கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்..


     " தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல்" என்பதுபோல  பாரதிய ஜனதா கட்சியைவிட  காங்கிரஸ் கட்சி  பரவாயில்லை என்று  கர்நாடகா  மக்கள் மனநிலைஇருந்ததை  தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன !  

     தேர்தல் முடிவுகளில் இருந்து பொதுவாக ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்படும்  அதிருப்பதி காரணமாக  மாற்று கட்சிக்கு வாக்களிக்கும்  மனநிலையும், முந்தைய கட்சியே பரவாயில்லை என்று நினைக்கும் மக்களின்  மனபோக்கை பிரதிபலிக்கிறது!

       கர்நாடகா தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு அக்கட்சியினரின்  பதவி வெறியும், முறைகேடுகளும்,ஊழல்களும், எடியூரப்பாவின் குறுக்கீடுகளும்  முக்கிய காரணங்களாகும்!

       இவைகளைத்தவிர, தேர்தலில் புழங்கும்  பணமும்,முதலீடும்  வழக்கமாக  தேர்தலை  நிர்ணயிக்கும் சக்தியாக  விளங்குவதை கட்டுகிறது!

       தேர்தலில் 4,36,14.881 வாக்காளர்களுக்கு 52,034 வாக்கு மையங்களில் 79,364 மின்னணு வாக்கு எந்திரங்களைக் கொண்டு  நடத்தப்பட்ட தேர்தலில்170 பெண் வேட்பாளர்களுடன்,மொத்தம்  2,948 வேட்பாளர்கள் 224 தொகுதிகளுக்கு போட்டியிட்டனர்!

    போட்டி இட்ட வேட்பாளர்களில் 681 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!  . 220 பேர்கள்  குற்றப்பின்னணி கொண்டவர்கள்!  இவர்களில், 13 பேர்கள் கொலை முயற்சி வழக்குகளிலும் ,2 பேர்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் தொடர்புடையவர்கள்!

        ஜனநாயகத்தில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இவர்களையும் சேர்த்து, நடத்தப்பட்ட தேர்தலில்  வழக்கம் போல பணநாயகம் வென்று,  ஜனநாயகமும் மக்களும்  தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதையே  கர்நாடகா சட்டமன்ற தேர்தலும்  நமக்கு விளக்குகிறது!   

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?