Posts

Showing posts from June, 2013

அம்பலம் ஆகும் காவி பயங்கரம்!

Image
சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக  மத்திய அரசு அறிவித்து உள்ளதுடன் தீவிரவாதத்தில்  தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களையும் சமீபத்தில்   பகிரங்க படுத்தியது! ம‌த்‌திய அரசின் இந்த அறிவிப்பை, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மறுக்க வில்லை  என்பதில் இருந்து  காவி பயங்கரவாதத்தை அவர்கள் செயல்படுத்தி வருவதை ஒப்புக் கொண்டுள்ளனர்!


      மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, முன்பு “தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என்ற பொது கண்டித்த,வானத்துக்கும் பூமிக்கும் குதித்த வானர சேனைகள் வாயடைத்து அமைதி காப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்!

       மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் , “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்த பட்சம் ஆர்.எஸ்.எஸ்…

கலைஞருக்கு அண்ணாவின் கேள்விகள்!

Image
நான் அடிப்பையில் மாகா.. மெகா  சோம்பேறி.! இல்லையென்றால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக  அண்ணா சமாதியில் உண்ணாநோன்பு(?) இருந்த போது கோபத்தில் எழுதிய கவிதை இது !

 கோபத்தில்  எதையும் செய்யகூடாது என்பதால்  இதனை உடன் பகிர யோசித்தேன்!  பொறுத்தது போதும் என்று பொங்கிவிட்டேன்!


கலைஞருக்கு அண்ணாவின் கேள்விகள்!

எதையும் தாங்கும் இதயத்தை நீ,
எதற்கு கேட்டாய் தம்பி?
எனது கிளையின் முன்னேற்றத்திற்கு
இரவல் கேட்டேன் எமது அண்ணா !

ஈழத் தமிழர் இழிவு  கண்டும்
இறங்காததா? சொல் எமது இதயம்?
எல்லா தமிழர் இன்னல்களில்-உன்
 இதயத்தோடு நான்  இருக்கிறேன், அண்ணா !

இருப்பது நமக்கு ஓருயிர்-அதை
இழக்கும் தருணம் இது இல்லையா?
இருப்பதை காக்க, இன்னும் சேர்க்க;
உன் இதயம் தேவை எமதண்ணா !

பதவி நமக்கு தோள் துண்டு-என
பகர்வது தானே? நம் கொள்கை!
கொள்கை அது கோவணத்துக்கு ஆகும்;
கோடிக்கு ஆகுமா? சொல் அண்ணா!

மது மயக்கமும்,புகழ் மயக்கமும்;
தமிழர் தேவையா, சொல் தம்பி?
பதவியும் பணமும் என் உடனிருக்க,
உதவிடும் தேவைகள் அவை அண்ணா!

ஆரிய மாயைபோல் திராவிட மாயையும்
ஆகிவிட்டதோ,நம்  தமிழகத்தில்?
பதவி,பணத்தை வகுத்து தரும்,
புதிய மாயை அது  அண்ணா!…

தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவு!

Image
கனிமொழி எம்.பி.ஆகிறார்.தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவால் கனிமொழி ராஜ்ய சபை தேர்தலில் வெற்றிபெறுவதும்   எம்.பி.ஆவதும் உறுதியாகி விட்டது! ஆளாய் பறந்து,  காலை பிடிக்காத குறையாக.. திமுக பிரமுகர்கள் யார் யாரையோ பார்த்து, ரகசிய  உறுதிமொழி கொடுத்து, புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவை பெற்றார்கள்!  பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுக்கு ஸ்டாலின் அலைந்தும்  கூடாமல் போய்விட்டது! கனிமொழி தோற்று விடும் நிலை இருந்தது! ஆனால் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்து உள்ளது!


       காங்கிரசின் கை  தி.முகவின் கனிமொழியைக் காப்பாற்றி இருக்கிறது! கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்திருப்பதன் மூலம்   இனம் இனம் இனத்தோடு சேரும் என்பார்களே அதுபோல  ஊழல் ஊழலோடும்,துரோகம் துரோகத்தோடும்  சேர்க்கிறது என்பது தெரிகிறது.

         காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதும், காங்கிரசுக்கு தி.மு.க கொடுத்துவந்த ஆதரவையும் விலக்கி கொண்டதற்கு கருணாநிதி  கூறிய காரணம்,"  ஈழதமிழர்கள் விவகாரத்தில்  மதிய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து  வருகிறது" என்பதுதான்.! இலங்கையில் படுபயங்கரமான  போரை இந்தி…

அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்!

Image
திராவிட முன்னேற்ற  கழகத் தலைவர்களாக இருந்த அறிஞர் அண்ணாவையும்  கலைஞர் கருணாநிதியையும் ஒப்பிட்டு பார்த்தல் மலையளவு வேறுபாடுகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என்பது தி.மு.க-வின் தாரக மந்திரம்,கொள்கை முழக்கம். அண்ணாவின் காலத்தில் இருந்தது. கலைஞர் காலத்தில் இல்லாமல் போய்விட்டது.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான்  என்ற பழமொழிக்கு ஏற்ப தம்பிக்கு என்று தனது திராவிட நாட்டில்  அண்ணா கடித இலக்கியம் எழுதினார்.
உடன்பிறப்பே என்று முரசொலியில் சாடல்,சால்ஜாப்பு, மழுப்பல், குற்றச்சாட்டுகளை கலைஞர்  எழுதுகிறார்!


 அண்ணா கழகம் ஒரு குடும்பம் என்ற பாசத்தை தமிழர்களிடம் விதித்தார்,வளர்த்தார் !
கலைஞர் குடும்பத்தையே கழகமாக எண்ணினார்,வளர்த்தார்!


அண்ணாவின் அன்புத் தம்பியில் உண்மையான பாசமும் நேசமும் இருந்தது! கலைஞரின் உடன்பிறப்பில் வேஷமும்,நடிப்பும் இருக்கிறது.


 அண்ணா தனது அரசியல் வாரிசாக தனது குடும்பத்தில் யாரையும் முன்னிறுத்தவில்லை. தனக்கு அடுத்த தலைவராக தி.மு.கவிற்கு நாவலர் நெடுஞ்செழியனை அடையாள படுத்தினார்
கலைஞர் தனது வாரிசுகளை மட்டுமே  அரசியல் வாரிசாக,அடுத்த திமுகவின் அடுத்த தலைவர…

முஸ்லிம்களுக்கு கலைஞரின் துரோகங்கள்!

Image
முஸ்லிம்கள்   மற்ற கட்சிகளைவிட,  தி.மு.க-வுக்கு அதிமாக   ஆதரவு அளித்து வருகிறார்கள்!  தி.மு.க-வுக்கு முஸ்லிம்கள்  ஆதரவு தருவது தலைமுறையாக தொடர்ந்து வருகிறது!

     ஆனால், தி.மு.க-வின் தலைவரான கலைஞர் தொடர்ந்து முஸ்லிம்களைவஞ்சித்து வர தவறியதே இல்லை! இஸ்லாமிய மக்களின் ஜீவாதார உரிமைகளுக்காக அவர் செய்தது எதுவும் இல்லை!

       1989-91 இடையில் தி.மு.க-ஆட்சியில் இருந்த போது, தனது சுயநல அரசியலுக்கு  (முஸ்லிம்களை  பற்றி கவலைபடாமல்), ஜனதா தளம் பி.ஜே.பி-க்கு அதரவு அளித்தார்.  தனது மருமகன் முரசொலி மாறனுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு, பி.ஜே.பி-யின் இரத யாத் திரைகளுக்கு  ஆதரவு  அளித்தார்!  தமிழகத்தில் ராம்சீலாபூஜை, செங்கல் பூஜை யாத்திரைகள் நடத்த தனது அதிகாரத்தைப்  பயன்படுத்தி,ஆதரித்தார்!

கலைஞரின் ஆட்சியில்  வி-களத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஊர்களில்  முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன!  முஸ்லிம் பெண்கள் அவமரியாதை செய்யப்பட்டனர். கலைஞர் நடவடிக்கை எடுக்கவில்லை.! கலவரத்துக்கு காரணமான இராம கோபாலனை கைதுசெய்யவில்லை! ஆனால்,தேசிய பாதுகாப்பு சட்டம் உள்பட நூற்றுகணக்கான …

அண்ணாவின் முஸ்லிம்கள் பாசம்.!

Image
பேறிஞர் அண்ணாவுக்கு பிறகு திராவிடக் கட்சிகள் எதுவும் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை.! அண்ணா கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முஸ்லிம்களிடம் மிகுந்த நேசமுடன் பழகிவந்தார். அதற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற தலைவரின் நட்பும்,முஸ்லிம்களின் வாக்கு வங்கியும் காரணமாக இருந்தது!


     இதனால்  இஸ்லாம் மார்க்க சிறப்புகள்,முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் லீக் குறித்து பல்வேறு சமயங்களில் அண்ணா  பாராட்டி பேசினார்! அண்ணாவுக்கு அறிஞர் என்ற பட்டதை," செய்கு தம்பி பாவலர்" என்ற ஒரு முஸ்லிம்தான் வழங்கினார்!

     கடவுள் இல்லை என்று சாதித்த பெரியாரிடம் இருந்து  பிரிந்து வந்த அண்ணா," ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று  அறிவித்தார்."ஓர் இறைக் கொள்கையை ஏற்றுகொண்ட காரணத்தால் நானும் ஒரு முஸ்லிம்தான்"என்று  மிலாது நபி விழா பொதுக்கூட்டங்களிலும் ,பள்ளிவாசல் திறப்பு விழா கூட்டங்களிலும் பகிரங்கமாக பேசினார்! அண்ணாவின் இத்தகைய பேச்சுக்கள் முஸ்லிம்களை பெரிதும் கவர்ந்தது! தவிர,  முஸ்லிம்கள்  தங்களது கடவுள் கொள்கையை  ஒட்டி அண்ணாவின் பேச்சுக்களை  ஒப்பீடு  செய்ததால், மற்றவர்களைக் கட்டி…

முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்!

Image
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பிறகு முஸ்லிம்களின் அரசியல் திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் அரசியலாக மாறிவிட்டது!

   1947-யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 29 சட்டமன்ற உறுபினர்கள் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராக இருந்தார் .அதற்கு பிறகு, முஸ்லிம்களின் மக்கள் பிரதிநித்துவம்," கழுதை தேய்ந்து கட்டெறும்பான" கதைதான்!


        அல்லாஹ் ஒருவரை தவிர ஆண்டவன் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருப்பது போலவே,  அரசியலில் முஸ்லிம்கள் கருணாநிதியை தவிர  ஒருவர் முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள்!

      இது சமீபத்தில் ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக, கனிமொழிக்கு  வாக்களிப்பதாக மனித நேய மக்களை கட்சி செய்துள்ள அறிவிப்பில் இருந்து தெரிகிறது!


       மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்காளர்கள்,தலித் வாகாளர்கள் அடுத்து,அதிக அளவு வாக்காளர்கள் முஸ்லிம்கள்தான்! இருந்தும் கூடஒவ்வொரு தேர்தலிலும்  தங்களது வாக்கு வங்கியின் மீது நம்பிக்கை வைக்காமல், தனித்து நிற்கும் முயற்சிகளை…

நாட்டையும் கொஞ்சம் பாருங்களேன்!

Image
வட இந்திய மாநிலங்களில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அங்குள்ளவர்கள்  பதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பும் நடந்து உள்ளது. கங்கையிலும், யமுனையிலும் வெள்ளம் பெருகி ஓடுகிறது,  தங்களது வாழ்விடங்களை இழந்தும், உணவுக்கு வழியின்றி கடும் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர்!

    இயற்கையின்  கோரதாண்டவம் இது என்றாலும், மக்களை காக்கும் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  புகலிடம் அளிப்பதிலும், அவகளது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டவில்லை என்று தோன்றுகிறது!


       எதிர்வரும் மாநில தேர்தல்கள்,நாடாளுமன்ற தேர்தல் குறித்து கொள்ளும் கவலையை , அக்கறையை   மக்களின் நலத்தில்,அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்வதில் காட்டாமல் இருக்கின்றன!

     மனிதநேயமும்,சக மனிதனின் உணர்வுகளைக் கூட மதிக்காத  நிலையை அரசியல்வாதிகள்  ஏற்படுத்தி விட்டார்கள்!  மக்களை மறந்துவிட்டு  எல்லாம் அரசியல், பதவி வெறி, அதிகார போதை  என்று  அலைகிறார்கள்!

        கங்கையையும் காவிரியும் இணைக்கவேண்டும் முன்பு பேசினார்கள். இன்று மறந்தும் கூட அதைப்பற்றி பேசுவதில்லை.! பேச நாதி இல்லை! நதிகளை இணைத்து இருந்தால், வட இந்திய மாநிலங்கள் இன்று …

ராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்!

Image
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட வேண்டிய 6  ராஜ்யசபை எம்.பி.-களின் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!  கட்சிகளுக்கு இடையில் முன்பு இருந்த செல்வாக்கும், புரிந்துணர்வும்  இப்போது இல்லை ! ஆகையால்,போட்டியிடும் உறுபினர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  எனவே, ,தேர்தல் நடைபெறுவது  தவிர்க்க இயலாததாக மாறி உள்ளது!  முன் எப்போதும் இதுபோன்ற கடும்போட்டியும், தேர்தலும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றே சொல்லலாம்!


      அரசியல் கட்சிகளின் பலம்,போட்டியிடும் நபரின் பொது சேவை, தகுதிகளை வைத்து   தேர்வு செய்யப்படுவதும், அவருக்கு  இதர கட்சிகளும்   மனமுவந்து ஆதரவு அளிப்பதும் நடைமுறையாக இருந்த தமிழகத்தில்,  இப்போது வேறு வழியின்றி தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

      இத்தகைய சூழ்நிலைக்கு,அரசியல் கட்சிகளில் ஆ.தி.மு.க-வை தவிர எந்த கட்சிக்கும் உறுபினராகும் அளவுக்கு  ஓட்டுகளும்,எண்ணிக்கை பலமும் இல்லாததும் காரணமாகும்!.

        தி.மு.க-வுக்கு, கட்சித்தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசபை எம்பியாவது மிக முக்கியம் என்று கருதுகிறது! .இது அக்கட்சியின் …

சாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி?

Image
எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு என்பது நியுட்டனின் கோட்பாடு.அதைப்போலவே ( intention meets us  at every steps) என்பது ,ஆஸ்டின் என்பவரின் தத்துவம் "ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது" என்கிறது. .போலீசார்  இதனை மோடிவ் என்று குறிபிடுகிறார்கள்! குற்றங்கள் உணர்ச்சிவேகத்தில் செய்யபடுபவை ஆயினும்,குற்ற நிகழ்வுக்கு பின்னணியில் உள்ள காரணமே  குற்றம் நிகழ்த்தப்பட காரணமாக உள்ளது என்பதாகும்.

      மேற்சொன்ன தத்துவமானது, நமது நாட்டில் இதுவரை நடந்துள்ள சாதீய, மதக்  கலவரங்களுக்கும்,அதன் வழியே நடைபெற்ற குற்றங்களுக்கும் பொருந்தும்.!  ஒரு சாதியினரை,,மதத்தினரை, தொடர்ந்து ஒதுக்கிவைத்து, அவர்களிடம்  வேற்றுமைகளை ஏற்படுத்தி, தொடர்ந்து வெறுத்தும்,இழித்தும் பழித்தும் வருகின்ற கொடுமை நடந்துவருகிறது!


          தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் சாதியை சேர்ந்தவர்கள், மதத்தை சேர்ந்தவர்கள்  தங்களை வெறுத்து ஒதிக்கி,கேலிபேசி,ஒடுக்கி வருபவர்கள் மீது கோபம் கொண்டு  எதையாவது பேசும்போதும், எதிர்வினை ஆற்றும் போதும், மோதல் ஏற்படுகிறது,மோதல் கலவரமாக மாறுகிறது!

           அடிப்படை …

ஆர்.எஸ்.எஸ்-யின் போலி தேசப்பற்று!

Image
ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபற்று உள்ள இயக்கம் அதன் வழிகாட்டுதலில் எந்த தீமையும் இல்லை என்று சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்து உள்ளார்கள். அவ்வாறு  சொல்பவர்கள், ஒன்று  கடந்த கால ஆர்.எஸ்.எஸ்-யின் வரலாறும் செயல்களையும் அறியாதவர்கள் ஆக இருக்கலாம்  அல்லது அறிந்தும் அதனை மறைக்க நினைத்து செயல் படுகிறார்கள் என்று கருதலாம்!

   ஆர்.எஸ்.எஸ்-யின் அபாயம் என்று 'கங்கைகொண்டான்' என்ற புனைபெயரில் "விடுதலை ராஜேந்திரன்"  40 தொடர் கட்டுரைகள் எழுதி,அது நூலாகவும் வெளியானது! ஆர்.எஸ்.எஸ் ஒரு  தேசப் பற்றுள்ள இயக்கம் என்று நினைப்பவர்கள்,அந்த நூலை படிப்பது நலம்.! 


     தேசதந்தை  மகாத்மா காந்தியை  ஒருமுறை ஆர்.எஸ்.எஸ்-நடத்தும் வார்தா பயிற்சி முகாமுக்கு   அழைத்தார்கள்.  அங்கு சென்று ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கைகளைக்  கவனித்த காந்தி,   "'இட்லரின் நாசிப்படையும்,முசோலினியின் பாசிஸ்ட் படையும் இதுபோல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்'"  என்று கருத்துரைத்தார்.இன்றுவரை காந்தியடிகளின் கணிப்பை மெய்யாக்கி,தாங்கள் பாசிசவாதிகள் என்பதை    ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிரூபித்து வருகிறது!

  …

பி.ஜே.பி-யின் குடுமி..

Image
பாரதிய ஜனதா கட்சியில் யார் எந்த பொறுப்பில் இருக்கவேண்டும்,யார் பிரதமர் ஆக வேண்டும், யார் தலைவராக வேண்டும், இப்போது யாரை  ஓரங்கட்ட வேண்டும் என்பது  எல்லாம்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைமையின் உத்திரவுப்படி,விருப்பத்தின்படி, செயல்திட்டத்தின் படி நடந்து வருவது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான்!

      மோடியை நாடாளுமன்ற பிரசாரக் குழு தலைவராக பி.ஜே.பி.கட்சியின் செயற்குழு அறிவிக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட  அத்வானி, செயற்குழுவை புறக்கணித்தார். தனது பதவிகளை ராஜினாமா செய்து தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார், பி.ஜே.பி.யின்  தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வற்புறுத்தியும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

        நடப்பவைகளை கவனித்து வந்த பி.ஜே.பியின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர்  மோகன் பாகவத் தலையிட்டு அத்வானியின் முடிவை மறுபரிசீழனி செய்யுமாறும்,ராஜினாமாவை வாபஸ் வாங்குமாறும் சொன்னதற்கு பிறகு அத்வானியின் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளது! இதன் மூலம் அத்வானி ஆர்.எஸ்.எஸ்-சுக்கும்,அதன் தலைமைக்கும் அத்வானி கட்டுப்பட்டவர் என…

குற்றங்களும் நீதித்துறையும்...

Image
கிரிக்கெட் மேச் பிக்சிங்  குற்றசாட்டில் கைதான பலருக்கும் ஜாமீன் கிடைத்து உள்ளது!  ராஜஸ்தான் ராயல் அணியின் கிரிக்கெட் வீரர், ஸ்ரீ சாந்த் நான் குற்றம் செய்யவில்லை,எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது  என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.!


        தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் மிக பெரிய முறைகேடுகளில் பலரும் கைது செய்யப்படுகிறார்கள்! கைதான பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்படுவதும்,நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, விசாரணை நடத்துவதும்  அண்மைகால நிகழ்வுகளாக உள்ளன.

           குற்றங்களின் பேரில் வழக்குபதிவு செய்து, நீதிமன்றங்களில் வழக்கு நடந்துவரும் நிலையில் குற்றவாளிகள் ஜாமீன் பெற்று வெளி வருவதும், பேட்டி அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

       அவ்வாறு பேட்டி அளிக்கும் பிரபலங்கள்  வழக்கமாக கூறும் பதில்,' நான் எந்த தப்பும் செய்யவில்லை,' 'வழக்கில் என்னை மாட்டிவிட்டார்கள்.,நான் அப்பாவி,' எனக்கு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, நிரபராதி என்று நிருபிப்பேன்  என்பதுதான்.ஸ்ரீ சாந்தும் இதைதான் செய்து இருக்கிறார்.!

       மிகபெரிய முறைகேடுகளில், குற்ற…

அத்வானியின் அம்புப் படுக்கை..

Image
தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜினாமா செய்தது குறித்து  பீஷ்மரைப் போல தான்  அம்புப் படுக்கையில் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்

          85-வதாகும் அத்வானி இனிமேல் பாரதிய ஜனதாவில் பெரிதாக எதுவும் சாதிக்க போவதில்லை. என்றாலும், பவர்புல் அரசியல்வாதியாக இந்திய அரசியலில் வலம் வந்தவர், கட்சியின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை கட்சியை வளர்த்தவர்.  பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க இவரே காரணம் என்று சொல்லும் அளவுக்கு செயல்பட்டவர் அத்வானி என்பதுமிகையில்லை!

         இன்று  எதிர்க்கும் மோடி போட்டியாக வருவதற்கு வழியேற்படுத்தி தந்தவர், அத்வானிதான்.!  குஜராத்தில் நடந்த கலவரம் காரணமாக மோடி  முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது மோடியை  பாதுகாத்தவர்.

         அத்வானி அன்று செய்த தவறுக்கு இன்று வருந்துவது தெரிகிறது."வினை விதைத்தவன்"  அதனை அறுப்பதுதானே முறை?   இதனை உணர்ந்தே,  பீஷ்மரைப் போல அம்புபடுக்கையில் தான் இருப்பதாக அத்வானி குறிபிடுகிறார்!

          அத்வானி இதனை விரக்தியில்குறிப்பிட்டு இருந்தாலும் கூட இந்த நிலை அவருக்கு ஏற்பட்டு உள்ளது சரியென்றே படுகிறது!

       மகாபார…

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்?

Image
" பாரத மாதாக்கி ஜே,'",  "ஓம்.. ஓம்..  காளி' " "'ஜெய் ஜெய் காளி'"  என்று  ஓங்காரமிடும் இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் திருமண உதவித் திட்டத்தில் திருமணம் செய்ய முன்வந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தி,தனது கொடூர வக்கிரத்தை காட்டி,பெண்களை பி.ஜே.பி-மதிக்கும் லட்சணத்தை பறை சாற்றியுள்ளது!

        இந்துத்துவ  சிந்தனை கொண்ட எந்த அமைப்புகளும்,நபர்களும்  ஆண்களுக்கு  நிகராக பெண்களை மதிப்பதில்லை,  என்பது நிதரிசனம்!   இந்துத்துவ சிந்தனையை  அடித்தளமாக கொண்ட அதன் சாத்திரங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவைகள்  தொன்றுதொட்டு பெண்களை கேவலப்படுத்தி வருகின்றன! . அவற்றை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்ளும் இந்துமனுதர்ம வாதிகளிடம்  பெண்ணுரிமை கேட்பதும், எதிர்பார்ப்பதும்  இயலாத  காரியமாகும்!

          ஆற்றுக்கும்,மாட்டுக்கும்  பெயர்  வைத்து பெண்களைப்  போற்றுவதாக கூறும் காவிக்கும்பல்கள்  நிஜ வாழ்க்கையில்  பெண்களை மதிப்பதில்லை! பெண்களை  .இழிவுபடுத்தி,அடிமைப்படுத்தி, தனது வக்கிரங்களைத் தீர்த்துக்கொண்டு, அவர்கள…

அத்வானியின் நிறைவேறாத ஆசை..!

Image
இந்தியாவின் பிரதமர் கனவு  தேசிய கட்சித் தலைவர்கள் பலரின் ஆசையாகும்!பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும் இதற்கு விதிவிலக்கு இல்லை!

     அத்வானியின் பிரதமர் கனவு இன்று நேற்று ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சி  வீழ்ச்சி அடைந்து, காங்கிரஸ் அல்லாத கட்சியான,ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனபோது பலருக்கும் ஏற்பட்டது போல அத்வானிக்கும் பிரதமர் பதவி மீது அதீத ஆசை ஏற்பட்டு இருக்க கூடும்!

        பிரதமர் பதவி மீதான  அதீத ஆசையின் காரணமாக, அத்வானி   வாஜ்பாயைக் காட்டிலும் தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டார்.

         வாஜ்பாயை  மிதவாதியாக காட்டப்பட்டு,அத்வானி தீவிர இந்துத்துவ அரசியல் வாதியாக உருவகிக்கப் பட்டது  எல்லாம் நடந்தது!

      இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ரத யாத்திரை நடத்தியும், தவிர இந்துத்துவ அரசியல் செய்தும் கூட  அத்வானியால் பிரதமராக முடிய வில்லை ! வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

    இந்தமத தீவிர பற்றாளராக காட்டப்படும் அத்வானி, இந்துமத மனுதர்ம, வருணாசிரப்படி பிராமணர் இல்லை என்பது பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

     அப்போது,வாஜ்பாய்,இ…

தீவிரவாதத்துக்கு தீர்வு!

Image
தேசிய புலனாய்வு அமைப்புகள்  தீவிர வாத செயல்கள் குறித்த உளவுத் தகவல்களை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரி உள்ளார்.

          அவரது கோரிக்கை வரவேற்கதக்கது.நியாயமானதும் கூட.!  ஏனெனில் உளவுத்தகவல்களை மத்திய அரசும், மாநில அரசும் பகிந்துகொண்டு, ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் சமுக விரோத செயல்களை தடுக்க முடியும்.

        தேசிய புலனாய்வு அமைப்புகள் எந்த தகவல்களையும் மாநிலங்களுக்கு  கொடுக்காமல் மாநில அரசின் உதவியை, ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது! மத்திய அரசின்  புலனாய்வு  அமைப்புகள்  மாநில அரசுக்கு தகவல்கள் ஏதும் தராமல், தன்னிச்சையாக செயல்படுவதால் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

       சமூக விரோத செயல்களை  தடுக்க முடியாமல் உயிர் சேதம்,பொருளாதார விரயம், ஏற்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது ! அரசுக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது!

       மாநில அரசுக்கு உளவுத்தகவல்கள் முன்கூட்டியே தெரியவந்தால். தீவிரவாத,சமூக விரோத  செயல்கள் விரைவாக தடுக்க வழி ஏற்படும். ! 

       நாட்டில் அமைதியும், முனேற்றமும் ஏற்பட ஒன்றுபட்ட  விசாரணையும்   ஒன்றான செய…

கேள்விக்குறியாகும் கூட்டாட்சி..

இந்தியாவின் பாதுகாப்பு,அயலுறவு கொள்கைகள்,ராணுவம், போன்றவற்றை மத்திய  அரசும், உள்ளாட்சி நிர்வாகம்,திட்டப் பணிகள்,விவசாயம் உள்ளிட்டவைகள்  மாநில அரசும் மேற்கொள்ளும் வகையில் நமது நாடு இயங்கி வருகிறது!

      மத்திய அரசு சமீப காலமாகஅமல்படுத்தி வரும் சட்ட மசோதாக்களைப் பார்க்கும்போது, மத்தியில் கூட்டாட்சி.,மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவம்  இனிமேல் நீடிக்காது  எனத் தொண்டுர்கிறது!

      இதுவரை மாநிலங்களுக்கு  இருந்துவந்த உரிமைகளை  பறிக்கும் விதத்தில் மாநிலஅரசின்  அதிகாரத்தை குறைக்கும் செயலைகளை   மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது!

     அதாவது ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை மத்தியில் குவித்து, சர்வ அதிகாரம் உள்ள அரசாக,   முயன்று வருவதாக தோன்றுகிறது!

மத்திய அரசின்  இத்தகைய விபரீத செயல்கள்   இந்திய தேசத்துக்கு மிகபெரிய கேட்டினை ஏற்படுத்தும் எனக் கருத வேண்டியுள்ளது!  .

      தேசத்தை துண்டாடவும், தேசப் பிரிவினைக்கு மாநிலங்களைத் தூண்டும் வகையிலும் மத்திய  அரசு  கொண்டு வரும் சட்ட மசோதாக்கள்  உள்ளன. அவ்வாறான சட்ட மசோதாக்களை  அரசு  முதலில்  மக்கள் பார்வைக்கு வைத்து,  பொது விவாதம் ந…

தகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.

மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளும் தகவல் வழங்கவேண்டும் என்று அறிவித்து இருக்கிறது ! பொதுவாக வரவேற்கத்தக்க செயலாக இது தெரிந்தாலும், இதனை அதாவது சட்டத்தை செயல் படுத்துவது  நடைமுறையில்  சாத்தியமில்லை என்பது உண்மையாகும்!

      அரசு நிறுவனங்கள், 30-நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. சட்டப்படி  30- நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் மேல் அதிகாரிக்கு முறையீடு செய்யவும், அவரது தலையீட்டுக்கு பிறகும் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால்,  ஆணையத்துக்கு  மேல் முறையீடு செய்தால் தகவல் ஆணையம் நேரடி விசாரணைநடத்தும்!

      நியாமான காரணங்கள் இன்றி,  தகவல் வழங்குவது மறுக்கப்பட்டது தெரிய வந்தால்  தகவல் வழங்க மறுத்தும்,காலதாமதம் செய்தும் வந்த பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டமீறலுக்காக  நடவடிக்கை எடுக்கப்படும் . தொடர்புடைய  பொதுதகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறது!

       ஆனால் நடைமுறையில் பொதுதகவல் அலுவலர்கள் குறித்த காலத்தில் தகவல் வழங்குவதில்லை! வழங்கும் தகவல்களும்கேட்கும்  தகவல்களாக இருப்பது இல்லை!  இதுபற்றி  முறையீடு செய்தாலும் முற…