மோடி பிரதமரானால் என்ன நடக்கும்?

       " பாரத மாதாக்கி ஜே,'",  "ஓம்.. ஓம்..  காளி' " "'ஜெய் ஜெய் காளி'"  என்று  ஓங்காரமிடும் இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் திருமண உதவித் திட்டத்தில் திருமணம் செய்ய முன்வந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தி,தனது கொடூர வக்கிரத்தை காட்டி,பெண்களை பி.ஜே.பி-மதிக்கும் லட்சணத்தை பறை சாற்றியுள்ளது!

        இந்துத்துவ  சிந்தனை கொண்ட எந்த அமைப்புகளும்,நபர்களும்  ஆண்களுக்கு  நிகராக பெண்களை மதிப்பதில்லை,  என்பது நிதரிசனம்!   இந்துத்துவ சிந்தனையை  அடித்தளமாக கொண்ட அதன் சாத்திரங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவைகள்  தொன்றுதொட்டு பெண்களை கேவலப்படுத்தி வருகின்றன! . அவற்றை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்ளும் இந்துமனுதர்ம வாதிகளிடம்  பெண்ணுரிமை கேட்பதும், எதிர்பார்ப்பதும்  இயலாத  காரியமாகும்!

          ஆற்றுக்கும்,மாட்டுக்கும்  பெயர்  வைத்து பெண்களைப்  போற்றுவதாக கூறும் காவிக்கும்பல்கள்  நிஜ வாழ்க்கையில்  பெண்களை மதிப்பதில்லை! பெண்களை  .இழிவுபடுத்தி,அடிமைப்படுத்தி, தனது வக்கிரங்களைத் தீர்த்துக்கொண்டு, அவர்களைக் கொடுமை செய்யத் தவறுவதில்லை  என்பதையே,  மத்திய  பிரதேசத்தில்  பெண்களுக்கு நடந்த கன்னித்தன்மை சோதனை நிருபிக்கிறது!

         " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் "என்றான் பாரதி !  பெண்களை இழிவு செய்வதை நியாயப்படுத்தும்  காவிகும்பலிடம்  நாட்டை ஒப்படைத்தால்  கன்னித்தன்மை சோதனையைபோல பல சோதனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும்..!

     இறையாண்மை உள்ள இந்தியாவில்,  மத சார்பான   பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்த்தது போல,  "கட்டாய கன்னித்தன்மை சோதனை" என்று சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள் என்று  நினைக்க தோன்றுகிறது!

     இந்த லட்சணத்தில், பெண்களும்,முஸ்லிம்களும்,தலித்துகளும் அடிமைகள்    என்று நினைக்கும்  "இந்துமத சிந்தனையை  அமலாக்க வந்துதித்த  அவதாரபுருஷர் " என்று இந்துமதவாதிகளால்  சித்தரிக்கப்படும்   நரேந்திர மோடி, பி.ஜே.பி-யின்  பிரசாரகுழு தலைவராக்கப்பட்டு இருக்கிறார். இவர் பிரதமரானால்  மனுதர்மத்தை  காக்க எப்படியெல்லாம் சிந்திப்பரோ என்று கவலை ஏற்படுகிறது!

  "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால். "  என்ற பாரதியின்  பரிதவிப்பில்  எவ்வளவு உண்மைகள்!

        கன்னித் தன்மை சோதனை நடத்திய கயவர்களை நினைக்கும்போது, நமது நெஞ்சமும் குமுறுகிறது


Comments

 1. // இந்துத்துவ சிந்தனை கொண்ட எந்த அமைப்புகளும்,நபர்களும் ஆண்களுக்கு நிகராக பெண்களை மதிப்பதில்லை, என்பது நிதரிசனம்! இந்துத்துவ சிந்தனையை அடித்தளமாக கொண்ட அதன் சாத்திரங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவைகள் தொன்றுதொட்டு பெண்களை கேவலப்படுத்தி வருகின்றன! . அவற்றை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்ளும் இந்துமனுதர்ம வாதிகளிடம் பெண்ணுரிமை கேட்பதும், எதிர்பார்ப்பதும் இயலாத காரியமாகும்!//

  கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிதல் தவறாமே ... அப்டியா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உதாரணம் சரியல்ல! இப்படி நினையுங்கள்,. உடன் இருந்தே கொல்லும் வியாதிகளை ஏற்பது சரியா?

   Delete
  2. /.பெண்ணுரிமை கேட்பதும், எதிர்பார்ப்பதும் இயலாத காரியமாகும்!//...

   சென்ற வாரத்தில் ஒரு நாள் இந்து பேப்பரின் நடுப்பக்க கட்டுரை ஒன்றில் (தேதி நினைவில்லை) பழைய அ.தி.மு.க. பெண் எம். எல்.ஏ. ஒருவர் தலாக் வைத்து இஸ்லாமியப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துகிறார். அதையும் படித்துப் பாருங்கள். - உங்கள் மதத்தில் உள்ள குறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

   Delete
 2. அய்யா தருமி அவர்களுக்கு கண்டதெல்லாம் காமாலை போல காவி கும்பலை விமர்சிப்பவர்கள் எல்லாம் அவருக்கு இஸ்லாமியர்களாகத் தெரிகிறார்கள் பாவம். தலாக் என்பது பெண்களுக்கும் இருக்கும் விவாகரத்து உரிமை. பர்தா போடுவதையும், தலாக்கையும் மட்டும் வைத்தே இஸ்லாமை விமர்சிக்கும் தருமி போன்றவர்கள் இஸ்லாத்தில் இருக்கும் பெண்களுக்கான சொத்துரிமை பற்றி பேசுவதே இல்லை. தருமி போன்றவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அத்தனை நாளும் அந்த பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவர்கள் ஒரு பாத்திரத்தைத் தொட்டால் கூட அது தீட்டாகி விடும். ஆனால் நாங்கள் எங்கள் மனைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களோடு இணைந்து ஒரே தட்டில் சாப்பிடுவோம், உங்களைப் போல ஒதுக்கி வைக்க மாட்டோம். இப்போது சொல்லுங்க தருமி, கண்ணாடி வீடு எது என்று.

  ReplyDelete
 3. இதையே நாங்க சொன்னா அதுக்கு மத சாயம் பூசுவார்கள் தவறு அது யார் செய்தாலும் தவறே

  ReplyDelete
 4. //அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அத்தனை நாளும் அந்த பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்//
  ஆறாம் நூற்றாண்டு பர்தாவை தற்போதும் அணியும் படி பெண்களை கட்டாய படுத்துவதால் மற்றவர்களும் உங்களை மாதிரி பிற்போக்கானவைகளை எல்லாம் இப்பவும் பின்பற்றுறாங்க என்று கற்பனை பண்ணி கொண்டிருக்கிறீர்கள்.
  அவரவர் வசதிக்காக காபிர்கள் தனி தனி தட்டில் தான் எப்போதும் உணவு உண்போம்.

  ReplyDelete
 5. //இஸ்லாத்தில் இருக்கும் பெண்களுக்கான சொத்துரிமை பற்றி பேசுவதே இல்லை. //

  தாரளமாக பேசலாமே, இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த புளுகை சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள். இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்கள் யாரும் சொத்துரிமை, கல்வி உரிமையுடன் இருக்கவில்லையா? முகமத்வின் மனைவி கதீஜாவே அதற்கு ஒரு உதாரணம், முகமத்விற்கு வஹீ வந்து இஸ்லாம் இறங்கும் முன்பே கதீஜா பெரிய செல்வந்தராக சொத்துரிமையுடன் இருந்திருக்கிறார், கல்வி கற்றவராகவும் இருந்திருக்கிறார், விதவையான அவர் மறுமணமும் செய்திருக்கிறார் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தனது கணவனை அவரே தேர்ந்து எடுத்திருக்கிறார், வியாபாரத்தில் ஈடுபட்டு பொருள் திரட்டி இருக்கிறார். இதில் இருந்தே தெரிகிறது இஸ்லாம் எந்த உரிமையும் புதிதாக பெண்களுக்கு கொண்டு வரவில்லை என்பது, கதீஜா அவர்கள் இவ்வளவு உரிமைகளுடன் வாழ்ந்ததை மறுக்கிறீர்களா? அதை இஸ்லாமா கொடுத்தது. ஆனால் பரிதாபம் என்ன தெரியுமா, இஸ்லாம் வந்து கதீஜா அவர்கள் அதை ஏற்று கொண்ட பிறகு முகமதுவிற்கு பிரியாணி சமைத்து போடுவதற்காக அடுக்களைக்கு உள்ளே போனவர் அதன் பிறகு வெளியே வரவே இல்லை. அது தான் இஸ்லாம் கொடுத்த உரிமை. ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல குரானில் இது போன்று எத்தனை புளுகு மூட்டைகளை வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தான் தெரியும்.

  //தருமி போன்றவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அத்தனை நாளும் அந்த பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். //

  அந்த காட்டுமிராண்டி காலத்தை விட்டு நாங்கள் எல்லாம் வெளியில் வந்துவிட்டோம், பெண்களை ஒதுக்கி தனியாக 3 நாட்கள் வைத்திருப்பதை எந்த வீட்டில் இப்போது கண்டீர் . நீங்கள் தான் இன்னும் 1400 வருடத்திற்கு முந்தைய அரபு பாலைவனத்தை விட்டு வெளியில் வர மறுக்கிறீர்கள்

  ReplyDelete
 6. Anandan Krishnan,

  உங்கள் பின்னூட்டம் மிக நன்றாக உள்ளது. இதுவரை நான் நினைக்காத ஒரு விசயத்தைப் பட்டென்று போட்டுடைத்திருக்கிறீர்கள்.

  நன்றி.

  ReplyDelete
 7. ஒவ்வொரு நடவடிக்கையையும் முதல்வரும் அமைச்சர்களும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார்.
  எல்லாவற்றிக்கும் இந்துத்வா முத்திரை குத்தும் முற்போக்குவியாதிகளுக்கு நாட்டை ஊழலால் நாறடிக்கும் காங்கிரஸ்,ராஷ்ட்ரீய ஜனதா பற்றி எந்த கருத்தும் வெளியிட மாட்டார்கள்.
  மா.மணி

  ReplyDelete
 8. அடப்பாவிகளா? வாய்க்கு வந்தபடி பிதறகறவேண்டாம் , இந்துத்வா பெண்ணுரிமை இல்லையா ? குஜராத்தில் பெண்களை சென்றால் தாண்டியா ஆட்டமும் , தசராஆட்டங்களும் சமூக சுதந்திர உணர்வின் வெளிப்பாடே மேலும் இந்து மதம் மூடநம்பிக்கையின் இருப்பிடமென சில முட்டாள் கிளப்பிவிட்டுள்ளனர் .பேரரிஞர் அண்ணா உரைத்த மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் ,நம்வீட்டு தேளேகொட்டினாலும் என்றது மரமண்டைகளுக்கு உரைக்கவில்லை, காகம்,கிளி,மயில் போன்ற பறவைகள் மகத்துவமுடையது. முதலாவது சூழலின் கழிவுகளை உணவாக கொண்டு சுற்றுசூழலை சுத்தமாக்குகிறது,கிளி வாழ்வின் சுக துக்கங்களிலும் கொஞ்சலும் குலாவலுமே உண்டு,மயில் மற்ற பறவை விலங்குகளை போல் அஞ்சி நடுங்கி ஓடி ஒளியாமல் தோகை விரித்து நடனமாடுகிறது . முட்டாள்தனமாக கிளியின் அழகை காக்கையிடமும் மயிலின் தோகையை கிளியிடமும் எதிர்பாரப்பது போல ஒரு மதத்தின் சிறப்பை உணரமுயலாமல் பிதற்றாதீர்கள் ..

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?