தியாவை குப்பை மேடாக்கி வருகின்றன.

       இந்தியாவின் மண்ணும், விவசாயமும்,காற்றும் மாசுபட்டு விட்டது.  கனிமவளங்கள், இயற்கை ஆதாரம் சுரண்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டலுக்கும் லாபத்துக்கும்  இந்தியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது,

       ஐந்து ஆண்டு திட்டங்கள் பல தீட்டி,பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட  அடிப்படை கட்டமைப்புகள் சீர்குலைந்து வருகின்றன.  விவசாயமே ஜீவநாடியாக,  முதன்மை ஆதாரமாக இருந்த இந்தியாவில், இன்று குடிநீரின்றி,  பலகோடி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது!

       20-ஆண்டுகளுக்கு முன்பு,  நிலம் வைத்திருந்த இந்தியர்கள் இன்று நிலத்தை இழந்து, அவகளின் நிலங்களில் கூல…