தீவிரவாதத்துக்கு தீர்வு!

        தேசிய புலனாய்வு அமைப்புகள்  தீவிர வாத செயல்கள் குறித்த உளவுத் தகவல்களை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரி உள்ளார்.

          அவரது கோரிக்கை வரவேற்கதக்கது.நியாயமானதும் கூட.!  ஏனெனில் உளவுத்தகவல்களை மத்திய அரசும், மாநில அரசும் பகிந்துகொண்டு, ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் சமுக விரோத செயல்களை தடுக்க முடியும்.

        தேசிய புலனாய்வு அமைப்புகள் எந்த தகவல்களையும் மாநிலங்களுக்கு  கொடுக்காமல் மாநில அரசின் உதவியை, ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது! மத்திய அரசின்  புலனாய்வு  அமைப்புகள்  மாநில அரசுக்கு தகவல்கள் ஏதும் தராமல், தன்னிச்சையாக செயல்படுவதால் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

       சமூக விரோத செயல்களை  தடுக்க முடியாமல் உயிர் சேதம்,பொருளாதார விரயம், ஏற்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது ! அரசுக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது!

       மாநில அரசுக்கு உளவுத்தகவல்கள் முன்கூட்டியே தெரியவந்தால். தீவிரவாத,சமூக விரோத  செயல்கள் விரைவாக தடுக்க வழி ஏற்படும். ! 

       நாட்டில் அமைதியும், முனேற்றமும் ஏற்பட ஒன்றுபட்ட  விசாரணையும்   ஒன்றான செயலாற்றலும் மத்திய மாநில  அரசுகளுக்குள் ஏற்படவேண்டும். செய்வார்களா?


Comments

  1. நாட்டில் அமைதியும், முனேற்றமும் ஏற்பட ஒன்றுபட்ட விசாரணையும் ஒன்றான செயலாற்றலும் மத்திய மாநில அரசுகளுக்குள் ஏற்படவேண்டும். செய்வார்களா?
    >>
    செய்ய மாட்டாங்க. அப்புறம் எப்படி அரசியல் நடத்துறதாம்?!

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?