பி.ஜே.பி-யின் குடுமி..

          பாரதிய ஜனதா கட்சியில் யார் எந்த பொறுப்பில் இருக்கவேண்டும்,யார் பிரதமர் ஆக வேண்டும், யார் தலைவராக வேண்டும், இப்போது யாரை  ஓரங்கட்ட வேண்டும் என்பது  எல்லாம்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைமையின் உத்திரவுப்படி,விருப்பத்தின்படி, செயல்திட்டத்தின் படி நடந்து வருவது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான்!

      மோடியை நாடாளுமன்ற பிரசாரக் குழு தலைவராக பி.ஜே.பி.கட்சியின் செயற்குழு அறிவிக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட  அத்வானி, செயற்குழுவை புறக்கணித்தார். தனது பதவிகளை ராஜினாமா செய்து தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார், பி.ஜே.பி.யின்  தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வற்புறுத்தியும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

        நடப்பவைகளை கவனித்து வந்த பி.ஜே.பியின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர்  மோகன் பாகவத் தலையிட்டு அத்வானியின் முடிவை மறுபரிசீழனி செய்யுமாறும்,ராஜினாமாவை வாபஸ் வாங்குமாறும் சொன்னதற்கு பிறகு அத்வானியின் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளது! இதன் மூலம் அத்வானி ஆர்.எஸ்.எஸ்-சுக்கும்,அதன் தலைமைக்கும் அத்வானி கட்டுப்பட்டவர் என்பது தெரிகிறது!

          அத்வானியாகட்டும்,வாஜ்பாய் ஆகட்டும்,மோடியே ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிபணிந்து,கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை நிலையாகும் ! பாரதிய ஜனதா கட்சி  இப்போது என்றில்லை எப்போதுமே  ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்டுப்பட்டு,அதன் ஆலோசனைகளைப் பெற்று,அதன் விருப்பபடியே அரசியல் செய்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.!

         பாரதிய ஜனதா கட்சி  சுயமாக முடிவு எடுப்பது இல்லை .! ,இந்துத்துவ சிந்தனையை, செயல்படுத்தவே ஆர்.எஸ்.எஸ்-யின் கரமாக  செயல்படுகிறது. அத்வானியின் ராஜினாமா விவகாரத்தால் இந்த உண்மை பாமரர்களுக்கு தெரிந்து விட்டதே என்பதால் தான்  ஆர்.எஸ்.எஸ்-அமைப்பு  பி.ஜே.பி-ஐ கட்டுபடுத்துவதில்லை என்று அதன் தலைவர் அவசரமாக மறுப்பு தெரிவிக்கிறார்!

      பி.ஜே.பி-யின் குடுமி  இப்போது என்றில்லை,  எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் -யின்  கையில்தான்  இருந்துவருகிறது!

  பி.ஜே.பி.கட்சியானது ,ஆர்.எஸ்.எஸ்-அமைப்பால் இயக்கப்படும் அரசியல் ரோபாட் தான்!Comments

 1. பி ஜே பி குடுமியாவது உள்ளூர் மக்கள் கையில் உள்ளது. காங்கிரஸ் குடுமியோ வெளிநாட்டு மக்கள் கையில் அல்லவா உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. பதில் நெத்தியடி. ஆர்.எஸ்.எஸ் ஓர் தேசப்பற்றுள்ள அமைப்பு. அதன் வழிகாட்டலில் எந்த தீமையும் இல்லை. போலி மதச்சார்பு ஆசாமிகளுக்கு உள்ளூர் ஆட்களைவிட வெளிநாட்டு ஆட்களுக்கு சலாம் போடுவதில் ஒரு திருப்தி.

   மா.மணி

   Delete
 2. காலில் விலங்கு மாட்டாத பிரதமர் நமக்கு கிடைக்க மாட்டாரா?

  ReplyDelete
 3. விலங்கு இல்லாத பிரதமர் வருவது இருக்கட்டும், விலங்கே பிரதமர் ஆகும் சூழல்தான் இப்போது உள்ளது!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?